சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம் – ஏன் ?

கடுமையான புகை மாசினால் பாதிப்படைத்திருந்த டெல்லியில் பட்டாசு விற்பதற்கு தடை விதித்திருந்தது உச்சநீதிமன்றம். இது அனைவருக்கும் நினைவில் இருக்கலாம். ஆனால் தற்போது இந்தியா முழுமைக்கும் பட்டாசு விதிக்க தடைவிதிக்க வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம்

 

தொடங்கியது போராட்டம் :

இந்த வழக்கில் தீர்ப்பு பட்டாசு வெடிக்க கூடாது என வந்தால் தங்களுக்கு இழப்பு என்று கருதிய பிற மாநிலங்களில் இருக்கும் வியாபாரிகள் சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிப்பவர்களுடன் ஒப்பந்தம் எதுவும் செய்துகொள்ள முன்வரவில்லை. ஆகையால் சிவகாசியில் தொழில் முடங்கியது. அங்கு உள்ள தொழிற்சாலைகளை உற்பத்தியாளர்கள் மூடிவிட்டனர்.

அவர்களின் கோரிக்கை என்ன ?

1) விரைவாக உச்சநீதிமன்றம் இந்த வழக்கினை விசாரித்து தீர்ப்பு வழங்கிட வேண்டும்.

2) மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளித்திட வேண்டும் என்பதே.

யார் இதனை செய்யவேண்டும் :

உச்சநீதிமன்றத்தில் தனிநபர் யாரேனும் முறையிட்டு விரைவாக வழக்கினை விரைவாக விசாரிக்க சொன்னால் விசாரிக்குமா அல்லது தடை எதுவும் நாங்கள் விதிக்கவில்லையே எதற்க்காக உடனடியாக விசாரிக்க வேண்டும் என கேள்வி கேட்குமா என தெரியவில்லை.

ஆனால் தன் மாநில மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும்போது மாநில அரசு வழக்கினை விரைவாக விசாரிக்க வேண்டி நீதிமன்றத்தை அணுகலாம்.

மத்திய அரசு மிக எளிதாக சுற்றுசூழல் பாதுகாப்பு விதிகளில் இருந்து பட்டாசு தொழிலுக்கு விலக்கு அளிக்காது. மாநில அரசு தான் மத்திய அரசை நிர்பந்தித்து விலக்கு அளிக்க செய்ய வேண்டும். அவ்வாறு விலக்கு அளித்துவிட்டால் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு சாதகமாகவே வரும்.

சிவகாசி என்றொரு பகுதியின் மக்களுக்கு மட்டுமே பாதிப்பு என மாநிலத்தின் மற்ற பகுதியில் இருப்பவர்கள் இருக்கக்கூடாது. அடுத்தவர் பிரச்சனைகளில் நாமும் அக்கறை கொண்டிருத்தல் அவசியம். ஒற்றுமையே நன்மையை பெற்றுத்தரும்.

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

One thought on “சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம் – ஏன் ?

  • January 17, 2018 at 4:53 pm
    Permalink

    உச்ச நீதிமன்றம் அவசர வழக்காக இதனை விசாரித்திடவேண்டும்… ஒரு வழக்கை முழுமையாக விசாரித்து தீர்ப்பு வழங்க குறைந்தபட்சம் 2 அல்லது 3 மாதங்கள் ஆகலாம் … உச்சநீதிமன்றம் கேக்கலாம் “நாங்கள்தான் தடை விதிக்கவில்லையே ஏன் போராட்டம் செய்கிறீர்களென்று??”

    ஒருவேளை 2 மாதம் கழித்து நீதிமன்றம் தடைவிதித்தால் , அந்த 2 மாதங்கள் உற்பத்திசெய்த பட்டாசுகள் அனைத்தும் வீணாகிவிடும்… மேலும் அவர்களுக்கு பெரிய இழப்பு நேரிடும்…

    தடை இல்லையென கூறினால், உற்பத்தி குறையும்… சரியான கூலி கிடைக்காது… உற்பத்திக்குறைவால், மக்கள் அந்நிய பட்டாசுகளை நாடுவார்கள் … பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்….

    எனவே , உச்சநீதிமன்றம் பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு இதனை அவசர வழக்காக விசாரித்திடவேண்டும்…

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *