“நமக்கு தேவையா இதெல்லாம்” – மணியனும் மங்குனியும்
மணியன் : என்ன மங்குணி யோசனை பலமா இருக்கே , என்ன விசயம்
மங்குனி : அது ஒண்ணுமில்ல அய்யா , வைரமுத்து சின்மயி கிட்ட தப்பா நடந்துக்கிட்டாராம்ல , அந்த புள்ள சொல்றதுலயும் உண்மை இருக்கலாம்னு சொல்லிக்கிறாங்களே
மணியன் : இருக்கலாம் , இருக்கலாம் . அதுக்கு நீ என்ன யோசனை செஞ்சுகிட்டு இருக்க …
மங்குனி : இல்ல , இப்புடி பண்ணிருக்காரே மனுசன்னு டீ கடைல கோவாலுகிட்ட சொன்னேன் . அவன் இதெல்லாம் பொய்யி , வைரமுத்து தப்பு பண்ணிருந்தா அப்பவே சொல்லிருக்கலாம்ல ஏன் சொல்லல , எல்லாம் அரசியல்னு சொன்னான் . அதான் ஒன்னும் புரியாம யோசிச்சுட்டு இருக்கேன் .
மணியன் : நீ என்ன சொன்ன ?
மங்குனி : எத்தன வருசம் ஆயிருந்தாலும் தப்பு தப்புதானேனு சொன்னேன்
மணியன் : அதுக்கு கோவாலு என்ன சொன்னான்
மங்குனி : அப்போ பாட சான்ஸ் போயிரும்னு அமைதியா இருந்துட்டு இப்போ சொன்னா சரியா, வைரமுத்து அப்புடி நடந்துக்கலைனு அவரு கூட அந்த டூர்ல இருந்தவங்க கூட சொல்லிட்டாங்க, சின்மயி அரசியல்வாதிங்க கூட சேந்துக்கிட்டு தான் இப்புடி பண்ணுதாம் னு சொல்லுறான் .
மணியன் : இதுக்குதான் இவ்வளவு யோசனையா ? நான் ஒரு கேள்வி கேக்குறேன் அத நீ நாளைக்கி கோவாலுகிட்ட கேளு , வாய மூடிப்பான்.
மங்குனி : நெசமாவா சொல்லுறிங்க , கோவாலு வாய மூடிக்கிட்டான்னா சக்கரைதான் உங்க வாய்க்கு
மணியன் : சக்கரையெல்லாம் வேணாம் . சின்மயி சொன்னது பொய்யினா எதுக்கு வைரமுத்து இன்னும் வழக்கு போடல . சின்மயிக்கு நீதிமன்றம் தண்டணை கொடுத்திருக்குமே னு கேளு ..
மங்குனி : ஆமாமா இப்போதான் நினைப்பு வருது , அவருகூட வலுவான ஆதராமெல்லாம் வச்சுருக்கதா சொன்னாரே
மணியன் : உனக்கே இவ்வளவு தெரிஞ்சுருக்கே , அவ்வளவுதான் நாளைக்கு கோவாலு செத்தான் போ
மங்குனி : ஆமா பாருங்க ….
மணியன் : மங்குனி ஒண்ணுமட்டும் நியாபகம் வச்சுக்கோ , வைரமுத்து சின்மயி பிரச்சனை நம்மள போல சாதாரன சனங்களுக்கு தேவை இல்லாத ஒண்ணு . பெட்ரோல் விலை ஏறி கெடக்கு , படிச்ச நம்ம புள்ளைக்கு உத்தியோகம் கிடைக்கல , பிரசிடண்ட் தேர்தல் நடத்தல …இன்னும் எத்தனையோ இருக்கு ….அத மனசுல வச்சுக்கோ
மங்குனி : அட ஆமா அத நான் மறந்தே போயிட்டேன் . கோவாலு கெடக்குறான் கோவாலு . நாம நம்ம பிரச்சனையை பத்தி பேசினாத்தான் நமக்கு பொழப்புக்கு ஆகும் .
மணியன் : சரியா சொன்ன போ
Pamaran Karuthu