ONGC நிறுவனத்துக்கு புதுக்கோட்டை காரனின் சில கேள்விகள் ?

நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தபட்டால் ஒரு ஆபத்தும் நேராது என்று கூறிய ONGC நிறுவனத்துக்கு புதுக்கோட்டை காரனின் சில கேள்விகள் ?உங்களுக்கும் இதே கேள்விகள் எழுந்தால் பகிருங்கள் ..

இந்த கேள்விகளுக்கு பதிலளிக்க சொல்லுங்க ….

தற்போது இருக்கும் சூழ்நிலையில்
இந்தியாவிற்கு இந்த திட்டம் அவசியமா ? மக்கள் எதிர்ப்பையும் மீறி செயல்படுத்தவேண்டிய அவசியம் என்ன ?

எந்த முறையினை பின்பற்றி ஹைட்ரோகார்பன் வாயு வெளியில் எடுக்கப்பட இருகின்றது ?

வழக்கம்போல நீரியல் விரிசல் முறை தான் பின்பற்றப்பட இருக்கின்றதா ?

அப்படி என்றால் , ஏற்கனவே வறட்சி மாவட்டமாக அறியப்பட்ட புதுக்கோட்டையில் எங்கிருந்து  இந்த திட்டத்திற்க்கான நீர் எடுக்கப்பட இருகின்றது ?

ஒவ்வொருமுறையும்   குறைந்தது ஐந்து கோடி லிட்டர் தண்ணிர் தேவைப்படுமாமே ? அவ்வளவு நீரை உறிஞ்சி எடுத்தால் நிலத்தடிநீர் வற்றிவிடாதா ?

என்னென்ன வேதிப்பொருள்களை தண்ணீருடன் கலந்து பூமிக்குள் செலுத்தி ஹைட்ரோகார்பன் வாயு வெளியில் எடுக்கப்பட இருகின்றது ?

அப்படி செலுத்தப்பட்ட வேதிப்பொருட்களை முழுமையாக வெளியில் எடுத்துவிடுவீர்களா ?

முழுமையாக எடுக்கப்பட வாய்ப்பில்லையெனில் அப்படி எடுக்கப்படாத வேதிப்பொருள்களினால் நிலத்தடி நீர் மாசுபடாதா ?

அப்படி ஒருவேளை மாசுபட்டுவிட்டால் அதை தடுக்கக்கூடிய அல்லது சுத்தப்படுத்தக்கூடிய திட்டங்கள் அரசிடம் இருக்கிறதா ? அது சாத்தியமா ? சோதனை செய்யப்பட்டுவிட்டதா ? (நிலத்தடிநீருடன் நச்சு வேதிப்பொருள்கள் கலந்துவிட்டால் அதனை பிரித்துஎடுக்க வாய்ப்பே இல்லையென்பதே உண்மை )

நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்துபோனால் அதற்கு அரசு பொறுப்பேற்குமா ? அந்த சூழ்நிலையில் எங்கிருந்து தண்ணீர் கொண்டுவரப்படும் ?

இவை சில கேள்விகள் தான் ….இன்னும்
இருகின்றது நிறைய கேள்விகள் …

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *