Future Hospital will be your home? | Tech Update | எதிர்காலத்தில் வீடே மருத்துவமனையாகும்


 

இந்த தலைப்பை பார்த்தபிறகு ஏதோ நோய்வாய்ப்பட்ட சமூகமாக மாறப்போகிறோமா என அஞ்சிட வேண்டாம். வருங்கால தொழில்நுட்பங்கள் மற்றும் சந்தை மாற்றங்களினால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறாமல் நோயாளிகள் அவரவர் வீடுகளிலேயே தங்கி சிகிச்சை எடுத்துக்கொள்ளப் போகிறார்களாம். மருத்துவ துறையில் மிகப்பெரிய புரட்சிகரமான திட்டமாகவும் மக்களுக்கு பயனுள்ள திட்டமாகவும் இது இருக்கும் என்கிறார்கள் இந்த துறையை கண்காணிப்பவர்கள். இது குறித்த ஒரு அறிமுக உரையை Ted Talks எனும் அறிவியல் அரங்கில் வைத்தார் Niels van Namen.

 

Future Hospital will be your home?

 

 

இந்த அறிவியல் அரங்கில் Niels van Namen என்பவர் Why the hospital of the future will be your own home எனும் தலைப்பில் உரையாற்றினார். அதில் அவர் கூறிய காரணங்களையும் கருத்துகளையும் சுருக்கமாக தமிழில் பார்ப்போம்.

 


அதிக நேரம் பிடிக்கும் பயணம்

ஒரு வயோதிக பெண் ஒருவருக்கு கடுமையான நோய். இனி காப்பாற்றிட முடியாது எனவும் ஓரிரண்டு மாதங்களே உயிர்வாழ முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். சிகிச்சையும் தேவைப்படுகிறது. அந்த சிகிச்சையை செய்வதற்காக பயணம் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. மிகவும் கஷ்டப்பட்டு செய்கின்ற அந்த பயணத்திற்கு மட்டுமே அதிக நேரம் வீணாகிறது. ஆனாலும் வழியில்லை, சிகிச்சை எடுக்க மருத்துவமனைக்கு சென்று தானே ஆகவேண்டும். ஓரிரண்டு மாதம் மட்டுமே உயிரோடு இருக்கப்போகும் வயோதிக பெண் ஒருவர் ‘அதிகபட்சமாக அரைமணி நேரம் சிகிச்சைக்காக’ நெடுந்தொலைவு பயணிக்க வேண்டி இருக்கிறது.

 

வீட்டிலேயே சிகிச்சை பெறும் முதியவர்
வீட்டிலேயே சிகிச்சை பெறும் முதியவர்

 

இந்த சிகிச்சை அவருக்கு வீட்டிலேயே கிடைத்தால் வாழுகின்ற ஓரிரண்டு மாதங்கள் அலைச்சல் இல்லாமல் அதிக நேரம் நிம்மதியாக வாழ்ந்திருக்கலாம் அல்லவா?

இதுபோன்றுதான் வயதானவர்களும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களும் மருத்துவமனைக்கு செல்ல நேர விரயமும் பண விரயமும் செய்கின்றனர். இந்த காரணங்களால் பலர் மருத்துவமனைக்கு செல்வதையே குறைத்துக்கொள்கின்றனர்.



அதிக செலவு பிடிக்கும் மருத்துவமனை தங்கும் வசதி

சில மருத்துவ உபகரணங்கள் மருத்துவமனையில் மட்டுமே இருக்குமென்பதனால் பலர் மருத்துவமனையில் தங்குவது அவசியமாகிறது. இன்னும் சில மருத்துவமனைகளோ சிறிய சிகிச்சைக்கு கூட இரண்டு நாள் தங்கவேண்டும் என சொல்லுவார்கள். 30 நாட்கள் எடுத்துக்கொள்ளும் சிகிச்சை என வைத்துக்கொண்டால் அந்த சிகிச்சை நிறைவடைந்து கிளம்பும்போது வழங்கப்படும் பில்லில் பாதிக்கும் அதிகமான செலவு ஹாஸ்பிடல் பெட் க்காக மட்டுமே இருக்கும். சில மணி நேர சிகிச்சைக்காக நாள் முழுவதும் மருத்துவமனை பெட் ஐ ஆக்கிரமிப்பு செய்வதென்பது அவசியமில்லாத ஒன்று, செலவு பிடிக்கும் விசயமும் கூட.

 


 

வீடே இனி மருத்துவமனை

 

ஒரு இணைய வசதி கொண்ட மொபைல் இருந்தால் போதும் தற்போது அனைத்துமே வீட்டின் வாசலுக்கு வந்துவிடுகிறது. அதனைப்போலவே வெகு விரைவில் மருத்துவ சிகிச்சைகளும் வீடுகளுக்கே வந்து கொடுக்கும் முறை வரப்போகிறது. தற்போது பெரிய பெரிய செல்வந்தர்கள் மட்டுமே இந்த முறையை பின்பற்றுகின்றனர். தொழில்போட்டி , தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றின் காரணமாக வீடுகளுக்கே வந்து சிகிச்சை அளிக்கும் முறை வெகு விரைவில் வரலாம்.

கழுத்து குனியாமல் பயன்படுத்துதல்
 

 

அப்படி வரும்பட்சத்தில் நோயாளிகள் வீடுகளில் நிம்மதியாக இருந்து சிகிச்சையினை மேற்கொள்ள முடியும். இது மிகப்பெரிய வருமானம் ஈட்டுகின்ற தொழிலாக மாற இருப்பதனால் புதியவர்கள் இந்த யுக்தியை கையாளலாம்.

 


பாமரன் கருத்து

பாமரன் கருத்து

 

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *