காந்தி கொலை வழக்கு விசாரணை எப்படி நடைபெற்றது?

இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட மகாத்மா காந்தி அவர்கள் ஜனவரி 30,1948 ஆம் ஆண்டு கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுதந்திர இந்தியா சந்தித்த மிக முக்கிய வழக்குகளில் ஒன்றாக கோட்சே வழக்கு பார்க்கப்படுகிறது. இந்திய வரலாற்றை படிக்கும் எவரும் காந்தி கொலை வழக்கை படிக்காமல் முடிவை எட்டமாட்டார்கள். அப்படிப்பட்ட காந்தி கொலை வழக்கு விசாரணை நடைபெற்ற விதத்தை எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய எனது இந்தியா புத்தகத்தில் எதார்த்த நடையில் எழுதி இருக்கிறார்.

Read more

மாபெரும் தமிழ்க் கனவு | Maperum Tamil Kanavu Tamil Book

அரசியல் ஆர்வம் ஊற்றெடுக்கும் தமிழ் பிள்ளைகளுக்கு கடந்த கால அரசியல் ஆளுமைகளை பற்றிய வரலாற்றை தெரிந்துகொள்வது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை ஆட்சி செய்துவரும் தமிழகத்தின் இருபெரும் கட்சிக்கும் ஒரே முன்னோடியாக திகழ்கின்ற பேரறிஞர் அண்ணா அவர்களை பற்றிய வரலாறு இக்கால தமிழ்ப் பிள்ளைகளுக்கு கிடைக்கப்பெற வேண்டும்.

அறிஞர் அண்ணா அவர்களைப்பற்றிய சிறு சிறு தொகுப்புகள் ஆங்காங்கே சில புத்தகங்களாக தொகுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் ஒட்டுமொத்தமாக அவரது வாழ்வையே சுருக்கி நமக்கு விளங்க வைக்கக்கூடிய ஒரு புத்தகத்திற்கான இடம் காலியாகவே இதுவரைக்கும் இருந்து வந்தது. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஒரு புத்தகம் வந்திருக்கிறது. அந்தப் புத்தகம் தான் “மாபெரும் தமிழ்க் கனவு”

Read more

பாரதியார் – பாரத தேசம் கவிதை : எப்படியெல்லாம் கனவு கண்டிருக்கிறார் பாரதி

வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் – அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம்.

Read more

பணக்காரத் தந்தை ஏழைத் தந்தை | Rich Dad Poor Dad Book Download

பணம் பற்றி தனக்கு கிடைத்த இரண்டு தந்தைகளின் அறிவுரைகளை தொகுத்து வழங்கி இருக்கிறார் ராபர்ட் கியோஸாகி. பணம் பற்றிய ஆர்வம் இருக்கிறவர்கள் ஒருமுறையேனும் படிக்க வேண்டிய புத்தகம்

Read more

செண்பக வாசனை – கீர்த்தியின் புத்தகம் – அழகான நாவல்

அழகிய மாலைப்பொழுதினில் ஒரு கப் டீயுடன் சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு படிக்கவேண்டிய அழகிய 14 கதைகளை கொண்டிருக்கின்ற எழுத்தாளர் கீர்த்தி அவர்களின் செண்பக வாசனை புத்தகம் பற்றிய சிறு அறிமுகம் . கற்பனை பாத்திரங்களைக்கொண்டு மக்களுக்கான கதைகளை படைப்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என குறிப்பிடும் ஆசிரியர் நமது வீட்டிற்கு அருகே இருக்கும் நபர்களைப்போன்றே கதாபாத்திரங்களை வடிவமைத்து இருக்கிறார் .

Read more

மறைந்துபோன தமிழர் பண்பாடுகள் | Tamil Book Download

உலகின் மூத்த இனம் தமிழ் இனம் என்ற பெருமையை பெற்றவர்கள் நாம். அப்படி நினைப்போருக்கு பல தகவல்களை ஆதாரப்பூர்வமாக மறைந்துபோன தமிழர் பண்பாடுகள் எனும் புத்தகத்தில் ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார்

Read more

தமிழாற்றுப்படை நூல் – வைரமுத்து | Thamizhatrupadai Book

“3000 ஆண்டுத் தமிழை 360 பக்கங்களில் சொல்லிச் செல்லும் ஆழ்ந்த ஆய்வுக்கட்டுரைத் தொகுப்புநூல். தமிழுள்ளவரை நிலைபெறும் என்று சான்றோர் சான்றளித்த நூல்.” தொல்காப்பியர், கம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், உ.வே.சா, பாரதியார், மறைமலை அடிகளார், ஒவ்வையார், பெரியார் என பல ஆளுமைகளின் சிறப்புகள் குறித்து பல்வேறு தகவல்களை திரட்டி அதனை கட்டுரையாக கொடுத்திருக்கிறார்

Read more