பாமரன் கருத்து சுதந்திர தின உரை

இந்த தலைமுறையினருக்கு …

பாமரன் கருத்து சுதந்திர தின உரை :

நமக்கு சுதந்திரம் அளிப்பதற்கு முன்பாக இந்தியா பல மாகாணங்களாகவும் அரசாட்சியின் கீழாகவும் பிரிந்து கிடந்தது . இதனை வைத்து இந்தியர்களுக்கு சுதந்திரம் அளித்தாலும் அவர்களால் ஓராண்டு கூட அவர்களால் தாங்க முடியாது என நம்மை எள்ளி நகையாடினார்கள் அந்நியர்கள்.

அத்தனையையும் தாண்டி ஒன்றுபட்ட இந்தியாவை படைத்தோம் , அரசியல் சாசனம் படைத்தோம் , மக்களாட்சியை நிர்மாணித்தோம் , மிகப்பெரிய ஜனநாயக  அரசாக 70 ஆண்டுகள் வெற்றிகரமாக கடந்து நிற்கிறோம் . இன்னும் செல்வோம் .

இந்தியாவின் ஆரம்ப காலங்களில் வறுமையின் பிடியில் சிக்கி மக்கள் இறப்பு என்பது சாதாரணமாக இருந்தது . ஐந்தாண்டு திட்டங்கள் , பசுமை புரட்சி , வெண்மை புரட்சி போன்ற பல திட்டங்களின் மூலமாக வறுமையை பெரும்பாலும் ஒழித்துவிட்ட தேசமாகவே இந்தியா திகழ்கிறது .

சராசரி இறப்புவிகிதம் குறைப்பு , போலியோ நோயினை முழு அளவில் குறைத்தது , மருத்துவ வசதியை கிராமப்புற மக்களுக்கும்  கொண்டு சென்றது என சாதனை படைத்துள்ளோம்

அனைத்து இந்திய கிராமங்களும் சாலையின் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன . பெரும் நகரங்கள் தனியாருடன் இணைந்து

சாலையின்மூலமாக இணைக்கப்பட்டுள்ளன.

விண்வெளி சாதனைகள் பலவும் நாம் படைத்துள்ளோம் , குறைந்த செலவில் செவ்வாய்க்கு செயற்கைகோள் அனுப்பியது , ஒரே ராக்கெட்டில் அதிகப்படியான செயற்கையான ஏவி சாதனை படைத்தது என பலவற்றை கூறலாம்  .

இன்று கல்வியில் மிகப்பெரிய வளர்ச்சியினை கண்டுவிட்டோம் .

சமூக ஏற்றத்தாழ்வுகள் பெரும்பாலும் குறைக்கப்பட்டுவிட்டன .

நாம் இவ்வளவு சாதனைகளை படித்திருந்தாலும் நம்மில் பலருக்கு பல அதிருப்திகளும் இருக்கத்தான் செய்கின்றது .
எல்லாவற்றிற்கும் சுதந்திரத்தை கைகாட்டுவது இருட்டில் சூரியனை தேடுவதற்கு ஒப்பானது .

அத்தனைக்கும் நமது தேசமும் சுதந்திரமும் காரணமல்ல ….நாம் தான் காரணம் .அதுபற்றி பேச இது நேரமும் அல்ல .

நம் நாட்டின் காற்றணுக்களில் பரவியுள்ள நம் முன்னோர்கள் இரத்தம் சிந்தி பெற்றுதந்த சுதந்திரத்தை சுவாசியுங்கள் …இது நம் தேசம் .

சுதந்திரம் போற்றுவோம் …

ஒவ்வொருவரும் வாக்களிப்போம் .
தவறுகளுக்கு எதிராக போராடுவோம் .

சமூக ஒற்றுமையை வலியுறுத்துவோம்.

வாழ்க இந்தியா .

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *