எடிசன் என்னும் கண்டுபிடிப்புகளின் அரசன் – சிறப்பு பதிவு
அவர் உலகின் மிக சிறந்த கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார் அதற்கான பாராட்டுவிழாவிற்கு அழைக்கிறார்கள் . ஆனால் அதற்கு அவர் வருவதில்லை . காரணம் கேட்டால் ” நேற்றைய கண்டுபிடிப்பை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை ” எனக்கூறி ஆய்வுக்கூடத்திற்கு சென்று விடுவார் .
இப்படி ஒருவரால் இருந்திருக்க முடியுமா ? இருந்திருக்கிறார் அவர்தான் உலகின் மிக சிறந்த யாராலும் தொட்டுவிட முடியாத எண்ணிக்கையிலான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கிற தாமஸ் ஆல்வா எடிசன் (பிறந்த தினம் இன்று “பிப்ரவரி 11 1847”)
சுமார் 1300 கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி 1093 க்கு காப்புரிமை பெற்றுள்ளார் .
ஆசிரியர்களால் மந்தமான மாணவன் என அழைக்கப்பட்ட எடிசன் வீட்டிலேயே கல்வி கற்றவர் . எதையும் சோதனை செய்து பார்த்து அதிலிருந்து கற்றுக்கொள்ளும் பழக்கம் அவரிடம் இருந்தது . ஆய்வுகளுக்கு இடையிடையே தூங்கும் பழக்க முடையவர் . சில நேரங்களில் இவரது தூக்கம் 30 வினாடிகளில் கூட முடிந்துபோகுமாம் .
பலரும் மந்தமானவன் என அலைக்கழித்து ஒதுக்கிய ஒருவர் தன்னுடைய சுய முயற்சியால் பல ஆய்வுகளை நடத்தி அதில் சந்தித்த தோல்விகளின் மூலமாக கற்று மிக சிறப்பான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார் .
வாய்ப்புகள் இல்லாத அந்த காலத்திலேயே ஒருவரால் இத்தனை கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியிருக்கும்போது வாய்ப்புகள் இருக்கின்ற இக்காலத்தில் பிறந்திருக்கும் நம்மால் கற்க முடியாதா ? கண்டுபிடிப்புகளை நிகழ்த்திட முடியாதா ?
நிச்சயமாக முடியும் , அதற்கு உங்களுக்கு இந்த இரண்டு இருந்தால் போதும் .
ஆர்வம்
விடாமுயற்சி
கற்பதில் ஆர்வமும் தோல்விகளில் துவண்டுவிடாத விடா முயற்சியும் இருந்தால் நிச்சயம் நீங்களும் தாமஸ் ஆல்வா எடிசன் ஆகலாம் .
பிறப்பு :
தாமஸ்அல்வா எடிசன்
பெப்ரவரி 11, 1847
மிலன், ஓஹியோ, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
இறப்பு :
அக்டோபர்
18, 1931(அகவை 84)
வெஸ்ட் ஆரஞ்சு, நியூஜெர்சி, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
நன்றி
பாமரன் கருத்து