How to Choose your Domain | உங்கள் டொமைனை தேர்ந்தெடுப்பது எப்படி?
டொமைன் (Domain) என்பது இணையத்தளத்திற்க்கான முகவரி [Website URL]. அதனை பிரௌசரின் அட்ரஸ் பாரில் பதிவிட்டால் இணைய வசதி இருக்கும் எவராலும் நம்முடைய இணையதளத்தை பார்க்க முடியும் .
தற்போது உபயோகத்தில் பல டொமைன்கள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் ஏற்றவாறு அதன் விலையில் மாற்றம் இருக்கும்.
.com
.in
.org
.int
Things to remember before choosing a domain |டொமைனை தேர்ந்தெடுக்க சில யோசனைகள் :
- மக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளும் வண்ணம் இருக்க வேண்டும்
- நியாபகத்தில் எளிதில் வைத்திருக்க கூடிய அளவிற்கு இருக்க வேண்டும்
- உங்களது துறைக்கு ஏற்றவாறு டொமைன் இருக்க வேண்டும், உதாரணத்திற்கு எக்ஸல் குறித்து நீங்கள் எழுத போகிறீர்கள் என வைத்துக்கொண்டால் learnexcel.com, exceltutorial.com என வைக்கலாம்.
- ஒரு சிலர் அவர்களது பெயரையே பெரும்பாலும் டொமைனில் வைப்பார்கள், அதுகூட சில சமயங்களில் பயனுள்ளதாகவும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளக்கூடியதாகவும் இருக்கும்.
- .com பொதுவாக அனைவராலும் விரும்பபடுகிற டொமைன், அதுமட்டுமில்லாமல் .net .in .org போன்றவைகளும் சிறப்பாகவே இருக்கும்.
- நீங்கள் தேர்தெடுத்த டொமைன் அதற்க்கு முன்பு எவராலும் பயன்படுத்தப்படாததாக இருக்க வேண்டும். ஒரே டொமைனை பலர் பயன்படுத்த முடியாது. இந்த லிங்கை கிளிக் செய்து நீங்கள் விரும்புகிற டொமைன் இருக்கிறதா என முதலில் பார்த்துக்கொள்ளுங்கள். அதற்கேற்றவாறு மாற்றங்களை செய்து உங்களுக்கான டொமைனை பெறலாம்.