பெண்ணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருந்தால்…..

பெண்களால் குழுவாக செயல்பட முடியாது என்ற கோட்பாடு மறைமுகமாக திணிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. ஆனால் ஒரு பெண் இன்னொரு பெண்ணின் வெற்றிக்கு பக்கபலமாக இருக்கும்போது அந்த வெற்றி வலிமையுடையதாக இருக்கும்
பெண்ணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருந்தால்.....

ஆண்கள் ஒரு குழுவாக இணைந்து தொழில்களை துவங்கி வெற்றியடைந்த ஏராளமான கதைகளை நாம் கேட்டிருப்போம். ஆனால் பெண்கள் குழுவாக இணைந்து தொழில்களை துவங்கி வெற்றியடைந்த கதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே நடந்து நாம் கேட்டிருப்போம். பெண்கள் இயல்பிலேயே பிறருடன் எளிதில் ஒட்டிக்கொள்ளும் ஆற்றல் உடையவர்கள் என்றாலும் கூட பெண் குழுக்கள் உருவாவது கிடையாது. அது ஏன் என்ற கேள்விக்கான பதில் ஆச்சர்யகரமானது. ஒரு பெண் இன்னொரு பெண்ணின் வெற்றிக்கு பாடுபடுவாள், பக்கபலமாக இருப்பாள் என்று இன்னொரு பெண்ணால் அவ்வளவு எளிதில் நம்பிவிட முடியாது.

பெண்கள் இப்படி சிந்திப்பதற்கு அவர்களின் மீது தவறு சொல்ல முடியாது, பெண்கள் இயல்பிலேயே இப்படி சிந்திப்பதற்கு காரணம் இந்த சமூகம் அவர்களின் மீது திணித்து வைத்துவிட்ட எண்ணங்கள் தான் அடிப்படைக்காரணம். ஆமாம், ஒரு பெண்ணால் இன்னொரு பெண்ணின் ஏற்றத்தை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் பொறாமை போன்ற எண்ணங்கள் ஏற்பட்டு ஏமாற்றப்படலாம் என்றும் தான் இந்த சமூகம் அவர்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது. ஆகையினால் தான் பல பெண்கள் பெண்கள் குழுவோடு இணைந்து செயல்படுவதைக்காட்டிலும் ஆண்கள் குழுவோடு இணைந்து செயல்பட விரும்புகிறார்கள்.ஆண்கள் குழுவோடு இருக்கும் போது கிடைக்கக்கூடிய உதவியென்பது பெண்கள் குழுவோடு சேர்ந்திருக்கும் போது கிடைக்காது என்ற எண்ணமும் பெண்களுக்கு இருக்கிறது.

ஆனால் எதார்த்தம் என்னவெனில், பெண்கள் குழுவாக இணைந்து செயலாற்றும் போது முழு வீச்சுடனும் நம்பிக்கையுடனும் செய்லபட முடிவதாகவும் பெண்கள் குழுவாக சேர்ந்து செயல்படும்போது அவர்களால் வெற்றியை மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் பெற்றுவிட முடிவதாகவும் பலர் தெரிவித்து இருக்கிறார்கள். 

பெண்ணின் வெற்றிக்கு பின்னால் பெண் இருந்தால்.....

 

தற்போது வெளிநாடுகளில் பெண்கள் குழுவாக செயல்பட்டு தொழில்துறையில் சாதித்துக்கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் அப்படி பெண்கள் ஒரு அணியாக செயல்பட்டு தொழில்துவங்குவது என்பது மெதுவாகவே நடைபெற்று வருகிறது. ஆனால் மிக விரைவில் இந்தியாவிலும் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.

இந்தியாவில் பல பெண்களின் திறமை என்பது திருமணத்திற்கு முன்பு பெரிய அளவில் பேசப்பட்டாலும் கூட திருமணத்திற்கு பின்பு உணவு சமைப்பது, பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவது போன்ற வேலைகளில் மழுங்கடிக்கப்படுகிறது. பல பெண்கள் தாங்களாகவே இந்த குடும்பப்பணிகளை விரும்பி ஏற்றுக்கொள்கிறார்கள், சில பெண்கள் குடும்பப்பணிகளில் கண்டிப்போடு ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆனால் இந்தத்தடைகளையும் தாண்டி பெண்கள் ஒரு குழுவாக இணைந்து செயல்பட்டால் நிச்சயம் அவர்களால் வெற்றியை பெற முடியும். ஒரு பெண்ணின் வெற்றிக்காக ஆண் ஒருவர் செயல்படுவதைக்காட்டிலும் பெண் ஒருவர் செயல்படும் போது வெற்றி எளிமையாக கிடைத்துவிடுகிறது.

இதுவே எதார்த்தமான உண்மை. பெண்கள் சக பெண்களை நம்ப வேண்டும், சக பெண்களின் வெற்றியில் பங்கேற்று அவர்களுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். அவர்களோடு சேர்ந்து தாமும் முன்னேற பக்குவப்படுத்திக்கொள்ள வேண்டும்.

கேள்விகள் :

நீங்கள் பெண் என்றால், சக பெண்களை நீங்கள் நம்புவீர்களா?

நீங்கள் ஆண் என்றால், உங்களது சகோதரி அல்லது மனைவியை பிற பெண்களுடன் இணைந்து செயலாற்ற அனுமதிப்பீர்களா?

 மேலும் சில கட்டுரைகளை இங்கே படியுங்கள்

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *