Dr சஞ்சய ராஜாராம் | மில்லியன் கணக்கான மக்களை காப்பாற்றியது இவர் உருவாக்கிய கோதுமை ரகங்கள்

உயர்ந்துகொண்டிருக்கும் மக்கள் தொகைக்கு ஈடான உணவு உற்பத்தி இல்லையென்றால் பசியால் இறக்கும் மனிதர்களின் எண்ணிக்கை உயரும். சஞ்சய ராஜாராம் உருவாக்கிய 480 வகையான கோதுமை வகைகள் பருவநிலை சவால்களை கடந்து வளரும் தன்மை கொண்டவை. இவரது ரகங்களால் கோதுமை உற்பத்தி ஆண்டுக்கு 200 மில்லியன் டன் அதிகரித்து, உலகம் முழுவதும் லட்சக் கணக்கானவர்களின் உணவுத் தேவையை நிறைவு செய்துள்ளது.



டாக்டர் சஞ்சய ராஜாராம், 17 பிப்ரவரி 2021 அன்று மெக்சிகோவின் சோனோரா மாகாணத்தில் உள்ள சியுடாட் ஒப்ரேகோனில் உள்ள அவரது வீட்டில் காலமானார். நம் காலத்தில் வாழ்ந்த சிறந்த வேளாண் விஞ்ஞானிகளில் முதன்மையானவர் இவர். இவரது கண்டுபிடிப்புகளால்உருவாக்கப்பட்ட 480 வகையான கோதுமை ரகங்களை , 6 கண்டங்களில் உள்ள 51 நாடுகளில் சிறிய மற்றும் பெரிய விவசாயிகள் உற்பத்தி செய்கிறார்கள், இது உலக உற்பத்தியில் 200 மில்லியன் டன்களுக்கு மேல் அதிகரிப்புக்கு வழிவகுத்தது.

 

இந்த மாபெரும் சாதனையை கொண்டாடும் விதத்தில் 2001 ஆம் ஆண்டு இவருக்கு இந்திய அரசாங்கம் பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. அவர் இறந்த பிறகும் அவரது சாதனைக்கு அங்கீகாரம் அளிக்கும் விதத்தில் மூன்றாவது பெரிய விருதான பத்ம பூஷன் விருதை வழங்கியது.

 

சர்வதேச மக்காச்சோளம் மற்றும் கோதுமை மேம்பாட்டு மையத்தின் (CIMMYT) கூற்றுப்படி, அவரது கோதுமை வகைகள் உலகம் முழுவதும் சுமார் 58 மில்லியன் ஹெக்டேர்களில் பயிரிடப்பட்டு, உலகின் பல்வேறு பகுதிகளில் பட்டினிச் சாவைத் தடுக்கின்றன.

1972 ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற டாக்டர் நார்மன் போர்லாக்கிற்குப் பிறகு CIMMYT யின் கோதுமை வளர்ப்புத் திட்டத்தைப் பொறுப்பேற்றபோது ராஜாராம் அவர்களுக்கு வெறும் 29 வயதுதான். இந்த நிறுவனத்தில் சுமார் 33 ஆண்டுகள் பணியாற்றினார். இதிலே ICARDA யின் இயக்குனராக அவர் பணியாற்றிய 7 ஆண்டுகளும் அடங்கும். அவர் 2008 இல் தனது உத்தியோகபூர்வ பணிகளில் இருந்து முறையாக ஓய்வு பெற்றார்.


அவர் உருவாக்கிய 480 வகையான கோதுமைகளில் தனிச்சிறப்பு என்னவென்றால், அவற்றின் “அதிகரித்த மகசூல் திறன் மற்றும் உறுதிப்பாடு, எந்த இடத்திலும் வளரும் தன்மை மற்றும் முக்கியமான நோய்கள் மற்றும் அழுத்தங்களுக்கு எதிர்ப்பு கொண்டிருப்பது ஆகியவையே”


ராஜாராம் 2014 ஆம் ஆண்டு உலக உணவுப் பரிசை வென்றார்.

 

1943 இல் பிறந்த ராஜாராம், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் உள்ள ராய்பூர் என்ற சிறிய விவசாய கிராமத்திற்கு அருகில் ஒரு சாதாரண குடும்பத்தில் வளர்ந்தார். அவரது குடும்பம் கோதுமை, சோளம் மற்றும் அரிசியை பயிரிடும் 5 ஹெக்டேர் பண்ணையை கொண்டிருந்தது. இதற்கிடையில், ராஜாராம், தனது வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமப் பள்ளிக்குச் சென்றார், அங்கு அவர் தனது ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிக் கல்வியை முடித்தார். படிப்பில் படு சுட்டியான மாணவராக இருந்தார், அவர் உயர்நிலைப் பள்ளியில் சேர உதவித்தொகை பெற்றார், அதைத் தொடர்ந்து அவர் கோரக்பூர் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், அங்கு அவர் விவசாயத்தில் பிஎஸ்சி பட்டம் பெற்றார். பட்டப்படிப்பைத் தொடர்ந்து, புது தில்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார், அங்கு அவர் இந்தியாவின் பசுமைப் புரட்சியில் முக்கியப் பங்கு வகித்த டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் கீழ் மரபியல் மற்றும் தாவர வளர்ப்பைப் படித்தார்.

முதுகலைப் பட்டத்தைத் தொடர்ந்து, உதவித்தொகையில் சிட்னி பல்கலைக்கழகத்தில் தாவர வளர்ப்பில் முனைவர் பட்டத்தை முடிக்க ஆஸ்திரேலியா சென்றார். மினசோட்டா பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவராக டாக்டர் நார்மன் பர்லாக்குடன் சேர்ந்து படித்த டாக்டர் ஐ.ஏ வாட்சனை அங்கு அவர் சந்தித்தார். மெக்சிகோவில் உள்ள CIMMYT இல் உள்ள பர்லாவுக்கு ராஜாராமை பரிந்துரைத்தவர் டாக்டர் வாட்சன். இந்த அறிமுகம் தான் ராஜாராமை மிகப்பெரிய விஞ்ஞானியாக மாற்றுவதில் பெரிய பங்காற்றியது. விவசாயத்தில் அவரது குடும்பப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, ராஜாராம் தனது எதிர்காலம் விவசாய அறிவியலில் இருப்பதை அறிந்திருந்தார், அங்கு அவர் உணவு உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும் மற்றும் நீண்டகால நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்பினார். அதனை தனது வாழ்நாளில் செயல்படுத்தியும் காட்டினார்.

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *