Apple ஐபோன் இந்தியாவில் தடை செய்யப்படுமா?

Iphone and TRAI Fight for DND App Permission | Possibility for Deactivation

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI க்கும் உலகின் முன்னனி செல்போன் நிறுவனமான Apple க்கும் இடையே DND Application என்கிற அரசு ஆப் ஒன்றினை அனுமதிப்பது தொடர்பாக கடுமையான பிரச்சனை நடைபெற்று வருகின்றது . இதனால் தான் ஐபோன் இந்தியாவில் தடைசெய்யப்படுமா என்கிற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது .

 

TRAI இன் புதிய விதி ?

 

 

TRAI தற்போது புதிய விதியொன்றினை அறிவித்துள்ளது . Telecom Commercial Communication Customer Preference Regulation எனப்படும் இந்த விதியில் தேவையில்லாமல் வருகின்ற அழைப்புகள் (Spam Calls) குறித்தும் குறுந்தகவல்கள் (Unwanted Messages) குறித்தும் நேரடியாக புகார் அளிக்கும் வசதி கொண்ட இந்திய அரசின்  DND 2 . 0 என்கிற ஆப்பினை அனைத்து மொபைல் நிறுவனங்களும் அனுமதிக்க வேண்டும் . இல்லையெனில் அந்த மொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் (derecognise) தடைசெய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

DND 2.0 ஆப்பினை அனுமதிக்காத ஆப்பிள் நிறுவனம்

 

ஆரம்பகாலத்தில் இருந்தே thirdparty ஆப்பினை ஆப்பிள் நிறுவனம் அனுமதிப்பது கிடையாது . பயனாளர்களின் தகவல் பாதுகாப்பில் முக்கியத்துவம் கொண்டு இவ்வாறு ஆப்பிள் நிறுவனம் செயல்படுகிறது .

 

குறிப்பாக இந்திய அரசின் DND 2.0 ஆப்பானது வாடிக்கையாளர்களின் அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்களை access செய்யும்படி  அமைக்கப்பட்டு இருப்பதனால் ஆப்பிள் நிறுவன வாடிக்களர்களின் தகவல்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் வரும் என கருதி ஆப்பை தனது Appstore இல் அனுமதிக்க மறுக்கிறது .

 

வழக்கம்போல எவ்வித எதிர்ப்பும் இன்றி  ஆப்பினை Android அனுமதித்துள்ளது

 

Apple நிறுவனத்தின் கோரிக்கை

 

ஆப்பிள் நிறுவனமானது DND 2.0 ஆப்பினை தங்களது App Store விதிமுறைக்கு உட்பட்டு தயாரிக்குமாறு கேட்கிறது . ஆனால் TRAI தங்களது ஆப்பினை அனுமதிக்காத மொபைல்களை தடை செய்வோம் என அறிவித்துள்ளது .

 

Apple Phones எவ்வாறு தடை செய்யப்படும் ?

 

 ஆப்பிள் நிறுவனம் TRAI விதிமுறைகளுக்கு உட்படவில்லையெனில் அனைத்து Apple போன்களும் (Apple Mobile , Watch, iPad etc)  “derecognises” செய்யப்படும் .

 

TRAI and Apple Fight for DND App Permission
TRAI and Apple Fight for DND App Permission

 

அவ்வாறு செய்யப்பட்டால் Airtel , Vodafone , BSNL , Jio போன்ற அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் TRAI ஒரு உத்தரவினை போடும் . அதன்படி இனி Apple நிறுவன மொபைல்களுக்கு தொலைதொடர்பு சேவையினை வழங்கிட கூடாது என்று .

 

அவ்வாறு உத்தரவிடும் பட்சத்தில் Apple மொபைலின் சேவை முழுவதுமாக நிறுத்தப்படும் .

 

Apple phone உள்ளிட்டவற்றை பயன்படுத்தலாம் ஆனால் அதில் SIM card பயன்படுத்திட முடியாது .

 

அவ்வளவு எளிமையாக Apple Phone களை தடை செய்துவிட முடியுமா ?

 

இந்தியாவில் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கானோர் Apple நிறுவன சாதனங்களை பயன்படுத்தி வருகின்றனர் . அப்படிப்பட்ட சூழ்நிலையில் திடீரென்று தடையினை TRAI அறிவிக்க இயலாது . ஏற்கனவே இந்த பிரச்சனை குறித்து Apple நிறுவன அதிகாரிகளுக்கும் TRAI க்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது .

 

 

தனது அடுத்த இயங்குதளமான IOS 12 இல் தேவையில்லாத அழைப்புகள் குறித்தும் குறுந்தகவல்கள் குறித்தும் புகார் அளித்திட ஏதுவான வசதிகள் செய்யப்பட்டு இருப்பதனால் தனியாக அரசின் ஆப் தேவையில்லை என கருதுகிறது Apple நிறுவனம்.

 

ஒருவேளை இருவருக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்படவில்லையெனில் நிச்சயமாக இந்த பிரச்சனை நீதிமன்றத்திற்கு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமிருக்கின்றன .

 

தற்போதைய நிலையில் apple நிறுவன போன்களை பயன்படுத்துபவர்களுக்கு எந்தவித அச்சமும் தேவையில்லை . அதே சமயம் நாளை என்ன நடக்கும் என்பதனையும் நம்மால் யூகிக்க முடியாது .

 

இந்தியாவை பொறுத்தவரை TRAI தான் தொலைதொடர்பு சம்பந்தபட்ட முடிவுகளை எடுக்க அதிகாரமிக்க அமைப்பு . நீதிமன்றமும் அதற்கு ஆதரவளிக்க அதிக வாய்ப்பிருக்கின்றது .

 

புதிதாக ஆப்பிள் நிறுவன சாதனங்களை வாங்கிட நினைப்பவர்கள் இந்த பிரச்சனை முடிகின்றவரை காத்திருப்பது சிறந்தது .

 

பாமரன் கருத்து

 

Share with your friends !