How RedBus BookMyShow send notification via WhatsApp? | What can you do more with these Chats?
[sg_popup id=”3271″ event=”inherit”][/sg_popup]
சமீபத்தில் Redbus வாயிலாக பேருந்து டிக்கெட் , ஹோட்டல் அறை புக் செய்தாலோ அல்லது BookMyShow வாயிலாக திரைப்பட டிக்கெட் புக் செய்தாலோ உங்களுக்கு booking details உங்களது WhatsApp எண்ணிற்கு வருவதை கவனித்து இருக்கிறீர்களா?எப்படி செய்கிறார்கள் என தெரியுமா ? அதன் சிறப்பம்சங்கள் தெரியுமா ? உங்களுக்காக இங்கே விளக்கியிருக்கிறேன் வாருங்கள் தெரிந்துகொள்வோம் .
WhatsApp for Business Pilot Programme
இந்தியாவை பொறுத்தவரையில் BookMyShow தான் WhatsApp for Business Pilot Programme இல் முதலில் இணைந்த நிறுவனமாக கருதப்படுகின்றது .
இதன் மூலமாக நாம் ஒவ்வொரு முறை டிக்கெட் புக் செய்திடும்போது அதற்கான தகவல்கள் நமது WhatsApp க்கு அனுப்பி வைக்கப்படும் . அந்த தகவல்கள் WhatsApp ஆல் verify செய்யப்பட்ட BookMyShow அல்லது RedBus எண்ணிலிருந்து நமக்கு அனுப்பி வைக்கப்படும் . நாம் அதில் reply செய்து customer care ஐ தொடர்பு கொள்ளவும் முடியும் . customer care ஐ தொடர்பு கொள்ளமுடியும் என்பது பலருக்கு தெரிவது இல்லை .
உதாரணத்திற்கு நீங்கள் ஒரு திரைப்படத்திற்க்கோ அல்லது வெளியூர் செல்வதற்க்கோ டிக்கெட் புக் செய்துள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம் . அந்த டிக்கெட் பிரதியை பெற வேண்டும் என விரும்பினாலோ அல்லது cancel உள்ளிட்டவற்றினை செய்யவேண்டும் என்றாலோ அந்த WhatsApp எண்ணிற்க்கே மெசேஜ் அனுப்பிடலாம் . எப்படி தொலைத்தொடர்பு நிறுவனங்களின் default customer care வேலை செய்யுமோ அதனை போலவே WhatsApp system ம் தானியங்கி முறையில் பதில் அளிக்கும் .
How does it work?
நீங்கள் ticket புக் செய்தவுடன் உங்களது மொபைல் எண் WhatsApp இல் இருக்கின்றதா என பார்க்கப்படும் . அவ்வாறு இருப்பின் உங்களது WhatsApp எண்ணிற்கு தகவல் அனுப்பி வைக்கப்படும் .
ஒரு குறிபிட்ட நேரத்திற்குள் (1 நிமிடம்) WhatsApp இல் அனுப்பப்பட்ட மெசேஜ் Delivered ஆகிவிட்டதா என WhatsApp சோதிக்கும் . அவ்வாறு delivered ஆகவில்லையெனில் உங்களது மொபைல் எண்ணிற்கு சாதாரண மெசேஜ் ஆக அனுப்பி வைக்கப்படும் (இப்போது இரண்டிலுமே கூட வரலாம்)
நீங்கள் RedBus அல்லது BookMyShow எண்ணை WhatsApp இல் தொடர்பு கொண்டால் நீங்கள் அண்மையில் மேற்கொண்ட பதிவு குறித்த தகவல் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் .
உதாரணத்திற்கு நான் Hi என RedBus எண்ணிற்கு அனுப்பியவுடன் , நான் அண்மையில் மேற்கொண்ட பயணதகவல் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டது . இது ஓர் உதாரணமே .
இதனைப்போன்றே உங்களுடைய டிக்கெட் போன்றவற்றிற்கான தகவலையும் பெறலாம் , Cancel செய்யலாம் .
இந்த வசதி ஏற்கனவே இருக்கின்ற WhatsApp business ஆப்பிற்கு அடுத்தகட்டமாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக WhatsApp API பயன்படுத்தப்படுகின்றது
Send API
Receive API
அடுத்ததாக WhatsApp நிறுவனம் plan it என்ற புதிய வசதியையும் கொண்டுவர இருக்கின்றது . இதன் மூலமாக நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் Chat செய்து plan செய்யலாம் .