பெண் திருமண வயது 21 | மாற்றம் அவசியமா? | விவாதங்கள்

இந்தியாவின் 74வது சுதந்திர தின உரையின் போது பெண்களின் திருமண வயதை 18இல் இருந்து 21 ஆக உயர்த்த கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். தற்போது ஆண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களுக்கு 18.

நாட்டின் 74வது சுதந்திர தினம் அண்மையில் கொண்டாடப்பட்டது. அப்போது உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 இல் இருந்து 21 ஆக மாற்ற எடுக்கப்பட்டு வரும் பணிகள்” குறித்து பேசினார். பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயதை உயர்த்தும் பிரதமரின் முடிவை கட்சி பேதமில்லாமல் பலரும் ஆதரித்து வருகிறார்கள். தமிழகத்தை பொறுத்தவரைக்கும் ராமதாஸ், கனிமொழி உட்பட பலரும் வரவேற்பு தெரிவித்து இருக்கிறார்கள். வெற்று விசயங்களை சமூக வலைதளங்களில் விவாதித்துக்கொண்டு இருக்காமல் இவ்விசயம் குறித்து விவாதிப்பது மிகவும் அவசியமான ஆரோக்கியமான ஒன்று. 

திருமண வயது | தற்போதுள்ள சட்டங்கள் என்ன?

தமிழ்ப்பெண்

குறைந்தபட்ச திருமண வயது நிர்ணயிக்கப்பட்டதற்கான மிக முக்கியக்காரணம் குழந்தை திருமணத்தை தடுப்பது, சிறார்களை வன்கொடுமை செய்வதை தடுக்கவும் தான். பொதுவான சட்டங்கள் பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது 18 எனவும் ஆண்களுக்கு 21 எனவும் குறிப்பிடுகிறது. ஆனால் தனி சட்டங்கள் இதில் சில மாறுதல்களை கொண்டுள்ளன. அதன்படி, இந்து திருமணச் சட்டம், 1955, மணமகனுக்கு குறைந்தபட்ச வயதாக 18 ஆண்டுகளையும், மணமகனுக்கு குறைந்தபட்ச வயதாக 21 ஆண்டுகளையும் நிர்ணயிக்கிறது. ஆனால் குழந்தை திருமணம் சட்டவிரோதமானவை அல்ல. அதேபோல இஸ்லாத்தில், பருவ வயதை அடைந்த ஒரு மைனரின் திருமணம் செல்லுபடியாகும். இவை அனைத்திற்கும் முட்டுக்கட்டை போடுவது போல சிறப்பு திருமண சட்டம், 1954 மற்றும் குழந்தை திருமண தடை சட்டம் 2006 ஆகியவை முறையே பெண்கள் மற்றும் ஆண்களுக்கான திருமணத்திற்கான ஒப்புதலின் குறைந்தபட்ச வயது 18 மற்றும் 21 ஆண்டுகளை பரிந்துரைக்கின்றன.

ஏன் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி வயதுத்தகுதி?

ஆண்களுக்கும் பெண்களுக்கும் குறைந்தபட்ச வயதுத்தகுதியில் வேறுபாடு இருப்பதற்கான காரணங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எங்கும் இல்லை. பொதுவாக அனைத்து மதங்களிலும் கணவனை விட மனைவிக்கு குறைந்த வயது இருப்பதே பின்பற்றப்படுவதனால் இந்த நடைமுறையே பின்பற்றப்படுகிறது. சிலர் இதற்கு காரணமாக “ஒரே வயதுடையவர்களில் பெண்கள் அதிக முதிர்ச்சியுடன் காணப்படுகிறார்கள். ஆகவே அவர்களுக்கு விரைவாக திருமணம் செய்வதே சரியானது என குறிப்பிடுகிறார்கள். ஆனால் இந்த இரண்டு விவாதங்களையும் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிப்பதற்கான குழு (CEDAW) எதிர்க்கிறது. பெண்களின் உடல் தகுதி மற்றும் அறிவுத்தகுதி உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு ஆண்களுக்கு ஒரு சட்டம் பெண்களுக்கு ஒரு சட்டம் இருப்பதை இக்குழு எதிர்க்கிறது. 

பிரதமர் குறிப்பிட்ட குழு எந்த மாதிரியானது?

இந்த ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி பெண்களின் வயது, தாய் இறப்பு விகிதம், பெண்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கான விசயங்கள் உள்ளிட்டவைகளை ஆராய்வதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம். கர்ப்பிணி, பிறப்பு மற்றும் அதன்பிறகு திருமண வயது மற்றும் தாய்மையின் ஆரோக்கியம், மருத்துவ நல்வாழ்வு மற்றும் தாய் மற்றும் பிறந்த குழந்தை, குழந்தை அல்லது குழந்தையின் ஊட்டச்சத்து நிலை ஆகியவற்றை பணிக்குழு ஆராயும். பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18 இல் இருந்து 21 ஆக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆராயும். 

டாக்டர் ராமதாஸ், கனிமொழி வரவேற்று குறிப்பிட்டது என்ன?

பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21க்கு உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கதக்கது.இந்த நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் மேலும் தாமதமின்றி நிறைவேற்ற..#womenempowerment

1/3

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 16, 2020

ஒரு குறிப்பிட்ட பிரிவினர் இன்னொரு பிரிவினரின் சொத்துக்களை குறிவைத்து பெண்களை காதல் வயப்படுத்துவதாக நெடுங்காலமாகவே குற்றம் சாட்டி வந்தார். இதுபோன்ற விசயங்களை தடுக்கவும் ஹார்மோன் கோளாறுகளால் பெண்கள் எளிதில் காதல் வலையில் சிக்கி பின்னர் அது குறித்து கவலைப்படுவது உள்ளிட்டவற்றை தடுக்கவும் பெண்கள் வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் சிறப்புற்று விளங்கவும் பெண்களின் திருமண வயதை 18 இல் இருந்து 21 ஆக மாற்றுவது அவசியம் என குறிப்பிட்டு இருந்தார். பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21க்கு உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்ற பிரதமரின் அறிவிப்பு வரவேற்கதக்கது.இந்த நேரத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கான 33% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தையும் மேலும் தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் மக்களவை உறுப்பினர் கனிமொழி அவர்கள் தெரிவித்திருக்கிறார். 

இந்த விசயத்தில் என்னுடைய கருத்து என்ன?

Women sun rise

என்னுடன் படித்த எத்தனையோ திறமையான பெண்கள் வேலைக்கு செல்லாமல் இருப்பதை கண்டிருக்கிறேன். அவர்கள் என்னை விட படிப்பில் கெட்டிக்காரர்களாக இருந்தவர்கள், என்னைப்போலவே வேலைக்கு சென்றிருந்தால் இந்நேரம் அவர்கள் மிக உயர்ந்த நிலைக்கு சென்று இருப்பார்கள். ஆனால் திருமணம் எனும் விசயத்தில் அவர்கள் அகப்பட்டுக்கொண்டார்கள். திருமணம் வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பது மாறி திருமணம் தான் முழு வாழ்க்கையே என்ற எண்ணம் பெண்களின் மத்தியில் திணிக்கப்படுகிறது. திருமணத்திற்கு படித்த மாப்பிள்ளை கிடைப்பார் என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே பெண் குழந்தைகளை படிக்க வைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும் இழப்பு இல்லை. இந்த தேசத்தின் வளர்ச்சிக்கும் அது பேரிழப்பு தான். 21 வயது வந்தால் தான் திருமணம் செய்து வைக்க முடியும் என்ற கட்டாயம் ஏற்பட்டால் படித்து முடித்த இடைப்பட்ட காலத்தில் பெண்களை நிச்சயமாக வேலைக்கு அனுப்புவார்கள். ஒருமுறை வேலைக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்துவிட்டால் அவர்கள் அதனை கெட்டியாக பிடித்துக்கொள்வார்கள். எப்படி குறைந்தபட்ச வயதுதகுதி குழந்தை திருமணத்தை பெரிய அளவில் குறைந்ததோ அது போன்றதொரு மாற்றம் இதிலும் ஏற்படும். நல்ல உடல்தகுதி பெற்றவுடன் குழந்தைப்பேறு உள்ளிட்ட விசயங்களை அடைவதனால் பெண்களின் உடல் சார்ந்த விசயங்களிலும் இதனால் பெரிய மாற்றம் ஏற்படும். இந்தக்கட்டுரையை பிறருக்கும் பகிருங்கள் நண்பர்களே!

இதுபோன்ற கட்டுரைகளை தொடர்ச்சியாக படிக்க எங்களது பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து இணைந்திடுங்கள்


Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *