அசத்தல் கண்டுபிடிப்பு : மனித கழிவு To விண்வெளி உணவு
விண்வெளியில் எத்தனயோ சாதனைகளை செய்தாலும் அனைத்து நாடுகளுக்கும் சவாலாக இருப்பது விண்வெளியில் தங்கி வேலைபார்க்கும் வீரர்களுக்கு உணவினை கொண்டு செல்வது . ஆம் இதற்காகவே மிகபெரிய அளவில் இடம் விண்வெளிக்கு செல்லும் ஓடங்களில் பயன்படுகிறது .
செவ்வாய் கிரகம் போன்றவற்றை ஆராய மிக நெடிய தூரம் செல்லவேண்டிய சூழ்நிலையில் உணவுக்காக மிகபெரிய அளவிலான இடம் தேவைப்படும் .
தற்போது இதற்கு மாற்றாக விண்வெளியில் தங்கி இருக்கும் விண்வெளி வீரர்களின் கழிவுகளில் இருந்தே நுண்ணுயிர்கள் மூலமாக சத்துள்ள உணவினை உற்பத்தி செய்ய முடியும் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர் .
கண்டுபிடிப்பு :
நுண்ணுயிர்களின் மூலமாக விண்வெளி வீரர்களின் திட மற்றும் திரவ கழிவுகளை சத்துள்ள உணவை போன்ற பொருளாக மாற்றுவதில் தற்போது வெற்றி கிடைத்துள்ளது .
முனைவர் கிறிஸ்டோபர் கூறுகையில் “விண்வெளி வீரர்களின் கழிவுகளை வைத்து நடத்திய சோதனையில் நுண்ணுயிரிகளின் மூலமாக கிடைத்த பொருளானது நேரடியாகவோ அல்லது மற்றவைகளுடன் கலந்தோ சமைக்க உகந்ததாக இருக்கின்றது ”
பென்சில்வேனியாவை சேர்ந்த நுண்ணுயிர் ஆராய்ச்சியாளர் கூறுகையில் ” இதை கேட்பதற்கு சங்கடமாக நம்புவதற்கு கடினமாக கூட இருக்கலாம் . ஆனால் இது தான் ஒரேவழி , இந்த உணவு பயோ முறையில் தயாரிக்கப்பட்டதாகவும் maarmite மற்றும் vegemite போன்றதாகவும் இருக்கும் .”
எது எப்படியோ சாப்பிடுபவர்களுக்கு இது எப்படி தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்தால் சாப்பிட மனம் வருமா என தெரியவில்லை . ஆனால் சாதனையை செய்ய வேண்டுமெனில் செய்துதானே ஆகவேண்டும் .
இந்தமுறை விண்வெளிக்கு மட்டுமல்ல பூமியில் இருக்கப்போகும் நமக்கும் கூட பயன்படலாம் . பூமியின் வளங்கள் குறைந்துகொண்டே போகும் சூழ்நிலையில் மாற்று இதுவாகவே இருக்கும் .
அறிவியல் கட்டுரைகள் மேலும் படிக்க
நன்றி
பாமரன் கருத்து
Ref : https://www.newsx.com/science-and-technology/scientists-to-convert-human-waste-into-space-food-using-microbes
Ref : https://www.google.co.in/amp/www.independent.co.uk/news/science/astronauts-food-human-waste-marmite-iss-international-space-station-nasa-a8179451.html%3famp