Nurse Lini : Nipah வைரசால் இறந்த நர்ஸ் லினி : நினைவிலே கொள்ள வேண்டிய கேரள சகோதரியின் தியாகம்

நிபா வைரஸால் பாதிப்படைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்ததால் அவருக்கும் அந்த வைரஸ் தொற்று ஏற்பட்டு அதனால் உயிரிழந்த நர்ஸ் தான் கேரளாவை சேர்ந்த லினி அவர்கள்.

அப்போது தான் கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதல் ஆரம்பித்து இருந்த தருணம். அப்போது அவர் பணியாற்றிய பெரம்பரா தாலுகாவிற்கு உட்பட்ட மருத்துவனைக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் சிலர் வர, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார். அப்போது இந்த காய்ச்சல் நிபா வைரஸினால் ஏற்பட்டது எனவும் அது அனைவருக்கும் பரவும் என்பதும் அப்போது அவருக்கு தெரிந்துக்குமா என தெரியவில்லை. இரவு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனிருந்து சிகிச்சை அளித்த அவருக்கும் அந்த வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

சிகிச்சை பெற்று வந்த ஒரே குடும்பத்தை மூன்று பேரும் உயிரிழக்க அவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்த நர்ஸ் லினி அவர்களும் தனது உயிரை இழந்து போனார். 31 வயதே ஆன லினி அவர்களுக்கு சித்தார்த் (5), ரிதுல் (2) என்ற இரு மகன்கள் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

 

மகன்களின் கடைசி முத்தம் கூட பெறமுடியவில்லை :

இவருக்கு இருப்பது நிபா வைரஸ் தொற்று என்பதை அறிந்ததும் இவர் உயிரிழப்பது உறுதி என தெரிந்துவிடுகிறது. எங்கே தன்னிடமிருந்து வைரஸ் தொற்று பிள்ளைகளுக்கும் குடும்பத்தாருக்கும் பரவி விடுமோ என அஞ்சிய லினி அவர்களை சந்திப்பதை தவிர்த்து விட்டார். இறந்த பிறகும் இவரது உடல் குடும்பத்தாருக்கு கொடுக்கப்படாமல் சுகாதார ஊழியர்களால் மின் தகனம் செய்யப்பட்டது.

கடைசி வரை லினி அவர்களுக்கு பிள்ளைகளின் கடைசி முத்தம் கூட கிடைக்காமல் போனது கண்டு அதிர்ந்தது கேரளா.

லினியின் கடிதம் :

“சாஜி சேட்டா.. எனது முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். உங்களை பார்க்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கில்லை. நமது குழந்தைகளைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும். அவர்களை உங்களுடன் வளைகுடாவுக்கு அழைத்து சென்றுவிடுங்கள். நமது தந்தையைப் போல் அவர்களும் தனியாக இருக்க வேண்டாம். அன்புடன் லினி”

கேரளா அரசு நர்ஸ் லினிக்கு உதவி :

நோயாளிகளுக்கு மருத்துவ உதவி செய்யும் போது ஏற்பட்ட நிபா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த நர்ஸ் லினி அவர்களுக்கு பினராயி விஜயன் தலைமையிலான கேரளா அரசு நிவாரணம் வழங்கிட முடிவு செய்துள்ளது . அதன்படி அவரது கணவருக்கு அரசு வேலையும் அவரது பிள்ளைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாயும் வழங்கிட முடிவு செய்துள்ளது.

லினி நினைவில் கொள்ளப்பட வேண்டியவர் :

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது ஏற்பட்ட தொற்றுதலிதனால் உயிரிழப்பது ஏற்படுவது சாதாரணமானது அல்ல.

நினைத்துப்பாருங்கள் தங்களுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுவிடும் என மருத்துவர்கள் கருதினால் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பவர் யார் ? ஒவ்வொரு நர்ஸ் கருதினால் உதவுவது யார் ?

அத்தனையையும் தாண்டி நாமும் கூட சாகலாம் என தெரிந்தும் துணிவோடு பணியாற்றிவரும் மருத்துவர்களும், நர்ஸ் மற்றும் உதவியாளர்கள் அனைவருமே நினைவிலே கொள்ளப்பட வேண்டியவர்கள், மரியாதைக்கு உகந்தவர்கள்.

அந்தவகையில் பொதுமக்களுக்கு சேவையாற்றி உயிர்நீத்த சகோதரி லினி அவர்களும் நம் நெஞ்சில் வைத்து போற்றப்படக்கூடியவர்.

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *