கௌரவம் எப்போதும் போலியானது தான் !

கௌரவம் என்பது போலியானது என்பதை நாம் உணரவேண்டும். அனைத்து அதிகாரமும் இருக்கும்போது அமைதியாக நடந்துகொள்ளும் ஒருவர் தான் பிறரால் நேசிக்கப்படுகிறார், மதிக்கப்படுகிறார். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட்டால் யாருக்கும் தொந்தரவில்லாமல் நம்முடைய வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு சென்றுவிட முடியும்.

Read more

சீன பொருள்களை முற்றிலும் புறக்கணித்துவிட முடியுமா? | boycott china

ஒவ்வொருமுறை சீனாவுடன் பிரச்சனை எழும்போதும் சீன பொருள்களை புறக்கணியுங்கள், சீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தாதீர்கள் என்பது போன்ற கோரிக்கைகள் எழுகின்றன. ஆனால் சீனாவையும் சீனத்து பொருள்களையும் அவ்வளவு எளிதாக

Read more

யானையின் மரணத்தில் மதவாதம்….

ஒரு செய்தி வெளியாகி பரபரப்பாக பகிரப்பட்டுக்கொண்டிருந்தால் அது உண்மையாகவும் இருக்கலாம் பொய்யாகவும் இருக்கலாம். நீங்கள் சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொண்டால் அதற்குள் அந்த செய்தி பற்றிய உண்மை தெரிந்துவிடும். அதன்பிறகு பகிரலாமா வேண்டாமா என்கிற முடிவை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும். நீங்கள் மதவாதத்தை தூண்டவில்லை, எனக்கு நம்பிக்கை இருக்கிறது. சாதாரண பொதுமக்கள் 100 பேர் யானை இறந்துவிட்டது என பதிவு செய்வீர்கள். ஒரேயொரு நபர் இதற்கெல்லாம் அவர்கள் தான் காரணம் என பதிவிடுவார். மக்கள் இரண்டையும் தொடர்புபடுத்திக்கொள்வார்கள். இதுவே மனித இயல்பு.

Read more

கலைஞராக இருப்பதன் முக்கியத்துவம் – என் ராம் எழுதிய கட்டுரை

பேசும் வார்த்தைகளுக்கும் எழுதும் எழுத்துகளுக்கும் உள்ள மதிப்பையும் வலிமையையும் உணர்ந்த தலைசிறந்த தேசியத் தலைவர்கள் வரிசையில் வருபவர் கலைஞர். திலகர், காந்தி, நேரு, இஎம்எஸ், அண்ணா ஆகியோரின் வரிசையில் வைக்கத்தக்கவர் – என் ராம், தி இந்து

Read more

காந்தியை மகாத்மாவாக மாற்றிய “ரயில் சம்பவம்” | தென்ஆப்பிரிக்கா| ரயில்| பீடர்மரிட்ஸ்பர்க்

1893 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதி இரவு, இளம் வயது வழக்கறிஞரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பீடர்மரிட்ஸ்பர்க் என்ற ரயில் நிலையத்தில் ஏறுகிறார். முதல் வகுப்பில் பயணம் செய்திட அவரிடம் டிக்கெட் இருந்தபோதும் அங்கே பணியாற்றிய வெள்ளை இனத்தவர் “இந்தப்பெட்டியில் நீங்கள் பயணம் செய்யக்கூடாது” என்றார். “ஏன் நான் பயணம் செய்யக்கூடாது? என்னிடம் தான் டிக்கெட் இருக்கிறதே” என்றார் காந்தி. “உங்களிடம் டிக்கெட் இருந்தாலும் இந்தப்பெட்டியில் பயணம் செய்ய முடியாது, இதில் வெள்ளையர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். இறங்குங்கள்” என்றார் வெள்ளை இனத்தவர். “முடியாது” என மறுத்தார் காந்தி. பின்னர் தான் காந்தி அவர்கள் அந்த ரயில் பெட்டியில் இருந்து வெளியே தள்ளப்பட்டார்.

