ரசிக்கிறேன் உன்னை…..| கவிதை


பூவின் வாசனையை

காற்று களவாடினால்

 

கடலின் அலைகளை

கரை களவாடினால்

 

வானவில்லின் வண்ணத்தை

மேகம் களவாடினால்

 

நிலவின் வெண்மையை

இரவு களவாடினால்

 

அழகிங்கு இருக்குமா

ரசிக்கத்தான் முடியுமா

 

அவை அங்கங்கே இருத்தல்தானே

அழகின் ரகசியம்

 

பேரழகி உன்னை

பெயரறியா நானும்

 

களவாடாமல் போகக்

காரணமும் அதுதான்

 

னால் தினமும்

ரசிக்கிறேன் உன்னை…..

 

– ஸ்ரீ

 

Get updates via WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *