#DeleteFacebook உங்கள் facebook ஐ டெலீட் செய்ய சரியான நேரம் இதுதானாம், ஏன்?
ட்ரெண்டாகும் #deletefacebook:
facebook நிறுவனம் தற்போது வாங்கி வைத்திருக்க கூடிய WhatsApp ஐ உருவாக்கிய துணை நிறுவனர்களில் ஒருவரான பிரையன் ஆக்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் It is time #deletefacebook என பதிவிட்டுள்ளார் . அதாவது எந்த விளக்கங்களும் இல்லாமல் facebook ஐ டெலீட் செய்வதற்கான நேரம் இதுவென கூறியுள்ளார் .
பிரச்சனையின் பின்புலம் :
நடந்து முடிந்த அமெரிக்க பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு தேர்தல் வேலைகளை செய்த நிறுவனம் “Cambridge Analytica ” . இந்த நிறுவனம் தேர்தல் சமயத்தில் சுமார் 50 லட்சம் facebook பயனாளர்களின் சொந்த தகவல்களை தொடர்ச்சியாக திருடி வந்துள்ளது . இது தெரிந்திருந்தும் இது குறித்து தனது பயனாளர்களுக்கு ஏன் சொல்லவில்லை என்பதே facebook மீது சந்தேகத்தை கிளப்பியுள்ளது .
facebook நிறுவனம் அளித்துள்ள பதிலில் British academic, Aleksandr Kogan இவர் உருவாக்கிய ஆப்பின் மூலமாகவே தகவல்கள் திருடப்பட்டுள்ளன . இதனை 270000 நபர்கள் டவுண்லோடு செய்துள்ளதாகவும் இவர்கள் இவர்களின் தகவல்களோடு சேர்த்து நண்பர்களின் தகவல்களை சேகரிக்கவும் அனுமதி கொடுத்ததால் திருடப்பட்டுள்ளது என கூறியுள்ளது .
Cambridge Analytica அளித்துள்ள பதிலில் நாங்கள் மட்டுமே சமூக வலைதளங்களின் தகவல்களை பயன்படுத்திடவில்லை , 2016 ஐனாதிபதி தேர்தலில் facebook டேட்டா எதுவும் பயன்படுத்தப்படவில்லை என விளக்கமளித்துள்ளது .
நாம என்ன செய்யணும் :