நோட்டு இழப்பு ; அசால்ட்டு கேள்விகள்

மங்குணி : ஆமா முன்னாடி என்ன சொன்னிங்க பேங்க் காரவங்க சரியா வேலை பாக்காம கூட்டு சேர்ந்துட்டாங்களா ?

மணியன் : ஆமா சொன்னேன்

மங்குணி : அதான் அவரு யாருகிட்டயும் கேக்க கூட இல்லையாமே அப்பறம் என்ன பண்ணுவாங்கலாம் ?பிரச்சனையை சமாளிக்க நோட்ட அவசர அவசரமா விட்டா போதும்னு இருந்துட்டாங்களாம்

மணியன் : என்னடா இவ்வளவு விவரமா
பேசுற ?

மங்குணி : வெளியில போயி பாருங்கய்யா விட்டு கிலி கிழினு கிளிக்கிறான்

மணியன் : இன்னும் என்னடா பேசிக்கிறாங்க மங்குணி ?

மங்குணி : வச்சிருந்த கருப்பு பணமெல்லாம் இப்போ வெள்ளை ஆயிடுச்சாம்

கள்ளப்பணம்  கள்ளப்பணம் னு சொன்னாங்களே 98 .1 % நோட்டு திரும்ப வந்திருச்சாமே ?

மணியன் : இன்னும் இருக்காடா ?

மங்குணி : இருக்கு இருக்கு …அவ்வளவு பணம் வந்தும் வட்டியை குறைக்காம நாம டெபாசிட் பண்ற பணத்துக்கு வட்டியை கொறச்சுப்புட்டாங்களாமே ?

சரி அதுகூட பரவால்லையாம் , அவ்வளவு காசு வந்தும் பேங்க் க்கு பல லட்சம் கோடியை கடன் எதுக்கு கொடுக்கணும்னு கேக்குறானுக ?

பணக்காரன் எண்ணிக்கை இந்தியாவில அதிகமாகிகிட்டே போகுதாமே அவங்ககிட்ட தான் குவிஞ்சு கிடக்குதாமே அதை எடுக்காம அப்பாவிககிட்ட அஞ்சையும் பத்தையும் புடுங்கினா எப்படி சரியாகும்

மணியன் : என்னடா பொருளதார நிபுணர் மாதிரி பேசுற

மங்குணி : இவங்க கேக்குற கேள்வியை கேட்டாலே ஆயிரலாம் போலையா

மணியன் : சரி சரி நீ வேலைய பாரு நான் போய் கொஞ்சம் கேட்டுட்டு வரேன் .

மங்குணி : அய்யா சொல்ல மறந்துட்டேன் இது பகல் திருட்டுனு மன்மோகன் சிங்காமே அவரு சொன்னாராம் .

மணியன் : நான் போயி பாத்துட்டு வரேன் …வேலைய பாருடா …நீயும் ஏமாத்திராத …

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *