எங்கிருந்து வந்தன வெட்டுக்கிளிகள்? |வெட்டுக்கிளிகள் படையெடுப்பு | கொரோனவை விட ஆபத்தானது | locusts swarms

உலகம் கண்டதிலேயே மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படுவது கொரோனா வைரஸ் தாக்குதல் தான். ஆனால் அதனைவிடமும் ஆபத்தானதாக கருதப்படுகிறது வெட்டுக்கிளிகள் படையெடுப்பு. ஒரு நாளில் இந்தக்கூட்டம் 35000 பேர் சாப்பிடக்கூடிய வேளாண்பொருள்களை சாப்பிட்டுவிடுமாம்.

எங்கிருந்து வந்தன வெட்டுக்கிளிகள்? |வெட்டுக்கிளிகள் படையெடுப்பு | கொரோனவை விட ஆபத்தானது | locusts swarms

வெட்டுக்கிளி கணுக்காலி தொகுதியைச் சேர்ந்த ஒரு பூச்சியினம். வேளாண்மை செய்யப்படும் பயிர் செடிகளுக்குக் சேதம் விளைவிப்பதால் இது உழவர்களின் எதிரி என்று அறியப்படுகிறது. இப்படிப்பட்ட வெட்டுக்கிளிகளால் எத்தியோப்பியா மற்றும் சோமாலியா போன்ற நாடுகளில் பேரிழப்புகள் நடைபெற்று இருக்கின்றன. முந்தைய ஆண்டுகளை விடவும் இந்த ஆண்டு வெட்டுக்கிளிகள் தாக்குதல் சோமாலியாவில் அதிகம் என்பதனால் வெட்டுக்கிளிகளுக்கு எதிராக “அவசரநிலை” பிரகடனம் செய்யப்பட்டிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். 

 

இப்படிப்பட்ட வெட்டுக்கிளிகளின் தாக்குதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் அதிகரிக்கத்துவங்கி இருக்கிறது. தமிழகத்தை தாக்காது என தமிழக வேளாண்துறை சொன்னாலும் கூட தமிழகத்தை கடந்த காலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்கியிருப்பதாக தகவல்களும் கிடைக்கவே செய்கின்றன. 

வெட்டுக்கிளிகள் என்பவை யாவை?

எங்கிருந்து வந்தன வெட்டுக்கிளிகள்? |வெட்டுக்கிளிகள் படையெடுப்பு | கொரோனவை விட ஆபத்தானது | locusts swarms

வெட்டுக்கிளி கணுக்காலி தொகுதியைச் சேர்ந்த ஒரு பூச்சியினம். இன்று மட்டுமல்ல, வரலாற்றில் வெட்டுக்கிளிகள் பல்வேறு சமயங்களில் மிகப்பெரிய வேளாண் சேதங்களை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்த காரணத்தினாலேயே இவற்றைக்கண்டு உலகமே அஞ்சி நிற்கிறது. இந்த பூச்சிகள் மிகப்பெரிய குழுவாக ஒன்றிணைந்து பிராந்தியங்களுக்குள் நுழைகின்றன. அந்தப்பகுதி முழுமைக்குமே பச்சையாக காணப்படும் பயிர்கள், மரங்கள், செடிகள் என எதனையும் விடாமல் இவை தின்று தீர்த்துவிடுகின்றன. 

வெட்டுக்கிளிகளின் நடத்தையும் வாழ்க்கை முறையும்

எங்கிருந்து வந்தன வெட்டுக்கிளிகள்? |வெட்டுக்கிளிகள் படையெடுப்பு | கொரோனவை விட ஆபத்தானது | locusts swarms
 

நன்றாக தாவுவதற்கு ஏதுவாக பின்னிரண்டு கால்களை பெரிதாக கொண்டிருக்கும் இந்த வெட்டுக்கிளிகள், மழை குறைவான நேரங்களில் நீர் நிலைகளில் திட்டு போன்ற பகுதிகளில் மிச்சமிருக்கும் தாவரங்களில் ஒட்டி வாழவேண்டிய சூழல் ஏற்படும். அப்படி திடீரென ஒரு கூட்டமாக அவை சேரும்போது அவற்றின் மத்திய நரம்பு மண்டலத்தில் செரோடோனின் என்ற வேதிப்பொருள் சுரக்கிறது. இந்த வேதிப்பொருள் அவை ஒரு குழுவாக செயல்படவும் ஒரு கூட்டமாக ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்கு தூண்டுதலாகவும் அமைகிறது. 

 

மீண்டும் மழை வரும் போது உருவாகும் ஈரமான மண் பரப்பு மற்றும் புதிதாக முளைக்கும் பச்சை செடிகள் போன்றவை வெட்டுக்கிளிகள் பல மடங்கு உற்பத்தி ஆவதற்கு காரணமாக அமைகின்றன. இந்த சூழ்நிலையில் அவை தனித்தனியாக செயல்படுவதில் இருந்து மாறி ஒரு கூட்டமாக செயல்படுவதை கற்றுக்கொள்கின்றன. வேளாண் பொருள்களை உட்கொண்டு பேரழிவுகளை ஏற்படுத்தும் திறன்கொண்ட இந்த வெட்டுக்கிளிகளின் சில இனங்கள் 128 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட தூரம் கூட பயணிக்கும் வல்லமை உடையவை. 

 

இவற்றினால் காற்றில் அதிக நேரம் பறக்க முடியும். ஆகையால் இவை முயற்சி செய்தால் நாம் நினைத்துக்கூட பார்க்கமுடியாத தூரத்தையும் இவற்றால் கடந்து விட முடியும். 1954 ஆம் ஆண்டு , வடமேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து கிரேட் பிரிட்டனுக்கு ஒரு கூட்டம் பறந்தது, 1988 ஆம் ஆண்டில், மற்றொரு குழு மேற்கு ஆப்பிரிக்காவில் கரீபியன் வரை நீண்ட தொலைவிற்கு பயணித்தது. இது வெறும் 10 நாட்களில் 3,100 மைல்களுக்கு மேல் பயணம் செய்தது.

 

வெட்டுக்கிளி இனங்களில் பாலைவன வெட்டுக்கிளி (ஸ்கிஸ்டோசெர்கா கிரேகரியா) ஒரு மோசமான இனம். ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் காணப்படும் இந்த இனம் அமைதியான காலகட்டத்தில் சுமார் ஆறு மில்லியன் சதுர மைல் அல்லது 30 நாடுகளில் வாழ்கிறது. அசாதாரண சூழலின்போது, இந்த வெட்டுக்கிளிகள் சுமார் 60 நாடுகளில் பரவி பூமியின் ஐந்தில் ஒரு பகுதியை தனது தாக்குதலுக்கு உட்படுத்தும். பாலைவன வெட்டுக்கிளிகள் மனிதர்களில் பத்தில் ஒரு பகுதியினரின் பொருளாதார வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகின்றன.

இந்தியாவில் வெட்டுக்கிளிகள் தாக்குதல்

எங்கிருந்து வந்தன வெட்டுக்கிளிகள்? |வெட்டுக்கிளிகள் படையெடுப்பு | கொரோனவை விட ஆபத்தானது | locusts swarms
 

நமது அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இதுவரைக்கும் வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடைபெற்றுள்ளன. குறிப்பாக ராஜஸ்தானில் அடிக்கடி வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடைபெறும். இந்த ஆண்டும் கூட 6,70,000 ஹெக்டர் பரப்பளவிலான பயிர்கள் சேதமடைந்தன. 1,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. ஆனால் தற்போது மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடைபெற்றுள்ளது. மேலும் பிற மாநிலங்களை நோக்கியும் அவை நகரத்துவங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

 

தற்போது இந்தியாவின் வடக்கு மாநிலங்களில் தாக்குதலை ஏற்படுத்தி வரும் இந்த வெட்டுக்கிளிகள் பச்சை பயிர்களை தேடி பயணம் செய்ய ஆரம்பித்து இருக்கின்றன. ஒருவேளை வழிகளில் அவற்றிற்கு போதுமான அளவு இரை கிடைக்கவில்லையனில் அதன் பயணம் தொடரும் என்பதே எதார்த்தமான உண்மை. 

தமிழகத்திற்கு வருமா வெட்டுக்கிளிகள்?

எங்கிருந்து வந்தன வெட்டுக்கிளிகள்? |வெட்டுக்கிளிகள் படையெடுப்பு | கொரோனவை விட ஆபத்தானது | locusts swarms

வெட்டுக்கிளிகள் தமிழகத்திற்கு வராது என தமிழக வேளாண்துறை தெரிவித்து இருக்கிறது. அண்மையில் இந்த வெட்டுக்கிளிகள் தக்காண  பீடபூமியை தாண்டி இப்படி வந்தது இல்லை என்பதை வைத்தே இப்படி சொல்கிறது தமிழக வேளாண்துறை. வெட்டுக்கிளிகள் தாக்குதலைக் கட்டுப்படுத்த, வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்தைப் பயன்படுத்த வேண்டுமென்றும் மாலத்தியான் மருந்தை மிகப் பெரிய தெளிப்பான்கள், தீயணைப்பு வாகனங்களின் மூலம் தெளிக்க வேண்டுமென்றும் வேளாண் துறை கூறியிருக்கிறது. அரசின் அனுமதியைப் பெற்று ஒட்டுமொத்தமாக வான்வெளியிலிருந்து மருந்தைத் தெளிக்கலாம் என்றும் வேளாண் துறை தெரிவித்துள்ளது.

 

தமிழத்திற்கு வெட்டுக்கிளிகள் வந்துள்ளன, புத்தகங்களில் இருக்கும் குறிப்புகள். 

 

தக்காண பீடபூமியை தாண்டி இதுவரை வெட்டுக்கிளிகள் தமிழகத்தை நோக்கி வந்ததில்லை என தமிழக வேளாண்துறை கூறும் தருவாயில் கடந்த காலங்களில் தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் நடைபெற்றுள்ளது பற்றி புத்தகங்களில் கூறப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 98 வயதாகும் தமிழின் மூத்த படைப்பாளியான கி.ராஜநாராயணன், தென்மாவட்டத்தைத் தாக்கிய வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து தனது முன்னோர்கள் சொன்னதை அப்படியே கோபல்ல கிராமம்’ என்ற நாவலில் எழுதி இருக்கிறார். 

 

அதில் இப்படித்தான் குறிப்பிடப்பட்டுள்ளது, 

 

ஸ்ரீனி நாயக்கரும் எங்க்கச்சியும் ஓடிவந்து முற்றத்தில் பார்த்தபோது திடுக்கிட்டுப் போனார்கள். அவர்கள் பிரியமாக வைத்து வளர்த்த கறிவேப்பிலைச் செடி மீது இலை தெரியாமல் விட்டில்கள் (வெட்டுக்கிளிகள்) மொய்த்துக் கொண்டிருந்தன. அவை விட்டில்கள் என்று சொல்வதா அல்லது அதுக்கு வேறு ஏதாவது பெயர் உண்டா என்பது அவர்களுக்குத் தெரியாது. பார்த்துக்கொண்டிருக்கும் போதே அந்த வளர்ப்புச் செடியில் ஒரு இலைகூட இல்லை!

 

அதில் உட்கார்ந்திருந்த விட்டில் பூச்சியின் நீளம் முக்கால் சாண் ஒருச்சாண் என்றிருந்தது! இதுக்கு முன்னால் அவர்கள் ஆயுளில் இப்படி, இத்தனை பெரிய விட்டிலைப் பார்த்தது கிடையாது; கேள்விப்பட்டதும் கிடையாது.

 

எங்க்கச்சி பயந்துபோய் புருஷனைச் சேர்த்துக் கட்டிக்கொண்டாள். ‘என்ன இது! உலகம் அழிவு காலத்துக்கு வந்துவிட்டதா?

 

உலகம், பிரளயம் வந்து அழியப்போகும் போது மழை பெய்யுமாம்; நாள் கணக்கில் நிற்காமல் சரமழை பெய்யுமாம். அந்த மழைச்சரத்தின் கனம் யானைத் துதிக்கைத் தண்டி இருக்குமாம். ஆனால், யாரும் விட்டில் பூச்சி வந்து உலகத்தை அழிக்கும் என்று சொல்லலையே?’

 

அவர் மனைவியை உதறிவிட்டு கோபத்தோடு போய் அந்த விட்டில்களை அடித்து விரட்டினார். செழுமையான அந்தச் செடி இருந்த இடத்தில் ஒரு கம்பும் அதில் சில விளாருகளுமே நின்றுகொண்டிருந்தது பரிதாபமாக இருந்தது.

 

இன்னும் நீள்கிறது அந்த நாவல்…..

வெட்டுக்கிளிகள் படையெடுப்பு கொரோனவை விட ஆபத்தானது

எங்கிருந்து வந்தன வெட்டுக்கிளிகள்? |வெட்டுக்கிளிகள் படையெடுப்பு | கொரோனவை விட ஆபத்தானது | locusts swarms
 

வெட்டுக்கிளிகள் கூட்டம் ஒருபகுதியில் நுழைந்துவிட்டு அங்கிருந்து நகரும்போது பச்சையாக ஒன்றுமே அந்த இடத்தில் இருக்காது. அவற்றின் முக்கிய உணவே அந்த பச்சையம் தான் என்பதனால் அவை அதனை முழுமையாக சாப்பிட்டு விட்டே நகரும். பாலைவனப் பகுதியை ஒட்டியுள்ள நாடுகளான ஈரான், ஆஃப்கானிஸ்தான் பகுதிகளில் உருவாகும் இந்த பூச்சிகள், படையெடுப்பின்போது ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 4 கோடி பூச்சிகள் வரை இருக்கும். இவை ஒரே நாளில் 80,500 கிலோ பயிர்களை உட்கொள்ளும். இது 35,000 மனிதர்கள் ஒரு நாளில் உட்கொள்ளும் உணவுக்குச் சமமாகும்.

 

கொரோனா என்ற கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமி உலகையே முடக்கிப்போட்டது. தற்போது கண்ணுக்கு தெரிந்த வெட்டுக்கிளிகள் மீண்டும் ஒரு மிகப்பெரிய தாக்குதலை நடத்திக்கொண்டு இருக்கிறது. இவற்றின் தாக்குதல் தொடரும் பட்சத்தில் வேளாண் உற்பத்தி பெருமளவில் பாதித்து அதனால் பசி பட்டினி கூட ஏற்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. இதற்கு ஒரு நவீன தடுப்பு முறை கண்டுபிடிக்கப்பட வேண்டும்.



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *