துப்பாக்கி குண்டுகளுக்கு பதில் எங்கே?

 

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரிட்டன் மன்னிப்பு கேட்கவேண்டும் என கேட்கும் இந்தியாவில் …..



தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த நூறு நாள் போராட்டத்தின் இறுதி நாளன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை நோக்கி மக்கள் பேரணி சென்றனர் . போராட்டக்காரர்களை தடுக்க அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை தாண்டி மக்கள் செல்ல முற்பட அந்த இடமே போர்களமாகிறது .



முன்னறிவிப்பு எதுவுமே இல்லாமல் கண்ணீர் புகைக்குண்டுகளை போலீசார் வீசுகிறார்கள் . கூட்டம் அலைமோதுகின்றது . அருகில் இருக்கும் வாகனங்கள் தீயிட்டு கொழுத்தப்படுகின்றன . எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் சொந்த நாட்டு மக்களின் மீது துப்பாக்கி சூட்டை நடத்துகிறது காவல்துறை . 13 பேர் மிகக்கொடூரமாக கொல்லப்படுகிறார்கள் .

 



சொந்த நாட்டு மக்களின் மீது அரசாங்கமே துப்பாக்கிசூடு நடத்துமா என ஒட்டுமொத்த தேசமும் கலங்கி நின்றது . அதன்பின்னர் துப்பாக்கிசூடு நடந்ததில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கின்றன . திட்டமிட்டு பொதுமக்களின் மீது இப்படியொரு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்களும் எழுந்தது . தற்போது சிபிஐ இதனை விசாரித்து வருகின்றது .



குண்டுகளுக்கு பதில் எங்கே ?



ஒரு போர் வீரர் பாகிஸ்தான் எல்லைக்குள் மாட்டிக்கொண்டார் என்றவுடன் ஒட்டுமொத்த தேசமும் கிளர்ந்து எழுந்தது . தவறாக குறிப்பிட நினைக்கவில்லை , ஒரு போர் வீரருக்கு இதுபோன்ற சூழல்கள் அமைவது இயல்பான ஒன்று . ஆனால் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்படுவது என்பது இயல்பான ஒன்றா ? பிறகு எப்படி இந்த தேசம் அமைதியாக இருக்கின்றது .

 



தவறு நடந்துவிட்டதென்றே வைத்துக்கொள்வோம் , அரசு அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கிற இக்குற்றத்தில் உண்மையை கண்டறிய ஒரு ஆண்டு தேவைப்படுமா ? பணக்காரர்கள் இறந்திருந்தால் இப்படித்தான் மெத்தனமாக விசாரித்துக்கொண்டு இருப்போமா ?

போதும், நடந்தவை அனைத்தும் போதும் . மக்களுக்காக ஆட்சி நடத்துகின்றோம் என்பவர்கள் இப்போதாவது உடலை துளைத்து  உயிரை எடுத்த குண்டுகளுக்கு பதிலை சொல்லவேண்டும் .

 

ஆண்டு ஓடிவிட்டது
நினைவஞ்சலி துவங்கிவிட்டது
அழுகுரல்கள் மங்கிவிட்டது
கேள்விகள் ஒழிந்துவிட்டது

நியாயம் மட்டும்
கிடைக்கவேயில்லை 😌😌😭

 



நியாயத்தை சொல்லுங்கள்  வேண்டுகிறோம் உங்களை !

 


பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *