620கிலோமீட்டர் பெண்கள் சுவர் | வனிதா மதில் | நம்பிக்கையின் கீற்று


Highlights

  • பாலின சமத்துவம் வேண்டி “வனிதா மதில்” என்ற பெயரில் மனித சங்கிலி நடைபெற்றது
  • 620 கிலோமீட்டர் நீளமுள்ள மனித சங்கிலி பெண்களாலேயே உருவானது.
  • சபரிமலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இந்த பேரணி இருக்கும்
  • கேரளாவில் வடக்கு பகுதியான காசர்கோடு முதல் தெற்கு பகுதியான திருவனந்தபுரம் வரைமுற்றிலும் பெண்களால் ஆன வனிதா மதில் சுவர் ஏற்படுத்தப்பட்டது

 


சபரிமலைக்குள் பெண்கள் அனுமதி | எதிர்த்து போராட்டம்

 

சபரிமலைக்குள் பெண்களை அனுமதிக்கலாமா என கோரி தொடரப்பட்ட வழக்கு பல ஆண்டுகளை கடந்து 2018 ஆம் ஆண்டில் ” பெண்களை சபரிமலைக்குள் அனுமதிக்கலாம்” என்ற உத்தரவோடு நிறைவுபெற்றது . இந்த உத்தரவை செயல்படுத்த போவதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் முடிவு செய்ய எதிர்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் மற்றும் பல இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்தன.

பல பெண்கள் கோவில் வளாகம் வரை சென்று போராட்டக்காரர்களின் ஆர்பாட்டத்தால் திரும்பி வந்ததை அனைவரும் அறிவோம். மேலும் பல்லாயிரக்கணக்கான பெண்களை திரட்டி போராட்டம் நடத்தி பெண்கள் உள்ளே நுழைவதற்கு பெண்களே எதிர்க்கிறார்கள் என்பது போன்ற தோற்றமும் ஏற்படுத்தப்பட்டது.

 


வனிதா மதில்

 

எத்தனை போராட்டங்கள் நடைபெற்றாலும் பினராயி விஜயன் தலைமையிலான அரசு பின்வாங்கப்போவதில்லை என அறிவித்தது. அதோடு மட்டுமல்லால் பெண்களை உள்ளே நுழைய அனுமதிக்க கூடாது என்ற பிற்போக்குவாதிகளின் போராட்டங்களுக்கு எதிர் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டார். இதன் பின்னர் பல்வேறு சமூக அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், இந்து அமைப்புகள், அரசியல் கட்சிகள் என பல தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தி மிகப்பெரிய பெண்களால் ஆன மனித சுவரை உருவாக்கிட திட்டமிட்டனர். அதற்க்கு பெயர் தான் “வனிதா மதில்”

 


620 கிலோமீட்டர் நீளமான வனிதா மதில் நம்பிக்கையின் கீற்று

 

சிலர் இந்த வனிதா மதில் தோல்வியடைந்துவிட்டதாக கூறுகிறார்கள். ஒரு பெண் தனித்து தன் உரிமைக்காக நின்று இருந்தால் கூட இந்த போராட்டம் வெற்றியே. இதில் தோல்வி எங்கிருந்து வந்தது என தெரியவில்லை

 

 

கேரளாவில் வடக்கு பகுதியான காசர்கோடு முதல் தெற்கு பகுதியான திருவனந்தபுரம் வரைமுற்றிலும் பெண்களால் ஆன வனிதா மதில் சுவர் ஏற்படுத்தப்பட்டது. ஏற்கனவே மற்ற அமைப்புகள் தீர்ப்புக்கு எதிராக நடத்திய பேரணிகளை விட இது மிகப்பெரிய பேரணியாக அமைந்திருக்கும்.

இந்த வனிதா மதில், பெண்கள் சபரிமலைக்குள் செல்ல விருப்பப்படுகிறார்கள் என்பதனை மிகத்தெளிவாக விளக்கியுள்ளது. இதன் மூலமாக பெண்களை பெண்களுக்கு எதிராக களமிறக்கும் நபர்களின் முயற்சி பெரும் தோல்வி அடையும். மேலும் இவ்வளவு பெண்கள் பாலின பாகுபாட்டிற்கு எதிராக ஒற்றுமையோடு களமிறங்கி இருக்குகிறார்கள் என்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.

பெண்கள் சமத்துவத்தில் வனிதா மதில் நிச்சயமாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வனிதா மதில் எதிர்கால பெண்களின் உரிமைகளுக்கான நம்பிக்கை கீற்றாக அமையும்.


பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *