கட்டண கொள்ளை – விழி பிதுங்கும் மக்கள் – கண்டுகொள்ளாத அரசு



பேருந்து பற்றாக்குறை : 

அரசு தீபாவளி பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு சிறப்பு பேருந்துகளை விட்டாலும் பற்றாக்குறை ஏற்பட்டு
மக்கள் தனியார் பேருந்துகளை நோக்கி செல்லவேண்டிய நிலை ஏற்படுகின்றது. சிலர் விருப்பத்தின்பேரிலும் செல்கிறார்கள் (அவர்களை விட்டுவிடுவோம்).

அரசு பேருந்துகளில் ஆன்லைன் மூலமாக 60 நாட்களுக்கு முன்பே பதிவு செய்யும் வசதி இருப்பதால் படித்தவர்களும் இணையத்தை பயன்படுத்துபவர்களும் எளிமையாகவும் விரைவாகவும் தங்களுக்கான இருக்கையை பதிவு செய்துகொண்டு விடுகின்றனர். இதனால் நேரில் சென்று இருக்கையை பதிவு செய்ய நினைக்கும் நடுத்தறவர்கத்தினருக்கும் ஏழைகளுக்கும் அரசு பேருந்தில் இடம் கிடைக்காமலே போகும்.

பெரும்பாலும் அவர்களே தனியார் பேருந்தை நோக்கி செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகின்றது.

கட்டண கொள்ளை : 

அரசு என்னதான் ஆர்பரித்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் கட்டண கொள்ளையில் ஈடுபட்டால் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்வோம் என தீபாவளி பொங்கலுக்கு வார்த்தை மாறாமல் கூறினாலும் ஆம்னி பேருந்துகள் கண்டபடி கட்டணத்தை உயர்த்தியே விற்கின்றன. அரசும் பெயருக்கு ஓரிரு பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்துவிட்டு கடமை முடிந்துவிட்டதாக கருத்திவிடுகிறது( உண்மையில் ஒவ்வொரு தனியார் பேருந்து உரிமையாளரும் அதிகார வர்க்கத்தினரின் பாக்கெட்டுகளில் பிடுங்கியதில் ஒரு பகுதியை கொட்டுவதால்  தான் நடவடிக்கை எடுக்கப்படுவது இல்லை)

அனைவருக்குமே தெரிந்த கொள்ளை : 

நேரடியாக பேருந்தில் சீட்டு வாங்கும்போது அதிக கட்டணம் வசூலித்தால் கூட கண்டுபிடிப்பது கடினம் என கூறலாம். ஆனால் வெளிப்படையாக ஆன்லைனில் அதிக கட்டணத்தை விளம்பரம் செய்தே இதனை செய்கிறார்கள். இதனை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க பெரிய சாதனையெல்லாம் செய்ய வேண்டியது இல்லை. இணையத்தில் இரண்டு நிமிடங்கள் தேடினால் அனைவரையும் பிடித்து விடலாம்.

ஆனால் அதில் அக்கறை செலுத்த அரசுக்கு உண்மையில் விருப்பம் இருப்பதாக தெரியவில்லை. இல்லையென்றால் மிக எளிமையான சோதனைகளை செய்தே கட்டணக்கொள்ளையில் ஈடுபடும் முதலாளிகளை பிடித்து விடலாம்.

என்ன செய்ய வேண்டும் : 

அரசே அனைத்துவிதமான பேருந்துகளுக்குமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.

விழாக்காலங்களில் மட்டும் சில சதவிகிதங்கள் அதிகமாக விலையை நிர்ணயிக்க அனுமதிக்கலாம்.

ஆதாரங்களை மக்களிடம் கேட்காமல் ஆதாரங்களை அதிகாரிகள் தான் திரட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *