மகள்களுக்கு விடுக்கப்படும் ஆபாச மிரட்டல்கள் : தண்டிக்கப்படுவார்களா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றபோது தோனியின் மகளுக்கு ஆபாச மிரட்டல்கள் வந்தன. தற்போது விஜய் சேதுபதியின் மகளுக்கும் அதே போன்றதொரு ஆபாச மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இப்படி குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மிரட்டல்கள் விடுப்பது முதல் முறையல்ல.

800 திரைப்படத்தில் நடிக்க விஜய் சேதுபதி அவர்கள் ஒப்பந்தம் ஆகியிருந்தார். தமிழக மக்களிடையே எழுந்த அதிருப்தி மற்றும் பல்வேறு முக்கியஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்போது அந்தத் திரைப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார். முத்தையா முரளிதரன் அவர்கள் விஜய் சேதுபதி 800 திரைப்படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்று ‘நன்றி வணக்கம்’ என ட்வீட் செய்திருந்தார் விஜய் சேதுபதி.

இதற்கிடையில் விஜய் சேதுபதி மகளின் [minor] புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு ஆபாசமான கருத்துக்களை பதிவிட்டு இருந்தார் ஒரு ட்விட்டர் பயனாளர். @ItsRithikRajh என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து தான் அந்த ட்வீட் பதிவிடப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். அதேபோல சிலர் சென்னை காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர். பல்வேறு நபர்கள் அந்த ட்வீட்க்கு ரிப்போர்ட் செய்தபடியால் அந்த ட்வீட் மற்றும் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Women's sharing their past harassment experiences in twitter #MeToo Hastag

சென்னை காவல்துறையும் இந்த விசயத்தை வழக்காக பதிவு செய்து தவறாக கருத்து தெரிவித்த நபரை தேடி வருகிறார்கள். விரைவில் அந்த நபர் பிடிபடலாம் என்று நம்புகிறோம்.

ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் போலியான கணக்குகளை துவங்குவது என்பது எளிதான விசயம். இதனைப் பயன்படுத்தி பலர் போலியான கணக்குகளை துவங்கி ஆபாசமான கருத்துக்களை தெரிவித்து வருவது வாடிக்கையாகிவிட்டது. சிலர் இப்படித்தான் இயங்குவார்கள் என்ற எண்ணத்தில் அவற்றை கடந்து செல்லும் காரணத்தினால் தான் விஜய் சேதுபதி மகள் குறித்து பதிவிட்டது போல பயமில்லாமல் பதிவிடுகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோற்றபோது தோனியின் மகளுக்கு ஆபாச மிரட்டல்கள் வந்தன என்பதும் இதன் ஒருவகை தான்.

ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்டவை இன்று அத்தியாவசிய பொருள் போல மாறிவிட்டது. ஆகவே அந்த தளங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய கடமை அந்த நிறுவனங்களுக்கும் உண்டு, காவல்துறைக்கும் உண்டு. இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை தண்டிப்பதோடு ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களை போலியான கணக்குகளை நீக்குமாறு பணிக்க வேண்டும்.






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *