குடியரசு தினம் – ஜனவரி 26 – ஏன்?

இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்து நம்மை நாமே முழுமையாக ஆட்சி செய்ய துவங்கிய தினம் இன்று (ஜனவரி 26 ) .

குடியரசு தினம் மலர்ந்த காரணம்

1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய மாநாட்டில், “பூரண சுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்” என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த ‘எங்கு, எப்போது எவ்வாறு அகிம்சாபூர்வமான வரி கொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்’ என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.

அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகிவிட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த தேசிய ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பகு குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.

1930, ஜனவரி 26-ம் தேதி- முதல் குடியசு தினம்!

முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அன்றைய தினம் நகர்ப் புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.

ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதி மொழியின் வாசகம் இதுதான்.

“நமது தாய் நாட்டிற்கு நான்கு விதத்திலும் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகமே ஆகும்.” ஆங்கிலேய ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு வித சீரழிவைக் குறிப்பாக அவ்வாசகம் அமைந்திருந்தது.

அன்று, அதாவது சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான்… சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளை குடியரசு தினமாகக் கொண்டாட 26 நவம்பர் 1949-ல் நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது 1950-ல்! இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.

நாம் குடிமகனாக செய்யவேண்டியது

பட்டொளி வீசுகின்ற கொடியினை பறக்கவிடும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அரசியலமைப்பு சட்டத்தை மதித்து நடக்கவேண்டிய பொறுப்போம் கடமையும் இருக்கின்றது .

இந்த நன்நாளில் விடுதலை பெற்று தந்த முன்னோர்களுக்கும் நன்றி சொல்லுவோம் .

குடியரசு தினம் கவிதை

பட்டொளி வீசி பறந்திடும்

மூவர்ண கொடியில்

நித்தமும் சுழன்றிடும்

சக்கரம் போல

நெஞ்சினில் உழன்றிடும்

தேசத்தின் பற்றினை

நிரூபிக்க மதித்து

நடப்போம் அரசியலமைப்பை!

சல்யூட் அடித்து

நெஞ்சு நிமிர்த்தி

இந்தியன் என்று

உரக்க சொல்லுவோம்!

அனைவரும் சமமென்று

மனசு திறந்து

ஒற்றுமை பேணி

சமத்துவம் காணுவோம்!

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *