5 ரூபாய் மருத்துவர் மறைவு பெரிய சலியூட் | 5 Rupees doctor, no more

 


 

பலர்  உலகில் தோன்றுகிறார்கள் , பலர் ஒரேவிதமான வேலைகளையும் செய்கிறார்கள் . ஆனால் சிலர் மட்டுமே மக்களின் மனதிலும் வரலாற்றின் மடியிலும் இடம் பிடித்து விடுகிறார்கள் . அப்படி இடம்பிடித்த ஒருவர் தான் இரண்டு ரூபாய் , ஐந்து ரூபாய் டாக்டர் என மக்களால் போற்றப்படும் திரு ஜெயசந்திரன் . மறைந்துபோன அவருக்கு பெரிய வணக்கம் .

 

 


முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 6 கோடி மருத்துவ பில் வெளியாகி “இட்லி  சர்ச்சை” ஏற்பட்டு கொண்டு இருக்கின்றது . அதனையும் தாண்டி நாம் கவனிக்க வேண்டிய விசயம் , சுதந்திர நாட்டில் , அனைவரும் சமமென்று சொல்லக்கூடிய நாட்டில் , மக்களின் வரிப்பணத்தில் ஆட்சி செய்யக்கூடிய நாட்டில் இப்படி கோடிகள் கொடுத்து சாதரண குடிமக்களால் சிகிக்சை பெற முடியுமா?


 

இப்படிப்பட்ட சமத்துவமின்மை பொருந்திய நாட்டில் ஏழை மக்களின் துயர் துடைக்க இயற்கை அனுப்பிய ஒரு மகான் ஐந்து ரூபாய் மருத்துவர்  ஜெயசந்திரன் சார் என்றால் மிகையாகாது .



காஞ்சிபுரம் மாவட்டம் , கூவத்தூருக்கு அருகில் இருக்கக்கூடிய வடபட்டினம் எனும் பகுதியில் பிறந்த ஜெயசந்திரன் பள்ளிப்படிப்பிற்க்காக சென்னைக்கு இடம்பெயர்ந்தார். சென்னை மருத்துவக்கல்லூரியில் மருத்துவம் படித்த இவர் கிட்டதட்ட 48 ஆண்டுகளுக்கும் மேலாக 5 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார் .

 


காசு இல்லையா பரவாயில்லை , இந்தா மருந்து

 

இன்று மருத்துவம் பணம் சம்பாதிக்கும் தொழிலாக மாறிப்போய்விட்டது . சில உயர்தர மருத்துவமனைகளுக்கு ஏழைகள் செல்ல கனவிலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது . அது பணம்படைத்தவர்களின்  மருத்துவ கூடாரமாக இருக்கும் .



அப்படிப்பட்ட சூழலில் ஏழைகளுக்காக தன் வாழ்நாள் முழுமைக்கும் முதலில் 2 ரூபாய் பின்னர் 5 ரூபாய் அதுவும் இல்லாதவர்களுக்கு இலவசமாக எனவும் மருத்துவம் பார்த்து வந்தவர் திரு ஜெயசந்திரன் .



அவருடன் படித்தவர்கள் பல மருத்துவமனைகள் கட்டி பெரிய பணக்காரர்கள் ஆகி மாளிகைகளில் அமர்ந்திருக்கலாம் . ஆனால் ஜெயசந்திரன் தன்னுடைய பணியினால் ஏழைகளின் விலையில்லா மனதிற்குள் ராஜாவாக அமர்ந்திருப்பார் .

 

பல ராஜாக்கள் வர வேண்டும் என்பதே நமது அவா !


பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *