ஏன் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது?

இந்தியாவின் முதல் பிரதமர், குழந்தைகளின் மீது தனிப்பெரும் அன்பு வைத்திருந்ததனால் குழந்தைகளால் அன்போடு மாமா என அழைக்கப்பட்ட ஜவர்களால் நேரு அவர்களை நினைவு கூறும் விதமாகவும் தான் ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் தின விழாவாக கொண்டாடுகிறோம்.
ஏன் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது

இந்தியாவின் முதல் பிரதமர், குழந்தைகளின் மீது தனிப்பெரும் அன்பு வைத்திருந்ததனால் குழந்தைகளால் அன்போடு மாமா என அழைக்கப்பட்ட ஜவர்களால் நேரு அவர்களை நினைவு கூறும் விதமாகவும் தான் ஆண்டுதோறும் நவம்பர் 14 ஆம் நாளை குழந்தைகள் தின விழாவாக கொண்டாடுகிறோம். இன்று நாம் எப்படி வேண்டுமானாலும் வரலாற்றை நமக்கு ஏற்றவாறு திரித்து எழுதிக்கொள்ளலாம் ஆனால் ஆங்கிலேயர்கள் விட்டுச்சென்ற ஒன்றுமில்லாத இந்தியாவை கட்டியெழுப்பியதில் நேரு மிக முக்கியமானவர்.

https://youtu.be/0XIpCkFinJg

மிகவும் செல்வ செழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சுதந்திரப்போராட்டத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு பங்காற்றி கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த திரு ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்று தொடர்ந்து 17 ஆண்டுகள் கடமையாற்றினார். இந்த காலகட்டங்கள் தான் அனைத்து துறைகளிலும் இந்தியா தனது அடித்தளத்தை வெற்றிகரமாக அமைத்த தருணம் எனலாம். 

 

 

 

சில தினங்களுக்கு முன்னதாக தமிழக அரசு சார்பில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது. அதன்படி 6 மருத்துவக்கல்லூரிகள் அமைக்க ஒவ்வொரு கல்லூரிக்கும் 100 கோடிகள் ஒதுக்கப்படுகிறது என்ற செய்திதான் அது. ஆனால் உங்களுக்கு தெரியுமா? சுதந்திர இந்தியாவின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதல் பட்ஜெட் தொகை ரூ 178.77 கோடி தான். ஒட்டுமொத்தமாக நேரு அவர்களது ஆட்சியில் சமர்ப்பிக்கப்பட்ட பட்ஜெட் தொகையே 12151 கோடி தான். ஆனால் அண்மையில் 2019 – 20 ஆண்டிற்கான பட்ஜெட் தொகை ரூ 27 லட்சத்து 86 ஆயிரத்து 349 கோடி.  இவ்வளவு தூரம் நாம் கடந்து வந்திருக்கிறோம் என்றால் முன்னால் ஆட்சியாளர்கள் குறிப்பாக நேருவின் ஆட்சி எவ்வளவு ஆக்கப்பூர்வமானதாக இருந்திருக்கும் என தெரியவருகிறது. 

 

நேரு அவர்கள் குழந்தைகளின் மீது பெரும் அக்கறை கொண்டிருந்தார். அவர்கள்தான் எதிர்கால இந்தியாவை கட்டமைக்கப்போகிறார்கள். ஆகவே அவர்களுக்கு சிறந்த கல்வி மற்றும் ஊட்டச்சத்து மிக்க உணவு இவற்றை வழங்குவதன் மூலமாக வலிமையான எதிர்கால இந்தியாவை உருவாக்கி விட முடியும் என நம்பினார். நாம் சுதந்திரம் அடைந்திருந்தபோது பசி பஞ்சத்தினால் ஏராளமான இறப்புகள் ஏற்பட்டன. முதலில் சரி செய்திட வேண்டிய பிரச்சனை உணவு தன்னிறைவு தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அப்போதைய காலகட்டத்திலும் கூட நேரு அவர்கள் கல்வியில் கரை சேர்க்க முயன்றுகொண்டு இருந்தார். 

 

இவரது கடும் முயற்சியினால் பஞ்சாப் பல்கலைக்கழகம், ராஜஸ்தான் பல்கலைக்கழகம் , குஜராத் பல்கலைக்கழகம், பிஹார் பல்கலைக்கழகம், சர்தார் படேல் பல்கலைக்கழகம், ஜாதவ்ப்பூர் பல்கலைக்கழகம் போன்றவை உருவாக்கப்பட்டன. நேருவின் ஆட்சிக்காலத்தில் தான் இன்று முன்னனி கல்வி நிறுவனமாக திகழ்கின்ற பம்பாய் , சென்னை,கான்பூர், டெல்லி ஐஐடி துவங்கப்பட்டது. 

 

நேருஅவர்கள் இவ்வாறு கூறுவார், 

 

எதிர்காலம் என்பது அறிவினுடையது, அறிவியலுடன் நட்புறவு கொள்பவர்களுடையது. 

 

கல்வி என்பது மனிதர்களை எல்லா துயரங்களில் இருந்தும் விடுவிக்க வேண்டியதே அன்றி கூண்டுக்குள் போட்டு அடைத்து வைப்பதற்க்கானது அல்ல. 

 

நேரு அவர்களின் பிறந்தநாளை ஆண்டுதோறும் கொண்டாடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், அந்த நாளில் குழந்தைகள் தான் நம் நாட்டின் எதிர்காலம் என்பதனை ஆட்சியாளர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதனை நினைவில் கொண்டு செயலாற்றுவதே முக்கியம். அதையே நேரு அவர்களும் விரும்புவார். 

 

வணக்கம்

Join with me :

எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/BpBkoxYbAdXLPCC0kZ4Apg






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *