Li-Fi என்பது தகவல்களை (Data) ஒளியின் உதவியோடு பரிமாறிக்கொள்வதற்கான தொழில்நுட்பம் . Li-Fi is new technology, we can transfer data using Light. ஆங்கிலத்தில் Li-Fi என்பதன் விரிவாக்கம் Light Fidelity . இந்த தொழில்நுட்பத்தினை முதன் முதலாக Harald Haas (German Physicist) என்பவர் TED talks எனப்படும் அறிவியல் அரங்கில் அறிவியலார்கள் மத்தியில் 2011 ஆண்டு Li-fi குறித்து ஆய்வு முடிவினை முன்வைத்தார் . நேரடியாக சோதித்தும் காட்டினார் .
இதற்கென தனியாக Light Bulb உற்பத்தி செய்ய வேண்டியது இல்லை .
நாம் அன்றாடம் வீட்டில் பயன்படுத்துகின்ற விளக்குகளையே தகவல்களை அனுப்பிட பயன்படுத்திடலாம் .
தற்போது தகவல்களை பரிமாறிக்கொள்ளவும் இணையதளத்தை பயன்படுத்திடவும் அதிகப்படியான நபர்கள் பயன்படுத்துவது Wi-fi . இந்த Wi-fi தொழில்நுட்பம் ரேடியோ கதிர்வீச்சினை பயன்படுத்தி தகவல்களை அனுப்புகிறது . தற்போதைய கண்டுபிடிப்பான Li-fi மூலமாக Wi-fi இல் இருக்கக்கூடிய குறைபாடுகளை களைந்து அதிக அளவு தகவல்களை அதிக பாதுகாப்புடன் அனுப்பிட முடியும்.
Li-Fi வடிவமைப்பு எப்படி ?
ஒளியை பயன்படுத்தி Li-fi மூலமாக தகவல்களை துல்லியமாகவும் அதிகமாகவும் அனுப்பிட முடியும் . தற்போதுள்ள ரேடியோ கதிர்வீச்சினை பயன்படுத்துகின்ற Wi-fi மூலமாக ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே தகவல்களை அனுப்பவும் பெறவும் முடியும் . ஆனால் ஒளியை வைத்து அனுப்பிடும்போது (ஒளியை மறைக்கும் தடையேதும் இல்லாதவரை) எவ்வளவு தூரத்திற்கு வேண்டுமானாலும் அனுப்பிடலாம் .
கண்களால் பார்க்கக்கூடிய ஒளியின் அளவான 400 THz முதல் 800 THz வரையிலான ஒளிக்கற்றை (Spectrum) தகவல்களை அனுப்பிடவும் பெறவும் பயன்படுத்தப்படுகின்றது .
இது பின்வரும் முக்கிய பாகங்களை கொண்டிருக்கிறது ,
அதிக ஒளியை உமிழக்கூடிய வெள்ளை நிற LED பல்ப் (தகவல்களை அனுப்ப )
ஒளியை நன்றாக வாங்கும் திறன்கொண்ட சிலிகான் போட்டோடையோடு (தகவல்களை பெறுவதற்கு )
நம் அனைவருக்குமே தெரியும் தகவல்கள் அனைத்துமே 1 , 0 என்கிற முறையில்தான் கடத்தப்படும் . LED விளக்கிலிருந்து வெளிவரும் ஒளியில் தகவல்கள் 1 , 0 என்கிற முறையில் encode செய்யப்படும் . அதாவது ஒளியின் உமிழப்படும் அளவில் ON OFF சில மாறுபாடுகள் ஏற்படுத்தப்படும் . அவற்றை நாம் சாதாரண கண்களால் காண முடியாது .
Li-Fi : How it works?
Li- fi Technology வேலை செய்கின்ற விதம் மிகவும் எளிமையானது . ஒருபக்கம் LED விளக்கும் (Transmitter) மறுபக்கம் வெளிச்சத்தை உணரக்கூடிய சென்சார் (Photo Detector) அமைப்பும் இருக்கும் . LED விளக்கில் இருக்ககூடிய ஒவ்வொரு விளக்கினையும் அணைத்து ஆன் செய்வதன் மூலமாக 0 மற்றும் 1 என்பதனை சென்சார் புரிந்துகொள்ளும் . இந்த முறையில் தகவல்களை அனுப்பிடும்போது LED விளக்கில் ஏற்படக்கூடிய மாற்றங்களை கண்களால் எளிதாக உணர முடியாது .
டிரான்ஸ்மிட்டர் (Transmitter) ஆக இருக்கக்கூடிய LED விளக்கானது Data Network உடன் இணைக்கப்பட்டு இருக்கும் . மறுபக்கம் Receiver தகவல்களை ஒளி வடிவத்தில் பெற்று தகவல்களை decode செய்து பெறப்பட்ட தகவல்களை திரையில் காட்டும் .
Advantages of Li-Fi
Efficiency : Li-Fi தொழில்நுட்பத்தில் சாதாரண LED விளக்கிலிருந்து வரும் ஒளியினை கொண்டு தகவல்கள் பரிமாறப்படுகிறது . ஏற்கனவே வீடுகளிளும் அலுவலகங்களிலும் போதுமான அளவிற்கு LED விளக்குகள் பொறுத்தப்பட்டுள்ளதால் Li-Fi தொழில்நுட்பத்திற்காக தனியாக மின்சாரம் தேவைப்படுவது இல்லை .
ஆகவே அடிப்படை கட்டமைப்புக்கு ஆகிற செலவும் மின்சாரமும் சேமிக்கப்படுகிறது.
High Speed : குறைந்த அளவு குறுக்கீடு , அதிக bandwidth மற்றும் அதிக intensity இருப்பின் அதிக அளவிலான data வை ( > 1 Gbps) அனுப்பிட முடியும் .
Security : தற்போதுள்ள ரேடியோ அலையானது சுவர்களை தாண்டியும் செல்லக்கூடியது . ஆகையால் வெளிநபர்கள் எளிமையாக தகவல்களை திருட முடியும் . ஆனால் தொழில்நுட்பம் முழுவதுமாக ஒளியை சார்ந்திருக்கின்றது . மேலும் அறைக்கு வெளியே ஒளியால் ஊடுருவ முடியாது எனவே வெளிநபர்களால் நமது தகவல்களையோ நெட்ஒர்க்கையோ கட்டுப்படுத்திட முடியாது .
Limitations of Li-Fi
LED விளக்குகள் , அதாவது ஒளி இல்லாமல் இணையத்தையோ தகவல்களையோ பரிமாறிக்கொள்ள முடியாது .
பயன்படுத்தும் கருவி அதாவது Mobile , Laptop Receiver இல் நேரடியாகவோ அல்லது குறைந்தபட்சமாவது LED விளக்கிலிருந்து வரும் ஒளி படுமாறு அமைக்கப்பட வேண்டும் .
சூரிய ஒளி அல்லது வேறு விதங்களில் வரக்குடிய ஒளி தொந்தரவுகளை ஏற்படுத்திட வாய்ப்பு இருக்கின்றது .
ஒளியால் சுவர்களை ஊடுருவி செல்ல இயலாது . ஆகையால் wifi ஐ விட குறைவாக எல்லை சுருங்கிட வாய்ப்பு இருக்கின்றது .
அருமை. அறியாமை போக்க ஆற்றும் பணிக்கு நல்வாழ்த்துக்களும் நன்றிகளும்
நன்றி நண்பரே