நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவது சாத்தியமா? வாய்ப்புகள் சவால்கள்

இந்தியாவில் ஒருவர் மருத்துவர் ஆக வேண்டுமெனில் நீட் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றால் மட்டும் தான் சாத்தியம். சமூக நீதிக்கு எதிராகவும் அரசுப்பள்ளி மாணவர்களின் நலனுக்கு எதிராகவும் நீட் தேர்வு இருப்பதனால் அதனை நீக்க பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன. நீட் தேர்வை நீக்க முடியுமா? அதிலே இருக்கும் சவால்கள் என்னென்ன? வாருங்கள் பேசலாம்.

Read more

அகில் குரேஷி : நீதிபதிக்கு மறுக்கப்பட்ட நீதி

ஒவ்வொருமுறை ‘கொலிஜியம்’ புதிய நீதிபதிகளை பரிந்துரை செய்திடும் போதும் சில கேள்விகளும் எழவே செய்கின்றன. அதில் முக்கியமான கேள்விகள் அனைத்தும் ‘கொலிஜியம்’ அமைப்பின் வெளிப்படைத்தன்மை குறித்ததாகவே இருக்கும். அந்தக் கேள்விகள் அனைத்தும் “ஏன் இவரை நியமிக்கவில்லை?”என்பதை ஒட்டியே இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கேள்வி தான் தற்போது எழுந்துள்ளது. ‘கொலிஜியம்’ அமைப்போ ஒருவரை ஏன் பரிந்துரை செய்திடவில்லை என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக சொல்லும் வழக்கத்தை கொண்டிருக்கவில்லை என்பதனால் விமர்சனத்தை அது எதிர்கொள்ள வேண்டி உள்ளது.

Read more

அனைவரும் அர்ச்சகர் ஏன் அவசியமானது? கடந்து வந்த சரித்திரம்

இந்த மாற்றம் ஒவ்வொரு வேலையிலும் நடக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில், பணம், படிப்பு, திறமை இருந்தால் யாரும் எந்த வேலையையும் செய்திட முடியும். ஆனால், நாம் உடைக்க முடியாதது கோவில் கருவறைக்குள் குறிப்பிட்ட பிரிவினர் தான் செல்ல முடியும் என்ற விதியைத்தான். காலம் காலமாக இவ்விதி கடைபிடிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் அதனை உடைத்தெறிந்து அனைத்து சாதியினரும் முறையான பயிற்சி பெற்றால் அர்ச்சகரும் ஆக முடியும் என்பது மிகவும் முக்கியமாக செய்திட வேண்டிய காரியமாக இருந்து வந்தது.

Read more