கனவாகவே முடியுமோ என் கனவுகள் – இப்படிக்கு அவள் (அபிநயா)

பெண் தன் அடையாளங்கள்
எல்லாவற்றையும் இழந்து புதியவளாக மாறுகிறாள் அவள் திருமணத்தில்.உடன் பிறந்தவனோ கட்டியவனோ எவனோ ஒரு ஆண்மகன் செய்த செயலை அவள்

செய்தால் குற்றமாய்  பார்க்கிறது குடும்பம் , சமூகம் என ஒட்டுமொத்தமாய். செயல் ஒன்றே , ஆனால் செய்தது அவள் பெண் .ஒரு ஆண் தெரிந்து தவறு செய்தால் கூட அது ஒருநாள் செய்தி . ஆனால் பெண் தவறி செய்திருந்தாலும் கூட அது ஓர் யுகத்தின் வரலாறு .

காதல் ,கல்யாணம் ,காமம் என்ற சிறையால் வான் நோக்கி பறக்கவேண்டிய கனவின் சிறகை ஒடித்து விடாதீர்கள் . அவள் கனவிற்கு கலங்கரை விளக்கமாக இல்லாவிட்டாலும் நங்கூரமாய் நின்று நசுக்கிவிடாதீர்கள் .

விரும்பிய கனவை நோக்கி பயணிக்க அனுமதியுங்கள் . அவளுக்கு தேவை கனவின் பாதையே அன்றி தவறான பாதை அல்ல . உங்களுக்கு தெரியுமா எத்தனை பெண்களின் கனவுகள் கருகி காற்றிலே கரைந்துவிட்டன. காரணம் அவள் சாமானிய பெண் என்பதால் அல்ல , அவள் கனவையும் சேர்த்து காதலிக்கிற இதயம் கிடைக்காமல் போனதால் .

காதலனாக கணவனாக
அவளின் மனதை
கொள்ளை கொண்டாலும்
உங்களுக்காக தன்னையே
கொடுத்தவளின் கனவினை
சிறகு விரித்து பறக்க விடுங்கள் .
அதை நிறைவேற்றி அந்த வெற்றியின்  சுவாசத்தை அவள் மூச்சுக்காற்றில் கலந்திடுங்கள் .

இல்லாவிட்டால் தியாகம் செய்தவளின் அழுகுரல் ஓய்வின்றி அழுது புலம்பிக்கொண்டே உங்களை சுற்றும் .

இப்படிக்கு
அவள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *