80/20 பரேட்டோ கொள்கையை வெற்றி பெற பயன்படுத்துவது எப்படி?

இது அறிவியல் கொள்கையெல்லாம் அல்ல. ஆகவே நீங்கள் பயமின்றி இக்கொள்கை பற்றி தெரிந்துகொள்ளலாம். இத்தாலிய பொருளாதார வல்லுநர் வில்ப்ரெடோ பரேட்டோ இவ்விதியைப் பற்றி முதன் முதலாக எழுதியதால் அவரது பெயரால் இவ்விதி அழைக்கப்படுகிறது. தன்னுடைய வாழ்வில் சில விசயங்களை கவனிக்கும் போது அவை அனைத்தும் 80/20 என்ற அளவில் பிரிந்திருப்பதைக் கண்டார். உதாரணத்திற்கு, தன்னுடைய சமூகத்தில் மக்கள் 80/20 என்ற அளவில் பிரித்துப்பார்க்கப்பட்டதாக அவர் கூறினார். அதன்படி, பணத்தையும் செல்வாக்கையும் பொறுத்தவரை “முக்கியமான சிலர்” என்ற பிரிவில் 20% பேரும் “முக்கியமில்லாத பலர்” என்ற பிரிவில் 80% பேரும் இருந்ததாகவும் பரேட்டோ கூறினார்.

Read more

அனில் அம்பானியை விடவும் முகேஷ் அம்பானி வெற்றியாளராக இருப்பது ஏன்? தெரியுமா?

திருபாய் அம்பானி [Dhirubhai] யின் இரண்டு திறமைசாலி பிள்ளைகள் தான் அனில் அம்பானியும் முகேஷ் அம்பானியும். 2002 ஆம் ஆண்டு திருபாய் இறந்த பிறகு மெல்ல மெல்ல சகோதரர்களுக்குள் மோதல் ஆரம்பித்தது. இருவருக்கும் இடையே இருக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர சொத்துக்களும் நிறுவனங்களும் பிரிக்கப்பட வேண்டும் என்ற நிலை உருவானது. அப்போதைய காலகட்டத்தில், அம்பானி குடும்பத்தின் முகமாக இருந்தவர் அனில் அம்பானி. அவர் தான் முதலீட்டாளர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர். முகேஷ் அம்பானியோ அந்த காலகட்டத்தில் நிறுவனத்தை எப்படி முன்னேற்றுவது என்பதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

Read more

6 தலைமைக்கான பண்புகள் | 6 Great Tips for Successful Leader

ஒரு நிறுவனத்தை நாம் நடத்தும் போது அங்கே பணி செய்கிறவர்களுக்கு அது தங்களுடைய நிறுவனம் போல தோன்ற வேண்டும், உங்களுக்கு உண்மையாக இருந்திட வேண்டும் என அவர்கள் ஆத்மார்த்தமாக நம்பும்படி இருக்க வேண்டும். அவர்களது உழைப்பை சுரண்டாமல் நிறுவனம் முன்னேறும் போது தாங்களும் முன்னேறுகிறோம் என அவர்களை நம்பவைத்துவிட்டால் போதும், நிறுவனத்தை உயர்த்திட பணியாளர்கள் இணைந்து கடுமையாக உழைப்பார்கள். இன்று பல முதலாளிகள் கோட்டைவிடும் இடமே இதுதான்.

Read more