ஊருக்குள் திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் ..கிராம சபை தீர்மானத்தின் மூலமாக எப்படி தடுக்கலாம் ?

கிராம சபை தீர்மானத்தின் அதிகாரத்தை அறியாதோர் அறிந்துகொள்ளுங்கள்

நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகளை நீக்கினால் விபத்துக்கள் சிறிதாவது குறையும் அப்படி குறைந்தால் அதுவே நல்லது என்கிற உயரிய நோக்கத்தில் உச்சநீதிமன்றம் அனைத்து கடைகளையும் நீக்கிட உத்தரவிட்டது .

இந்த நல்ல உத்தரவை மதித்து அனைத்து கடைகளை மூட வேண்டிய அரசோ எப்படி நெடுஞ்சாலைகளை சாதாரண சாலைகளாக எப்படி மாற்றுவது  என்கிற முயற்சியில் ஈடுபட்டுள்ளது .

அந்த கொடுமை போதாதென்று நீக்கப்பட்ட அனைத்து கடைகளையும் ஊருக்குள் நிறுவி வருகின்றது அரசு . பெரும்பாலான மக்கள் போராடியும் அதனை ஒடுக்கி கடைகளை நிறுவி வருகின்றது .

இதையெல்லாம் சமூகத்திற்கு சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய செய்தி நிறுவனங்களோ  ‘ கடைகளை அகற்றினால் விபத்துகள் எப்படி குறையும் ‘ அரசுக்கு வருமான இழப்பு ஏற்படுமே ‘ என்பது குறித்து விவாதம் நடத்துகின்றன …

வியாபாரிகளும் அரசியல் கட்சிகளும் நடத்துகின்ற தொலைக்காட்சிகளிடம் இருந்து நாமும் எதிர்பார்க்க கூடாது .

சரி உங்கள் பகுதியில் டாஸ்மாக் கடைகளை திறந்தால் தடுப்பது எப்படி ?

முதலாவது முயற்சியாக உங்கள் பகுதி மக்களையும் பெண்களையும் திரட்டி போராடுங்கள் .

அதையும் தாண்டி நிறுவ முயன்றால் மாவட்ட ஆட்சி தலைவரிடம் முறையிடுங்கள் .

எதுவும் உதவவில்லையெனில் உங்களுக்கு அரசியலமைப்பு சட்டம் கொடுத்த பிரம்மாஸ்திரத்தை பயன்படுத்துங்கள் …அதென்ன பிரம்மாஸ்திரம் , கிராமசபை தீர்மானமே அது .

ஆம் தற்போது உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படாத போது கிராமசபையில் தீர்மானம் போட முடியாது என எண்ண வேண்டாம் …கிராம மக்கள் ஒன்றுகூடி உங்களுக்காக நியமிக்கப்பட்ட தனி அலுவலரிடம் சென்று கிராம சபையை கூட்ட சொல்லுங்கள் .அவரால் மறுக்க முடியாது . சில வாரங்களுக்கு  முன்பு கூட நெடுவாசலில் தீர்மானம் போடப்பட்டது .

எனவே கிராம சபையை கூட்டி எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடைகளை நிறுவக்கூடாது என தீர்மானம் போட்டால் யாராலுமே உங்கள் பகுதியில் கடைகளை நிறுவிட முடியாது .

உச்சநீதிமன்றமும் பல முறை கிராம சபையில் போடக்கூடிய தீர்மானம் சட்டமன்ற நாடாளுமன்றங்களில் போடப்படும் தீர்மானங்களுக்கு இணையானது என தெளிவு படுத்தியுள்ளது  ….

தெரிந்துகொள்ளுங்கள் …பகிருங்கள் …வென்றிடுங்கள் .

நன்றி
பாமரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *