வங்கி லாக்கர் திருடு போனால் வங்கி பொறுப்பல்ல – தெரியுமா?
வங்கி லாக்கர்-க்குள் நகைகளையும் பணத்தையும் முக்கிய ஆவணங்களையும் வைத்துவிட்டோம் இனி பாதுகாப்பு கவலை இல்லை என நிம்மதியாக வாழ்பவரா நீங்கள் …இனி அவ்வாறு நிம்மதியாக இருக்க முடியாது .
வங்கிக் லாக்கரில் வைத்திருக்கும் மதிப்புமிக்க பத்திரங்கள் பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருப்பதாக பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள், பாதுகாப்பகத்தான் இருக்கும். அதில் சந்தேகமில்லை. ஒருவேளை திருடு போய்விட்டால்?
வங்கி தானே பொறுப்பு அப்படியென்று எண்ணுபவரா நீங்கள்? அந்த எண்ணத்தை விட்டு விடுங்கள்
வங்கி லாக்கர் பாதுகாப்பானதா?
ஒரு வீட்டில் அதிகப்படியான நகை திருடுபோகும்போது வழக்கமாக நாம் சொல்லுவது “இவ்வளவு பண நகையை வீட்டில் வைத்திருக்கலாமா? பேங்க் லாக்கரில் வைத்திருந்தால் பாதுகாப்பாக இருந்திருக்குமே” என்பது தான்.
ஆனால் இப்போதோ வங்கி லாக்கர் கூட பாதுகாப்பானதாக இருப்பதில்லை. அந்தளவுக்கு நம் திருடர்களின் திறமை அதிகரித்துவிட்டது. ஆகையால் வங்கி லாக்கர் கூட இந்த காலத்தில் பாதுகாப்பானது என 100 சதவீதம் சொல்லிவிட முடியாது.
ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI ) அறிவிப்பு :
இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI ) மற்றும் 19 PSU வங்கிகளும் ஒரு தகவலை வெளியிட்டன. அதன்படி வங்கி லாக்கரில் வைக்கப்படும் எந்த ஒரு பொருளுக்கும் ஆவணத்திற்கும் பாதிப்பு அல்லது திருடப்பட்டுவிட்டால் அதற்க்கு வங்கி பொறுப்பேற்காது. அதற்காக எந்த தொகையும் உங்களுக்கு அளிக்கப்படமாட்டாது.
“The Bank shall not be responsible or liable for any loss or deterioration of or damage to the contents of the Locker whether caused by rain, fire, flood, earthquake, lightening, civil commotion, war, riot or any other cause/s not in the control of the Bank and shall also not be liable or responsible for any loss, sustained by the Hirer/s by leaving any articles outside the Locker.” [Copied]
அதன்படி இயற்கை சீற்றங்களினாலோ அல்லது போர் போன்ற வங்கியால் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் நடக்கும் இழப்புகளுக்கு வங்கி இழப்பீடு தராது.
கட்டணம் எவ்வளவு?
வங்கி லாக்கர் மூலமாக பொருட்களையோ அல்லது முக்கியமான ஆவணங்களையோ வைக்க குறைந்தபட்சம் ரூ 1000 இல் ஆரம்பித்து ரூ 10,000 வரை ஆண்டுக்கு வசூலிக்கின்றன வங்கிகள். ஆனால் அதற்க்கு பாதிப்பு ஏற்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல என ஒதுங்கி கொள்கின்றன.
பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் :
வங்கிகள் உள்ளிட்ட எவையுமே தாங்கள் சொல்லாததை செய்வதில்லை. அவர்கள் செய்யும் செய்யப்போகும் அனைத்தையுமே குறிப்பிட்டு அந்த படிவத்தில் நமது கையெழுத்தை வாங்குவார்கள். இரண்டு மூன்று பக்கமிருக்கிறது என்று நாமும் படிக்காமல் கையெழுத்து போட்டு விடுகிறோம். அது மிக தவறு.
ஆகையால் விண்ணப்ப படிவத்தை முழுவதுமாக படித்து உங்களுக்கு சந்தேகம் குறை எதுவும் இல்லாதபட்சத்தில் கையெழுத்திட்டு வங்கி லாக்கர் வாங்கிடுங்கள்.
அந்த வங்கியின் பாதுகாப்பு செயல்பாடுகள் குறித்தும் நம்பகத்தன்மை குறித்தும் விசாரித்து முடிவெடுங்கள் .
விலையுயர்ந்த பொருள்களை வைக்கப்போகிறீர்கள் என்றால் அதற்க்கு இன்சூரன்ஸ் தனியாக போட்டுக்கொள்ளுங்கள்.
வங்கி லாக்கர் திறக்கப்படும் போதும் மூடப்படும்போதும் வங்கி ஊழியரோ யாரோ அருகில் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
பாமரன் கருத்து & அருண்
reference :
http://www.thehindubusinessline.com/money-and-banking/banks-have-no-liability-for-loss-of-valuables-in-lockers-rbi/article9736750.ece