பரியேறும் பெருமாள் நல்ல சமூகத்திற்கான கண்ணாடி | Pariyerum Perumal Superb Movie

 


 

பரியேறும் பெருமாள் பிஏ பிஎல் திரைப்படத்தை பார்த்தேன் . ஏற்கனவே சமூகவலைதளங்களில் வந்த கருத்துக்களை பார்த்தபோது சாதிய பாகுபாட்டினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற அறிமுகத்தோடே காண சென்றேன் . 2005 காலகட்டத்தில் சாதிய கொடுமையினால் நடக்கும் கொடுமைகளை , சாதி மாறி காதலிக்கும் பெண்களை ஆண்களை எவ்வாறு அடக்கியொழித்தார்கள் என்பதனை வெட்டவெளிச்சமாக காட்டியது .



சாதிய தீயில் எங்கோ ஒருவன் இன்றும் பாதிக்கப்படுகிறான்

 


சாதியை மீண்டும் நினைவூட்டுகிறதா ?


திரைப்படத்தின் பாதியில் நண்பர் ஒருவர் “ஏன் இப்படிப்பட்ட திரைப்படங்களை உருவாக்கி மீண்டும் சாதியை நினைவூட்டுகிறார்கள்?“. அவருடைய இந்த கேள்வியில் சாதியை வெறுத்திடும் உண்மையான நிலையை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது . ஆனால் இந்த திரைப்படத்திற்க்கான தேவை இன்று இல்லையென நம்மால் ஒரேயடியாக சொல்லிவிடமுடியாது என்பதே அவருக்கான எனது பதில்.

 



2005 இல் நடந்த கதையாக இப்படம் அமைக்கப்பட்டிருந்தாலும் இன்றும் ஏதோ ஒரு இடத்தில் சாதிய அடக்குமுறையால் மக்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் . அவர்களுக்காக குரல் கொடுக்கவேண்டியதும் நமது கடமைதானே . திரைப்படங்கள் நம்மை கெடுப்பதற்க்கானவை அல்ல , அவை நமது அசிங்கங்களை காட்டி நம்மை அழகாக்கக்கூடிய  கண்ணாடி போன்றவை.

 

 

அனைவருமே சாதி பார்ப்பதில்லை



அவனும் உன் சாதிக்காரன் தானே ? அவங்ககிட்ட போய் கேளுங்க னு நாயகன் சொல்லிடும்போது யோகிபாபு சொல்லுவார் “நான் சாதி பார்த்துதான் உன்கிட்ட பழகுனேனா ?” என கேட்பார் . மிக மிக உண்மையான பதில் . இன்று பெரும்பாலானவர்கள் சாதியை ஒரு பொருட்டாக   கருதுவதில்லை . சாதிகளை கடந்த பல நண்பர்களும் இங்கு இருக்கவே செய்கிறார்கள் . அவர்களால் தான் இந்த சமூகம் சாதிய கொடுமையில் இருந்து ஓரளவாவது விடுபட்டு நிற்கின்றது .

இதற்கு சாட்சி இந்த திரைப்படத்தின் பல காட்சிகளில் நாயகனுக்கு ஆதரவாக திரையரங்கில் எழுப்பப்பட்ட  கைதட்டல்கள் தான் .

 

 

அவமானத்தை உடைத்தெடுக்க வேண்டும்


நீ சாதியினாலோ வறுமையினாலோ வேறு காரணங்களாலோ நிராகரிக்கப்பட்டால் உனக்கான ஒரே ஆயுதம் கல்வி தான் . இதனை இந்த திரைப்படம் வலியுறுத்தி கூறியிருப்பது சிறப்பு .

கொலைகளை செய்திடும் தாத்தா , நடிகர் கதிர் , நடிகை ஆனந்தி , நடிகரின் அம்மா , அப்பா என நடித்திருக்கும் அனைவருமே மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள் . திரைப்படம் மிக திறம்பட இயக்கப்பட்டிருக்கிறது , இயக்குநர் மாரி செல்வராஜ் , தயாரிப்பாளர் ரஞ்சித் , இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் .



சமூகத்தின் உண்மை நிலையை வெளிக்கொணரக்கூடிய இதுபோன்ற திரைப்படங்களுக்கு மக்கள் பெரிய ஆதரவினை கொடுக்க வேண்டும் .



திரைப்படத்தை பார்ப்பதோடு நில்லாமல் மாற்றத்திற்கு உட்பட வேண்டும்

 


 

பாமரன் கருத்து

Share with your friends !

One thought on “பரியேறும் பெருமாள் நல்ல சமூகத்திற்கான கண்ணாடி | Pariyerum Perumal Superb Movie

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *