2018 TOP 5 android Applications in Tamil | டாப் 5 மொபைல் ஆப்

Google Playstore இல் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆப்கள் அப்லோட் செய்யப்படுகின்றன . இருந்தாலும் குறிப்பிட்ட சில ஆப்கள் மட்டுமே தவிர்க்க முடியாததாகி விடுகின்றன . அப்படிப்பட்ட சில சிறந்த ஆப்கள் குறித்து தான் பார்க்க இருக்கிறோம் .

1. ES FILE EXPLORER

ஆண்ட்ராய்டு மொபைல் வைத்திருப்பவர்களானாலும் புதிதாக வாங்குபவர்களாகவும் இருந்தாலும் file களை பார்ப்பதற்கும் கையாளுவதற்கும் (View and Access files) அதிகமாக தரவிறக்கம் செய்வது ES FILE EXPLORER  தான் .
ES FILE EXPLORER
ES FILE EXPLORER
சிறப்பம்சங்கள் (features) :

மொபைலின் Storage Space முடிவது போன்று இருந்தாலும் அல்லது நீங்கள் விரும்பினாலும் தேவை இல்லாத file களை நீக்க Space Analyser வசதி இருகின்றது .
உங்களது மொபைலில் Wifi வசதி இருப்பின் ES FILE EXPLORER வைத்திருக்கும் இன்னொரு நண்பருடன் file களை பகிர்ந்துகொள்ள முடியும்.
ஒரு Mobile App ஐ Install செய்யவோ அல்லது Uninstall செய்யவோ இதில் வசதி இருக்கின்றது . மேலும் backup எடுத்து வைத்துக்கொள்ளும் வசதியும் இதில் இருகின்றது .

2. EVERNOTE MOBILE APP

அன்றாடம் மாறுபட்ட பணிகளை செய்வோரும் குறிப்புகளை எடுத்து வைத்துக்கொள்ள விரும்புவோரும் பயன்படுத்திட வேண்டிய ஆப் EVERNOTE APP .
EVERNOTE MOBILE APP
EVERNOTE MOBILE APP

இந்த ஆப்பில் text, images, audio, video என அனைத்துவிதமான format file களையும் சேமித்து வைத்துக்கொள்ள முடியும் .

முக்கிய சிறப்பம்சமே மொபைல் , கணிணி உள்ளிட்ட எந்த device மூலமாகவும் ஒரே login ஐ பயன்படுத்தி file களை upload செய்யவும் access செய்யவும் முடியும்.

3 . NOVO LAUNCHER 

தற்போது Playstore இல் இருக்கக்கூடிய Launcher App களில் சிறப்பான வசதிகளை கொண்டது NOVO Launcher . பயன்படுத்துவதற்கு எளிமையானதாகவும் புதிய customization களையும் கொண்டிருப்பதனால் அதிகம்பேரால் விரும்பப்படுகிறது .
NOVO LAUNCHER 
NOVO LAUNCHER
Icon Themes, Subgrid Positioning, Colour Controls என பல சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது.
இலவசமாகவும் இதனை download செய்து பயன்படுத்திடலாம் ஆனால் prime version இல் அதிகபடியான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

4 . SWIFT KEY App 

கிட்டத்தட்ட 250 மில்லியன் பயனாளர்கள் இந்த ஆப்பை தரவிறக்கம் செய்துள்ளனர் .  இதனுடைய முக்கிய சிறப்பம்சமே Artificial Intelligence மூலமாக பயன்படுத்துபவர் எந்த வார்த்தையை type செய்ய வருகின்றார் என்பதனை அறிந்து அதனை suggest செய்வது தான் .
SWIFT KEY App 
SWIFT KEY App
Smarter Autocorrect – type செய்திடும் போது தவறாக Spelling Mistake செய்தால் கூட உங்களுக்காக சரி செய்து தரும் . இன்னும் கூடுதலாக வார்த்தைகளுக்கு இடையில் Space கூட விட்டு விடும் .
தற்போது Gif file களை search செய்திடும் வசதியும் இருக்கின்றது.
Customizable Layout , Attractive themes, flow typing என பல விரும்பத்தகுந்த வசதிகளை கொண்டிருக்கிறது .

5. MX PLAYER 

அனைத்துவிதமான audio format, video formatகளையும் சப்போர்ட்  செய்யக்கூடிய playerகளில் மிக முக்கியமானது .
திரைப்படம் பார்க்கும்போது  subtitle வேண்டும் என தோன்றினால் அங்கேயே இணையதளத்தில் தேடும் வசதி கூடுதல் சிறப்பு .
MX PLAYER Mobile App
MX PLAYER Mobile App

வீடீயோவை Zoom செய்திடும் வசதியும் ஒலியை கூட்டிடும் வசதியும் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது .

Screen kid Lock : நாம் வீடியோ பார்த்துக்கொண்டிருக்கும்போது திரையினை தொட்டால் எதுவும் நடைபெறாமல் தொந்தரவில்லாமல் பார்ப்பதற்கு இந்த வசதி பயன்படுகின்றது .
Pamaran Karuthu

Share with your friends !

2 thoughts on “2018 TOP 5 android Applications in Tamil | டாப் 5 மொபைல் ஆப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *