No More TV in Future | Why Digital advertising is worthy than TV Ads? | Tamil | இனி டிஜிட்டல் அட்வர்டைஸிங் தான் ?

தொலைக்காட்சிகளுக்கு வழங்கப்படும் விளம்பரங்களை குறைத்து இனி digital advertising இல் அதிக முதலீடு செய்ய கம்பெனிகள் ஆரம்பித்து இருக்கின்றன .

 

Digital Advertising என்றால் என்ன ?

 

What is Digital advertising?
What is Digital advertising?

மிக எளிமையாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால் digital advertising என்பது இணையத்தின் (Internet) மூலமாக விளம்பரங்களை நிறுவனங்கள் மக்களுக்கு கொண்டு சேர்ப்பது . எப்படி புதிய பொருள்கள் (Promotional Ads), ஆபர்கள் (Offers) தொலைகாட்சிகளில் (Television) இதுவரை மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டதோ அவற்றையே இணையத்தை பயன்படுத்தும் மக்களுக்கு காண்பிப்பது தான் digital advertising.

 

அதிகரித்திருக்கும் இணைய பயனாளர்கள் | Huge increase of Internet Users

 

User seeing digital ad in mobile
User seeing digital ad in mobile

 

தொலைத்தொடர்புத்துறையின் அதீத வளர்ச்சியாலும் பொதுமக்களின் வாழ்க்கை திறன் உயர்வினாலும் உலகம் முழுவதுமே இணையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருகின்றது .

 

இணையவசதி இல்லாத Mobile Users குறைவு

 

அண்மையில் இந்தியா டைம்ஸ் (India Times) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நகரில் வாழுகின்ற 455 மில்லியன் மக்கள் தொகையில் 295 மில்லியன் மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர் . 2011 Census படியே கிராமப்புற பகுதிகளில் வாழுகின்ற 732 பில்லியன் மக்களில் 186 மில்லியன் மக்கள் இணையத்தை பயன்படுத்துகின்றனர் .தற்போது கிராமப்புறங்களிலும் அதிகபடியான மக்கள் இணையம் பயன்படுத்துவதை கண்கூடாக பார்க்க முடிகின்றது . ஆகையால் அந்த எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து இருக்கும்.

 

Companies Spend more for Digital Advertising

 

DigitalAdvertisingக்கு அதிகமாக செலவழிக்கும் நிறுவனங்கள் 

 

பல நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் கடந்த 2016 ஆம் ஆண்டுகளிலேயே தொலைக்காட்சி விளம்பரங்களை விட அதிக முதலீடுகளை Digital Advertising பெற்றது . 2018 டென்சு (Dentsu) என்னும் நிறுவனம் வெளியிடுள்ள கணக்கெடுப்பின்படி ஒட்டுமொத்த விளம்பரத்தில் 38 .4% Digital Advertising ம் தொலைக்காட்சி விளம்பரங்கள் 35.5% ம் பெற்றுள்ளன .

 

ரேடியோ (Radio) வளர்ச்சியினை தொலைகாட்சிகள் (TV) பறித்தன , இன்று தொலைக்காட்சியின் வளர்ச்சியினை டிஜிட்டல் தொழில்நுட்பம் பறிக்க இருக்கின்றது

 

அதிகரித்து வருகின்ற தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் வருகின்ற 2021 க்குள் இணையம் (Internet) பயன்படுத்துகின்ற மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க இருக்கின்றது . ஆகையால் தொலைக்காட்சி விளம்பரங்கள்  பெரும் வீழ்ச்சியையும் Digital Advertising பெரும் வளர்ச்சியினையும் அடைய காத்திருக்கின்றன .

 

Why digital advertising rising?

Digital Advertising வளர்ச்சி அடைய காரணம் என்ன ?

 

பொதுவாக விளம்பரங்கள் என்பதே நிறுவனங்கள் தங்களின் வருமானத்தை அதிகரிக்க பொருள்கள் குறித்த தகவல்களையும் ஆபர்கள் உள்ளிட்ட தகவல்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க பயன்படுத்துவதுதான் .

 

TV advertising Vs Digital Advertising
TV advertising Vs Digital Advertising

முன்பு ரேடியோ அதிகப்படியான விளம்பரங்களை பெற்றன , பிறகு தொலைகாட்சிகள் வந்த பின்பு அதிகபடியான விளம்பரங்களை அவை பெற்றன . தற்போது இணையம் வந்தபிறகு அதிகபடியான விளம்பரங்களை அவை ஈர்க்கின்றன .

 

இதற்கு முக்கிய காரணம் மக்கள் புதிய தொழில்நுட்பங்களை நோக்கி நகர்வது தான் . தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் , செய்திகள் , விளையாட்டு என அனைத்தையுமே மக்கள் மொபைல் போன்களிலேயே (Mobile Phones) பார்க்க ஆரம்பித்துவிட்டனர் . இதனால் தொலைக்காட்சிகளை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகின்றது .

 

Tracking and Targeting attract companies

 

Absense of Tracking –தொலைகாட்சிகளில் ஒரு நிறுவனம் விளம்பரங்களை கொடுக்கின்றது என வைத்துக்கொண்டால் எத்தனை நபர்கள் தங்களுடைய விளம்பரங்களை பார்த்து இருக்கிறார்கள் என கண்டறிய இயலாது .

 

Absence of Geo Targeting -சென்னையில் இருக்கக்கூடிய ஒரு நிறுவனம் விளம்பரம் செய்ய நினைத்தால் அது அந்த சேனல் எங்கு ஒளிபரப்பபட்டாலும் அங்கும் விளம்பரம் காட்டப்படும் . இதனால் தேவை இல்லாத  இடங்களிலும் விளம்பரங்கள் காட்டப்படும் .

 

 இந்த இரண்டு மிகப்பெரிய குறைகளுக்கும் தீர்வினை தருகின்றது .

 

Digital Advertising இல் எத்தனை நபர்கள் நமது விளம்பரங்களை பார்த்திருக்கிறார்கள் , எந்த இடத்தில் இருந்து பார்த்திருக்கிறார்கள் , இன்னும்  கூடுதலான தகவல்களை கூட நம்மால் பார்க்க முடியும் .

 

எந்த இடத்தில் உள்ள மக்களுக்கு விளம்பரங்களை காட்டிட வேண்டுமோ அந்த பகுதியில் இருப்பவர்களுக்கு மட்டும் காட்டிட செய்ய முடியும் . அதுமட்டுமல்ல இன்னும் பலவகைகளில்  வயது , பாலினம் , பயன்படுத்தும் கருவி என பல வகைகளிலும் மக்களை பிரித்தெடுத்து அவர்களுக்கு விளம்பரங்களை காட்டிட செய்யலாம் .

 

தொலைக்காட்சிகளே இல்லாமல் போகலாம்

 

தொலைக்காட்சிகளின் அடிப்படை வருமானமே விளம்பரங்களின் மூலமாக கிடைக்கக்கூடிய வருவாய் தான் . வரப்போகும்காலங்களில் தொலைக்காட்சிகளின் விளம்பர வருவாய் குறையும்போது அதனை யார் நடத்திடுவார்கள் என்பது கேள்விக்குறி . தொலைக்காட்சியும் வீழ்ச்சியை சந்திக்கலாம் .

உங்களாலும் இணையதளத்தின் மூலமாக சம்பாதிக்க முடியும் தெரியுமா?

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *