இன்று நீல நிலா தோன்றுகிறது (blue moon ) – மிஸ் செஞ்சுறாதிங்க

இன்று (ஜனவரி 31 ) மாலை நீல நிலா வானில் தோன்றி மக்களுக்கு அற்புத காட்சியை அளிக்க இருக்கின்றது . காதலர்கள் தங்கள் ஜோடியுடன் கொண்டாட வேண்டிய நேரம் இது (சும்மா ).

 

வான் ஆராய்ச்சி மையமான நாசா கூறுகையில் , இந்த மாதத்தில் இரண்டாவதாக தோன்றும் முழு நிலா ,நீல நிலா . பல இடங்களில் இந்த அற்புதத்தை கண்டுகளிக்க ஏற்பாடுகள் சில நிறுவனங்களால் ஏற்பாடு செய்யபட்டு இருக்கின்றது .

நீல நிலா (ப்ளூ Moon ) சிறப்புகள் :

150 வருடங்களில் முதல் முறையாக ஜனவரி 31 அன்று தோன்றுகிறது .
கடைசியாக மார்ச் 31 1886 இல் தோன்றியது .

பூமிக்கு மிக அருகிலே வர இருக்கின்றது .

வழக்கத்திற்கு மாறாக 14 சதவிகிதம் அளவிற்கு அதிக பிரகாசமாக காட்சி அளிக்கும் .

இந்த மாதத்தில் தோன்றும் இரண்டாவது முழு நிலவு .

ப்ளூ மூன் பிளட் மூன் (Blue and blood Moon ) :

நிலவு தனது சுற்றுவட்டப்பாதையில் சுற்றிவரும்போது சிகப்பு நிறம் கொண்டதாக மாறும் . அதனைத்தான் Blood Moon என அழைக்கிறார்கள் .

இந்தியாவில் நீல நிலவை மாலை 6 மணி முதல் 9 மணி வரை காணலாம் . இது ஒவ்வொரு இடத்திற்கும் மாறலாம் .

தொடர் வேலைகளுக்கு கொஞ்சம் இடைவெளிவிட்டு இயற்கை தந்த நீல நிலவின் அழகினை கொஞ்சம் ரசியுங்கள் .

பகிருங்கள் .

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *