காவேரி பிரச்சனை காரணம் என்ன? தீர்க்க முடியாத பிரச்சனையா இது ? உண்மையை அறிந்துகொள்ள படியுங்கள்…
காவேரி பிரச்சனைக்கான காரணம் என்ன? தீர்க்க முடியாத பிரச்சனையா இது ? உண்மையை அறிந்துகொள்ள படியுங்கள்…
பிரச்சனைக்கான காரணத்தை தெரிந்து கொள்வதற்கு முன்பாக நாம் அனைவரும் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொள்ளவேண்டும், யாரும் வன்முறையில் ஈடுபடமாட்டோம் என்று.
என்ன பிரச்சனை :
காவேரியினால் பயன்படும் மாநிலங்கள் கர்நாடகா , கேரளா, தமிழ்நாடு , பாண்டிச்சேரி பாண்டிச்சேரி.
கர்நாடகாவின் தேவை : 425 கன அடி
தமிழகத்தின் தேவை : 566 கன அடி
கேரளாவின் தேவை : 100 கன அடி
பாண்டிச்சேரியின் தேவை : 10 கன அடி
ஆக மொத்தம் சராசரியாக 1100 கன அடி நீர் இந்த நான்கு மாநிலங்களுக்கும் தேவைப்படுகின்றது. ஆனால் இருப்பதோ 730 கன அடி நீர் தான்.
> கர்நாடகா தமிழ்நாடு இரண்டு மாநிலங்களை சேர்ந்த காவேரி டெல்டா பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு காவேரி நீர் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. மேலும் அந்த பகுதிகள் அனைத்தும் வறட்சி ஏற்பட அதிகம் வாய்ப்புள்ள பகுதிகள் (வானம் பார்த்த பூமி) ஆகையால் கண்டிப்பாக காவேரி நீர் என்பது அவசியம் ஆகிறது.
> காவேரிக்கு நீர் ஆதாரமாக (உற்பத்தியாகும்) உள்ள இடங்களில் 30 சதவீதம் தமிழ்நாட்டிலும் 53 சதவீதம் கர்நாடகாவிலும் உள்ளது. அதேநேரத்தில் 54 சதவீத வடிகால் தமிழ்நாட்டிலும் 42 சதவீத வடிகால் கர்நாடகாவிலும் உள்ளன.அதிகமான நீர் உற்பத்தியாகும் இடங்கள் கர்நாடகாவில் இருப்பதனால் கர்நாடகாவும் அதிகமான வடிகால் இருப்பதால் தமிழ்நாடும் அதிக நீரை பங்கிட்டு கொள்ள விரும்புகின்றன.
கர்நாடகாவின் வாதம் என்ன ?
> 42 சதவீத வடிகால் கர்நாடகாவில் இருந்தாலும் 37 சதவீத தண்ணீர் மட்டுமே தங்களுக்கு கிடைப்பதால் காவேரிநீர் பங்கீட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
> வறட்சி பாதிப்பு மிகுந்த பகுதிகளின் அடிப்படையில் பார்த்தால் 63 சதவீத பகுதிகள் கர்நாடகாவில் உள்ளன. அதேநேரத்தில் அதிக வறட்சி மிகுந்த 29 சதவீத பகுதியே தமிழ்நாட்டில் உள்ளது.
> பருவமழை பொய்க்கும் நேரங்களில் கர்நாடக விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டு தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது .
> தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் மழைபொழியும் போது குறிப்பிட்ட அளவு தண்ணீரை தமிழகத்துடன் பகிர்ந்துகொள்ளவேண்டி வருகிறது. அதே நேரத்தில் வடகிழக்கு பருவமழை பொழியும் போது தமிழகம் யாருடனும் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.இது நியாயமற்றது.
இவைகளே கர்நாடகாவின் வாதம்.
தமிழகத்தின் வாதம் :
> இதுவரை தமிழகமே அதிகப்படியான காவேரி நீரை உபயோகப்படுத்திவந்துள்ளது. ஆகவே புதிதாக அணை கட்டுதல் போன்ற காரணங்களுக்காக தண்ணீரை நிறுத்தும் போது அந்த நீரை பயன்படுத்திவந்த மக்கள் பாதிக்க படுகிறார்கள்.எனவே புதிய தேவைகளுக்காக காவேரி நீரை தடுப்பதை நிறுத்த வேண்டும்.
> கர்நாடகாவுடன் ஒப்பிடும் போது 70 சதவீத பரப்பளவு மட்டுமே தமிழகம், அதேநேரத்தில் மக்கள் தொகையின் அடிப்படையில் பார்த்தால் 120% அதிகப்படியான மக்கள் இங்கு உள்ளனர் (மக்கள்தொகை அடர்த்தி அதிகம்). எனவே காவேரி நீரை சார்ந்து வாழும் மக்கள் அதிகம் எனவே அதிகமான நீர் தமிழகத்துக்குத்தான் தேவை.
> கர்நாடக விவசாயிகளை மட்டும் கருத்தில் கொண்டு தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுப்பது நியாயமற்ற செயல். ஒரு நாட்டில் நாம் அனைவரும் சரியான அளவில் தண்ணீரை பகிர்ந்து கொள்ள வேண்டும்.
காவேரி நீர் பங்கீடும் பயன்பாடும் :
தமிழ்நாடு : 419 TMC
கர்நாடகா : 270 TMC
கேரளா : 30 TMC
பாண்டிச்சேரி : 7 TMC
இந்திய நதிகளிலேயே அதிகப்படியாக பயன்படுத்துவது காவேரி நீர் மட்டும் தான் . சராசரியாக 95%
காவேரி நீர் பயன்படுத்தப்படுகின்றது. அதில் குடிநீருக்காக 15% சதவீதமும் 85% பாசனத்திற்காகவும் பயன்படுகின்றது. கர்நாடகாவின் பெரும்பாலான நீர் குடிக்கவே பயன்படுகின்றது. உதாரணமாக பெங்களூர் ,மாண்டியா இதர…
> நான்கில் ஒரு பங்கு தானியங்கள் உற்பத்தியாகும் கர்நாடகாவின் பகுதிகள் காவேரியை சார்ந்துள்ளன
> மூன்றில் ஒரு பங்கு நெல் உற்பத்தி செய்யும் மாவட்டங்கள் காவேரியை சார்ந்துள்ளன.
கர்நாடகாவில் மாண்டியா மைசூர் போன்ற நகரங்கள் அதிகமாக குடிநீருக்காக காவேரியை சார்ந்துள்ளன. அதைப்போலவே தஞ்சாவூர் நாகப்பட்டினம் ஈரோடு போன்ற மாவட்டங்களும் காவேரியை நம்பி உள்ளன.
பிரச்சனைக்கு தீர்வுதான் என்ன?
> நீரை அதிகம் உறிஞ்சும் பயிர்களுக்கு காவேரி நீரை பயன்படுத்துவதை குறைக்க வேண்டும். நெல் கரும்பு உற்பத்தியில் அதிகம் தண்ணீர் வீணாவதை புதிய முறைகளை புகுத்தி குறைத்திடல் வேண்டும்.
> கர்நாடகா தமிழக மொத்த உற்பத்தியில் ஜிடிபி 16 முதல் 18 சதவீதமே விவசாயம் சார்ந்துள்ளது.அதேநேரத்தில் 65% மக்கள் அந்த தொழிலில் தான் ஈடுபடுகின்றனர். எனவே தான் விவசாயிகள் எப்போதும் வறுமையிலேயே இருக்க நேரிடுகிறது. பல நேரங்களில் பருவமழை பொய்த்துவிடும் பொது அது மிகப்பெரிய பிரச்சனையாக வந்துவிகின்றது.
> புதியவகை தொழில்நுட்பங்களை விவசாயத்தில் புகுத்தி தண்ணீர் தேவையை குறைத்து உற்பத்தியை அதிகப்படுத்தும் யுக்திகளை கொண்டுவரலாம்.
> இரண்டு மாநிலங்களும் குளங்களையும் ஏரிகளையும் தூர்வாரி மழைநீரை சேமித்துவந்தாலே பெரும்பாலான நேரத்தேவையை அந்தந்த மாநிலங்களே பூர்த்தி செய்துகொள்ள முடியும்.
> சில நேரங்களில் இரண்டு மாநிலங்களும் விட்டுக்கொடுக்கும் மனநிலைக்கு வரவேண்டும்.
> நதிநீர் இணைப்பு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல் போன்றவைகள் பெரும்பாலான நீர் வீணாவதை தடுக்கும் .
தீர்வு :
புரிதல் தொழில்நுட்பம் மூலமாக மட்டுமே தீர்க்க கூடிய உணர்ச்சிப்பூர்வமான பிரச்சனை காவேரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை. இரண்டு மாநில அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் காவேரி பிரச்சனையை ஓட்டுக்காக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு இந்த தலைமுறையோடு இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர முயல வேண்டும்.
தீர்க்க முடியாத பிரச்சனை என்று எதுவும் இல்லை. வாகனங்களை உடைப்பதும் மக்களுக்கு இடையூறு செய்வதும் பிரச்சனைக்கு தீர்வாகாது.
நன்றி
பாமரன் கருத்து