கட்சிகளால் முடக்கப்படும் சராசரி மனிதனின் கருத்துக்கள்

 


 

மதுரை தோப்பூரில் கிட்டத்தட்ட 1264 கோடி மதிப்பில் கட்டப்பட இருக்கும் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியை திறக்க பிரதமர் மோடி அவர்கள் இன்று (ஜனவரி 27 , 2019 ) மதுரை வருகின்றார் . தமிழகத்திற்கு வருகின்ற அவரை வரவேற்று பாஜவினரும் எதிர்ப்பு தெரிவித்து மற்ற அரசியல் கட்சியினரும் களத்திலும் சமூக வலைதளங்களிலும் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள் . இவர்களின் இந்த பிரசாரத்தில் “ஒரு சராசரி மனிதனின் கருத்துக்கள் கடலில் கலக்கின்ற மழைத்துளி போல அடையாளம் தெரியாமல் முடக்கப்படுகின்றன “.

 

 

 

நாம் இந்தப்பதிவில் எப்படி  அரசியல்கட்சிகள் சமூகவலைதளங்களை ஆட்கொண்டு தனிமனிதனின் கருத்துக்களை முடக்குகின்றன என்பதனை பார்ப்போம் .


தற்போதைய நிலவரப்படி (Jan 27, 11AM)

 

 

#GoBackModi : 312K Tweets

#MaduraiThanksModi : 210K Tweets

#TNWelcomesModi : 86.2K Tweets

#GoBackSadistModi : 42.7K Tweets

என்ற அளவில் ட்விட்டரில் மட்டும் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன .

 

ட்விட்டரில் எவை ட்ரெண்ட் ஆகிறதோ  அவை உலக அளவில் “தமிழக மக்கள் மோடியின் வருகையை இப்படிதான் பார்க்கிறார்கள் ” என எண்ணுவார்கள் .

 

ஆனால் இத்தனை ட்விட்டுகளில் எத்தனை தமிழக மக்களால் பதிவிடப்பது ? எத்தனை சாதாரண மக்களால் பதிவிடப்பட்டது ?

நீங்கள் ஏதேனும் பதிவிட்டீர்களா ?

 





தற்போதைய நிலையில் facebook மற்றும் ட்விட்டர் ஆகிய இரண்டு தளங்களில் தான் அரசியல் கருத்துக்கள் அதிகம் பகிரப்படுகின்றன.  ஒருநாளில் குறிப்பிட்ட நேரத்தை சமூக வலைத்தளங்களை பயன்படுத்திட நாம் பழகிவிட்டோம் . இதனை பயன்படுத்திக்கொள்ள நினைக்கும் அரசியல்கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக கருத்துக்களை பகிர்கின்றன . இந்தநிலை வரை ஆபத்து இல்லாமல் தான் இருந்துவந்தது.காரணம் அவை பிரச்சாரங்களை மட்டுமே செய்துவந்தன .

 


தற்போது புதிய சூழல் ஒன்று உருவாகியிருக்கிறது , அதன்படி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகின்ற கருத்துக்கள் அதிக முக்கியத்துவம் பெறுபவையாகவும் அதுவே தான் அப்பகுதி மக்களின் கருத்தாகவும்  பார்க்கப்படுகின்றன . இதனை பயன்படுத்திக்கொள்ள அரசியல்கட்சிகள் பெருமளவில் முதலீடு செய்து சமூக வலைதளங்களை கட்சி பிரச்சார கூடமாக மாற்றி வைத்திருக்கிறார்கள் .

உதாரணத்திற்கு மதுரை வருகின்ற மோடி அவர்களை வரவேற்று #TNWelcomesModi எனவும்  எதிர்த்து #GoBackModi எனவும் ட்விட்டுகள் பறக்கின்றன . அந்த ட்விட்டுகளில் பல அரசியல்கட்சிகளால் திட்டமிட்டு பரப்பப்படுபவை .


 

முடக்கப்படும் சராசரி மனிதனின் கருத்துக்கள்


உதாரணத்திற்கு , மோடி அவர்களின் வருகையை தமிழக மக்கள் உண்மையில் எப்படி பார்க்க்கிறார்கள்  என்பதனை எவரேனும் சொல்ல முடியுமா ? முடியவே முடியாது . 100 விழுக்காடு பதிவுகளில் சராசரி மக்களின் பதிவு வெறும் 10 சதவிகிதத்திற்கும் குறைவாகத்தான் இருக்கும் . மற்றவை அனைத்துமே எதிர்க்கும் அல்லது ஆதரிக்கும் அரசியல்கட்சிகளின் தொழில்நுட்ப பிரிவுகளால் அல்லது நபர்களால் திட்டமிட்டு பரப்பப்படுகின்றன .



அப்படி பரப்பப்படும் விசயங்களில் எது டிரெண்ட் ஆகிறதோ அதை அப்பகுதி மக்கள் செய்துவிட்டதாக கட்டுக்கதை கிளப்பிவிடப்படுகிறது . ஆனால் உண்மை என்னவெனில் எங்கோ கணிணியில் வித்தைகாட்டிக்கொண்டு இருக்கும் நபர்கள் தான் அதனை தீர்மானிக்கிறார்கள்.

 


மோடி அவர்களின் வருகைக்காக நடக்கும் இந்த மோதல் என்பது நம்மை சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது . மக்கள் இப்படித்தான் நினைக்கிறார்கள் என்பதனை அவர்களே தீர்மானித்துக்கொள்கிறார்கள் . உருட்டப்படுவது மட்டும் நம் தலைகளாக இருக்கின்றன .

சமூகவலைதளங்கள் சாதாரண மக்களின் கருத்தை வெளிப்படுத்துவதற்கு உரிய இடமாக இருந்தது மாறி , அரசியல்கட்சிகளின் தொழில்நுட்ப ஆளுமையே காட்டுகின்ற இடமாக மாறிவிட்டது . இது தவிர்க்கப்பட வேண்டியது .


 

பாமரன் கருத்து

Share with your friends !

One thought on “கட்சிகளால் முடக்கப்படும் சராசரி மனிதனின் கருத்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *