How dangerous MEMES | மீம்ஸ்களால் பேராபத்து – தலையில்லாத முண்டமாய் தமிழகம்
இன்று ஏதாவது ஒரு இளைஞரிடமோ அல்லது பொதுமக்கள் எவரிடமோ சென்று உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார் ? யார் உங்களின் நம்பிக்கைக்கு உரியவர்? ,யாருக்கு வாக்களிக்க போகிறீர்கள் ? என கேட்டால் , கிட்டத்தட்ட அனைவரின் பதிலாக இருப்பது என்னவெனில் “அனைவருமே ஊழல்வாதிகள் , எனக்கு எவர் மீதும் நம்பிக்கை இல்லை என்பதுதான் ” .
இதற்கு அவர்களின் செயல்பாடு ஒருபக்கம் காரணமாக இருந்தாலும் மறுபக்கம் நம்மை தலையில்லாத முண்டமாக ஆக்கிவிட்ட எதிரிகளின் சூழ்ச்சியைத்தான் உங்களுக்கு கூற போகின்றேன் .
கருணாநிதி , ஜெயலலிதா இந்த இருவரும் ஆளுமை மிக்கவர்களாக இருந்தார்கள் , இவர்களின் மேல் குற்றச்சாட்டுக்கள் இருந்தாலும் இவர்களை தலைவர்களாக ஏற்றுகொண்டு அவர்களின் பின்னால் மக்கள் நின்றார்கள் , நம்பினார்கள் . அதுதானே அவர்களை ஆளுமை மிக்கவர்களாக ஆக்கியது .
ஆனால் இன்று என்ன செய்துகொண்டிருக்கிறோம் , செய்தி சேனல்களில் ஆரம்பித்து சமூக வலைத்தளங்கள் வரை அனைத்து தலைவர்களையுமே காமெடியர்களாக சித்தரித்துக்கொண்டு இருக்கின்றோம் .
இனியாவது பொதுத்தளத்திற்கு வருபவர்களை மீம்ஸ் என்கிற பெயரால் நகைச்சுவை நடிகர்களாக மாற்றிவிடாமல் ஆளுமையாக மாறிட கொஞ்சம் நியாயமாக நடந்துகொள்ளுங்கள் .
ஒவ்வொருவரின் கொள்கைகளை , முடிவுகளை ஆரோக்கியமான முறையில் விமர்சனம் செய்யுங்கள் . ஆனால் அவர்களை காமெடியர்களாக சித்தரிக்க வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள் .
செய்வோமா ?