மாற்றமடைந்த கொரோனா, பிரிட்டனில் என்ன நடக்கிறது?

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சில நாடுகளில் தடுப்பூசி போடும் வேலையும் துவங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் தான் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த தளர்வுகள் நீக்கப்பட்டு மீண்டுமொரு பொது முடக்கத்தை அறிவித்து அதிர்ச்சி அளித்தார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
இதனால் உலக நாடுகள் பலவும் தங்களது பார்வையை இங்கிலாந்து பக்கம் திருப்பின. என்ன நடக்கிறது இங்கிலாந்தில் என்ற கேள்வியும் எழுந்தன.

கொரோனா வைரஸ் நாளுக்கு நாள், மனிதருக்கு மனிதர் சிறு மாறுபாடு அடைகிறது என்பது ஏற்கனவே அறிந்திருந்தது தான். பொதுவாகவே வைரஸ்கள் இப்படி மாற்றடைவது எதிர்பார்த்த ஒன்றுதான் என்றாலும் கூட இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸில் ஏற்பட்டுள்ள மாறுபாடுகள் தான் அச்சத்தை உண்டாக்கியுள்ளது. இதுவரைக்கும் கண்டறியப்பட்டுள்ள கொரோனா மாதிரிகளை விட 70% வேகமாகப்பரவும் தன்மை உடையவையாக இந்த புதுவகை கொரோனா வைரஸ் இருக்கிறது. இதுதான் மீண்டும் பொது முடக்க அறிவிப்புக்கு இட்டுச்சென்றுள்ளது.



சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட வைரஸ் க்கும் தற்போது பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள வைரஸ்க்கும் பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. குறிப்பாக கொரோனா வைரஸ் மனிதர்களுடன் வைத்துக்கொள்ளும் தொடர்பை நிர்ணயிக்கும் புரோட்டீன் அளவு புதிய வைரஸில் பெருமளவு அதிகரித்திருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இப்படி ஏற்படும் புதிய மாற்றங்களால் கொரோனா வைரஸ் கண்டறியும் சோதனைகளிலும் மாறுபாடு ஏற்படும் அபாயம் இருக்கிறது என்கிறார்கள்.

இந்தியா உட்பட பல நாடுகள் கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு கொடுப்பதில் அக்கறை காட்டி வருகின்றன. இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸில் ஏற்பட்டிருக்கும் பிறழ்வுகள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. கொரோனா வைரஸில் மரபணு மாற்றம் ஏற்பட்டிருந்தால் தற்போது கண்டறியப்பட்டுள்ள மருந்துகள் பலனளிப்பதில் பின்னடைவு ஏற்படுமா என்ற அச்சமும் நிலவுகிறது. பிரிட்டன் வைரஸ் மாறுதல் குறித்து விவாதிக்க இந்திய உயர்மட்டக்குழு அதிகாரிகளின் சந்திப்பு நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

அலட்சியம் வேண்டாம்
தனித்திருப்போம்
மாஸ்க் அணிவோம்
பாதுகாப்பாய் இருப்போம்


பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *