நடிகை ரெஜினா கசாண்ட்ராவின் மறுபக்கம் : சாகசம் இல்லா வாழ்க்கை, வாழ்க்கையா?

மாநகரம், சரவணன் இருக்க பயமேன், சந்திரமௌலி மற்றும் பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் என்ற ரீதியில் நடிகை ரெஜினாவை அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவரது மற்றொருபுறம் மிகவும் சாகசங்கள் நிறைந்தது. அதைத்தான் இந்தக்கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து வருகிறோம். வெறும் நாட்களை கடத்துவது மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருந்தாலும் கூட வேறு வழியற்றவர்களாய் நாட்களை நகர்த்தும் வேலையைத்தான் நாம் ஒவ்வொருவரும் செய்துவருகிறோம். இந்த சூழ்நிலையில் தான், உங்களது மனது எதற்காக ஏங்குகிறதோ அதை செய்திடுங்கள் என்று கூறும் “நடிகை ரெஜினா கசாண்ட்ராவின்” அனுபவங்களை பார்க்க இருக்கிறோம். டெக்கான் கிரானிக்கல் பத்திரிகையில் வெளியான அவரது கட்டுரையின் தமிழாக்கம் இது.

நடிகையாக அறியப்பட்ட ரெஜினா சாகச நிகழ்வுகளில் விரும்பி பங்கேற்கும் ஆர்வமுடையவர். The Wild Warrior Himalayan Adventure Race, ‘30 for 30 Challenge’ என்பது போன்ற சாகச போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறார் ரெஜினா. தொற்றுநோய் தாக்கம் ஏற்பட்டதில் இருந்து நாம் ஒவ்வொருவருமே அடுத்தது என்ன செய்யப்போகிறோம் என்பதை அறியாதவர்களாக இருந்தோம். கிட்டத்தட்ட வாழ்க்கையின் அர்த்தம் அறியாதவர்களாக மாறிப்போனோம். அது தெரியாமல் நாம் எப்படி வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்? அப்போது தான் இதுபோன்ற பயனுள்ள சாகச நிகழ்வுகளில் பங்கேற்கும் முடிவுக்கு வந்ததாக கூறுகிறார் ரெஜினா. ரத்தம் உறையா நோய், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ பணம் சேகரிக்கும் நோக்கத்திற்காக மேற்கூறப்பட்ட போட்டிகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

சாகசம் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா என கேள்வியெழுப்பும் நடிகை ரெஜினா தற்போது முட்டுக்காடு ஆற்றுப்படுகையில் surfing பயிற்சி செய்துவருகிறார். அடுத்ததாக படங்களுக்கு சூட்டிங் செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதால் அவர் இதனை தற்போது செய்துவருகிறார். ரெஜினா பெங்களூருவில் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற Wild Warrior Duathlon (Run and Bike) போட்டியின் வெற்றியாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரெஜினா சொல்லக்கூடியது ஒன்றுதான் ‘உங்கள் ஆன்மா சாகசத்திற்காக ஏங்குகிறது என்றால், அதற்குச் செல்லுங்கள்’.






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *