இன்சூரன்ஸ் என்றால் என்ன? கட்டாயம் தேவையா? | 3 Important Facts about Insurance Policy | Tamil |

இன்சூரன்ஸ் என்றால் என்ன ? என கேட்டால் , லட்சம் பேரிடம் வசூலிக்கின்ற பணத்தை சில நூறு பேருக்கு இழப்பீடாக  கொடுப்பது என சிலர் சொல்லுவார்கள் . அப்படி சொல்பவர்களும் கூட தங்களுக்கென இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்து வைத்திருப்பார்கள் . ஏனென்றால் நடுத்தர வர்க்கத்தின் நிரந்தரமற்ற வாழ்கைக்கு இன்சூரன்ஸ் மிகவும் அவசியமாகின்றது .

இன்சூரன்ஸ் என்றால் என்ன ? | What is Insurance Policy?

இன்சூரன்ஸ் என்பது குறிப்பிட்ட இடைவெளியில் ப்ரீமியம் தொகையினை இன்சூரன்ஸ் கம்பெனிக்கு செலுத்திவந்தால் நமக்கு எதிர்பாராத விபத்தோ அல்லது மரணமோ ஏற்பட்டால் ஒப்பந்தத்தில் உள்ள தொகை குடும்பத்திற்கு கொடுக்கப்படும்.
நம்மைப்போலவே ப்ரீமியம் தொகை கட்டிடும் பலரிடமிருந்து பெறப்படுகின்ற தொகைதான் இழப்பீடாக கொடுக்கப்படுகின்றது

Life Insurance
Life Insurance

மனிதர்களின் வாழ்வில் எது எப்போது நடக்கும் என கணித்திட முடியாது . ஒருவேளை நமக்கு ஏதேனும் நடந்தாலும் நம்மை சார்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவேண்டுமே என்றே அனைவரும் எண்ணுவோம் .
உதாரணத்திற்கு சுரேஷ் அன்றாடம் வேலை செய்து நாட்களை கழிப்பவர் , அவரிடம் சேமிப்பு என பெரிய தொகையெல்லாம் இல்லை . ஒருநாள் வேலைவிட்டு வருகின்ற வழியில் விபத்து ஒன்றில் சிக்கி விடுகிறார் . அவருக்கு பெரிய காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் அல்லது மரணம் அடைந்திருந்தாலும் அவரால் குடும்பத்திற்கு கிடைக்கவேண்டிய வருமானம் நின்றுபோகும் .
சுரேஷ் இன்சூரன்ஸ் எடுத்திருந்தால் ? அவருக்கான மருத்துவ உதவிப்பணமோ அல்லது இறந்திருந்தால் குடும்பத்திற்கு இழப்பீட்டு தொகையோ இன்சூரன்ஸ் கம்பெனியால் வழங்கப்படும் .
விபத்தோ அல்லது மரணமோ நடந்துவிட்டால் ? இந்த ஒற்றை கேள்விதான் இன்சூரன்ஸ் பாலிசியின் அடிப்படை.
மாதந்தோறுமோ அல்லது ஆண்டுதோறுமோ இன்சூரன்ஸ் தொகை கட்டிடும் சுரேஷ் க்கு விபத்தோ அல்லது மரணமோ எற்படாவிடில் கட்டுகின்ற ப்ரீமியம் தொகை வீண் தான் . ஆனால் நடந்துவிட்டால் ? இந்த ஒற்றை கேள்விதான் இன்சூரன்ஸ் பாலிசியின் அடிப்படை.

பலவகையான இன்சூரன்ஸ் பாலிசிகள்

பாரத பிரதமர் மோடி அவர்கள் தன்னுடைய சுதந்திர தின உரையில் மிகப்பெரிய மருத்துவ காப்பீடு திட்டத்தை அறிவித்தார் . ஆயுஷ்மான் ( Ayushman Bharat Yojana or National Health Protection Scheme ) மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 50 கோடி இந்திய மக்கள் பயனடைவார்கள் என தெரிவித்தார் .

திடீர் இழப்பினை சரி செய்யும் இன்சூரன்ஸ்
திடீர் இழப்பினை சரி செய்யும் இன்சூரன்ஸ்

பலவகையான இன்சூரன்ஸ் பாலிசிகள் தற்போது இருக்கின்றன ,
தனிநபர் காப்பீடு
மருத்துவ காப்பீடு
பயிர் காப்பீடு
சொத்து காப்பீடு
விலையுயர்ந்த பொருள்களுக்கான காப்பீடு
ஓய்வு கால காப்பீடு

இன்சூரன்ஸ் இல் இருக்கின்ற பிரச்சனைகள் ?

1800 களில் ஓரியண்டல் லைப் இன்சூரன்ஸ் கம்பெனி கொல்கத்தாவில் வந்தது . பிறகு 1912 ஆண்டு இந்தியாவில் கொண்டுவரப்பட்டது . 1950 களுக்கு பிறகுதான் இன்சூரன்ஸ் கம்பெனிகள் உருவாவதிலும் வளர்ச்சியடைவதிலும் மிகப்பெரிய போட்டி ஏற்பட்டது எனலாம் .
1990 வரையில் LIC தான் மிகப்பெரிய தனியார் இன்சூரன்ஸ் நிறுவனமாக கோலோச்சிவந்தது  . தற்போது பல இன்சூரன்ஸ் கம்பெனிகள் வந்துவிட்டன .
எத்தனை இன்சூரன்ஸ் கம்பெனிகள் வந்தாலும் இன்சூரன்ஸ் இல் சேருவது மிக மிக எளிமையானதாகவும் இழப்பீட்டை பெறுவது மிக மிக கடினமாகவும் இருக்கின்றது என்பதே உண்மை .
அதிகப்படியான ஆவணங்கள் , அதிக காத்திருப்பு காலம் , காரணம் சொல்லி இழப்பீட்டை மறுப்பது என பல்வேறு பிரச்சனைகளை இன்றும் கொண்டிருக்கிறது இன்சூரன்ஸ் .
ஒரு இன்சூரன்ஸ் பாலிசி எடுங்களேன்🤣🤣🤣

பாமரன் கருத்து
பாமரன் கருத்து

Share with your friends !

One thought on “இன்சூரன்ஸ் என்றால் என்ன? கட்டாயம் தேவையா? | 3 Important Facts about Insurance Policy | Tamil |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *