காவிரி அநீதி | பிரதமர், உச்சநீதிமன்றத்திற்கு கண்டணம்

 

இனி ஒரு உலகப்போர் நிகழுமெனில் அது நிச்சயமாக தண்ணிருக்காகத்தான் இருக்கும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள் . அப்படிப்பட்ட போர் இரண்டு நாடுகளுக்கு இடையில் நடந்தால் கூட நான் இவ்வளவு அச்சப்பட மாட்டேன் . ஆனால் ஒரு நாட்டிற்குள் இருக்கும் இரண்டு மாநிலங்களுக்கு இடையிலேயே தண்ணீருக்காக போர்க்களம் பூண்டிருப்பதை காணும்போது நான் அச்சப்படுகிறேன் .
இவர்களா இந்த தேசத்தை ஒற்றுமையாக வைத்துகொண்டு முன்னேறி செல்ல போகிறார்கள் . 

மத்திய அரசும் பிரதமரும்

 

அடுத்தது மத்திய அரசும் பிரதமரும் , ஒவ்வொரு அரசியல்வாதியும் வென்று விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு அரசியல் சாசனத்தை மதித்து நடப்பேன் என பதவிக்கு வந்துவிட்ட பின்பு , தான் சார்ந்த கட்சியின் நலன் கருதி தேசத்தின் நலனையும் அரசியலமைப்பு சட்டத்தையும் மதிக்காமல் செயல்படுவது என்பது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது .
அதிக அளவில் பேசும் பிரதமர் மோடி , நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய கடமை தனக்குத்தான் இருக்கின்றது என்பதனை அறிந்த பின்னரும் வெறும் கர்நாடக தேர்தலை கணக்கிலே கொண்டு ஊமை நாடகம் போடுவது கண்டனத்திற்கு உரியது . 

உச்சநீதிமன்றம்

 

அடுத்தது உச்சநீதிமன்றம் , பல வார காலம் கெடு மேல் கெடு கொடுத்துக்கொண்டே போகிறது உச்சநீதிமன்றம் . காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது அவ்வளவு கடினமான பணி அல்ல என்பதும் கர்நாடக தேர்தலை கணக்கில் கொண்டு தான் மத்திய அரசு இவ்வாறு செயல்படுகின்றது என்பது பட்டவர்த்தனமாக தெரிந்தும் வெறும் பிராமண பத்திரங்களை தாக்கல் செய்யுங்கள் , கண்டணத்தை தெரிவிக்கிறோம் என கூறி ஒரு வாரம் வழக்கினை தள்ளி வைத்து விடுகின்றனர் . 

 

உச்சநீதிமன்றம் 4 டிஎம்சி தண்ணீரை திறந்து விடு என உத்தரவிட்டால் சிறிது நேரத்தில் கர்நாடக முதல்வர் தண்ணீரை திறக்க முடியாது என பேட்டி கொடுக்கிறார் . இந்த அளவிற்கு தைரியத்தை கொடுத்தது எது ? இவ்வளவு நாட்கள் உத்தரவை மதிக்காதவர்களை தலையிலே கொட்டாமல் பொய்யாக முதுகிலே தட்டியதன் விளைவே. மாநில நலன் சார்ந்த பிரச்சனையில் இப்படி மெத்தனமாக அரசிற்கு ஆதரவாக செயல்படுகிற நீதிமன்றத்திற்கு கண்டணத்தை பதிவு செய்கிறேன்.  

தற்போது மக்கள் உண்ணிப்பாக அனைவரது செயல்பாடுகளையும் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள் . நீதிமன்றத்தினை மக்கள் மதிக்கும் வரையில் ஜனநாயகத்திற்கு ஆபத்து இல்லை . அந்த நம்பிக்கையை கலையாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு நீதிமன்றத்திற்கு தான் இருக்கின்றது . 

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *