கறைபடியா கரங்கள் கவிதை | Kamarajar Kavithai
கர்மவீரர் காமராசர் அவர்கள் அனைத்து தலைமுறையினரும் போற்றும் ஒரு தலைவராக இருந்து வருகிறார். நல்ல அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்றால் இன்றளவும் அவரையே அனைவரும் உதாரணமாக கூறுகிறார்கள். காமராஜர் ஆட்சி தருவோம் என மாற்றுக்கட்சியினர் கூட கூறுவதற்கு காரணம் அவர் தந்த தூய்மையான மக்களாட்சி தான். அவரது பணிகளையும் அவரது கறைபடியா கரங்கள் பற்றியும் இங்கே “கறைபடியா கரங்கள் கவிதை” என்ற தலைப்பில் சிறு கவிதை ஒன்றை எழுதி இருக்கிறேன். படியுங்கள் மகிழுங்கள்.
கறைபடியா கரங்கள் கவிதை
கறைபடியா கரங்கள்
கொண்டவர் யாரென்று
யாரிடம் கேட்டாலும்
சற்றும் யோசிக்காமல்
ஓர் பெயர் சொல்லும்
“காமராசர்” என்று…
பல பத்தாண்டுகள்
கடந்தும் கூட உம்
கறைபடியா கரங்களுக்கு
போட்டியாக யாருமில்லை
உமது வேட்டி துவண்டிருந்தாலும்
தமிழ் மக்களின் வாழ்வு பொழிவுற
கல்விக்கண் திறந்த மாமனிதர்
அறிவுப்பசிக்கு பள்ளிகள்
வயிற்றுப்பசிக்கு மதிய உணவு
தந்த பெருவள்ளல்
இலட்சங்களை விரும்பாது
இலட்சியங்களை விரும்பியே
வாழ்ந்த இரும்பு மனிதர்
தனக்கென வாரிசு இல்லாமல்
தமிழ் பிள்ளைகள் அனைத்தையும்
வாரிசுகளாய் ஏற்றவர்
நல்லாட்சிக்கு உதாரணமாய்
இன்றும் என்றும் சொல்லப்படும்
ஓர் ஆட்சியை தந்தவர்
கறைபடியா கரங்களுக்கு சொந்தக்காரர்
மனிதருள் அவரொரு மாணிக்கம்
அவரே எம் தலைவர் காமராசர்!
மேலும் பல கவிதைகள் படிக்க இங்கே கிளிக் செய்திடவும்