Read more

மனைவி எப்படி இருக்க வேண்டும், உதாரணம் ஜென்னி மார்க்ஸ் தான்

வெற்றிகரமான காதல் ஜோடிகளுக்கு உதாரணமாக ஒரு ஜோடியை நீங்கள் குறிப்பிட வேண்டும் என்றால் நிச்சயமாக அது கார்ல் மார்க்ஸ் – ஜென்னி மார்க்ஸ் ஜோடியைத்தான் நான் குறிப்பிடுவேன், கார்ல் மார்க்ஸ் வரலாற்றை அறிந்தவர்கள் அப்படித்தான் செய்வார்கள். “மூலதனம்” என்ற அற்புதமான நூலை உலகிற்கு அளித்த மிகச்சிறந்த பொதுவுடைமைவாதி கார்ல் மார்க்ஸ் என்றால் அவர் அந்த சாதனையை படைக்க அவருக்கு பக்கபலமாக செயல்பட்டவர்கள் இருவர், ஒருவர் மனைவி ஜென்னி, இன்னொருவர் நண்பர் ஏங்கல்ஸ்.

Read more

இன்டர்நெட் – இனி இந்திய குடிமகனின் அடிப்படை உரிமை

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி வந்த அரசியல் பிரிவு 370 ஐ மத்திய அரசு நீக்கியது. அப்போது வன்முறைகள் எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற காரணத்திற்காக ஊரடங்கு உத்தரவு, மிக முக்கிய தலைவர்களை வீட்டுக்காவலில் வைப்பது என நடவடிக்கைளை எடுத்தது அரசு. மிக முக்கியமாக, ஜம்மு காஷ்மீர் முழுவதும் இன்டர்நெட் வசதியை முடக்கி வைத்தது மத்திய அரசு. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை ஆகஸ்ட் முதல் விசாரித்து வந்தது உச்சநீதிமன்றம். தற்போது வெளியிடப்பட்டுள்ள தீர்ப்பில் இன்டர்நெட் இந்தியக்குடிமகனின் அடிப்படை உரிமை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வரவேற்கப்படக்கூடிய தீர்ப்பாக இது பார்க்கப்படுகிறது.

Read more

ஈரான் – அமெரிக்கா இடையே என்ன பிரச்சனை? | Iran – US Problem Explained in tamil

நான் இந்தப்பதிவை எழுதிக்கொண்டு இருக்கும் போது ஈரான், ஈராக்கில் இருக்கும் அமெரிக்க போர் நிலைகளின் மீது வான்வெளி ஏவுகனை தாக்குதலை நடத்திக்கொண்டு இருக்கிறது. இந்த தாக்குதல் ஈரான் போர்த்தளபதி காசிம் சுலைமானியின் படுகொலைக்கு பதிலடி என சொல்லப்படுகிறது.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சிக்கல் இருந்து வருவதனை அனைவருமே அறிந்திருப்போம். இந்த சிக்கல்களும் மோதல்களும் இன்று நேற்று அல்ல, அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாகவே நடைபெற்று வருகிறது. இந்தப்பதிவில் இயன்றவரையில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எங்கு பிரச்சனை துவங்கியது முதற்கொண்டு பல தகவல்களை கொடுத்திருக்கிறேன்.

Read more

நெருங்குகிறது பிடிமானம் : ஸ்மார்ட்போன் பயனாளர்களுக்கு வரப்போகும் கட்டுப்பாடு

விழிப்புணர்வுக்காக மீம்ஸ் போடுவது மறைந்து இப்போது தனி நபர்களை தவறாக சித்தரித்து அல்லவா மீம்ஸ் போடுகிறோம். யார் அந்த உரிமையை உங்களுக்கு கொடுத்தது? சாட்டையை சுழற்றப்போகும் நீதிமன்றம்.

Read more

காதல் கௌரவம் கொலைகள்

இன்பமாய் வாழ நினைத்துஇரண்டறக்கலந்த இதயங்களில்பாய்ந்தோடிய ரத்தத்துளிகள்மண்ணோடு கலந்தனவே அவை வெறும் இரத்தத்துளிகளாஅல்ல அல்ல – மனித குலத்தின் குரல்வளையைஜாதி என்னும் கூரிய கத்தி கொண்டு கிழித்ததனால்வழிந்தோடிய பாவத்

Read more