facebook மார்க்கோட 2018 ஆம் ஆண்டின் லட்சியம் என்ன தெரியுமா ?

மார்க் ஸுகர்பேர்க் , அவ்வளவாக இவரை பற்றிய செய்திகள் இணையத்தில் உலவாவிட்டாலும் இன்டர்நெட் பயன்படுத்துகிற பெரும்பாலானவர்கள் பயன்படுத்துகின்ற facebook நிறுவனத்தின் தலைவர் இவர் தான் .

ஒவ்வொரு ஆண்டும் தனது இலட்சியத்தை வெளிப்படையாக அறிவித்துவிடும் பழக்கம் இவருக்கு உண்டு .

2014 ஆவது ஆண்டில் மாண்டரின் (mandarin ) மொழியை கற்றுக்கொண்டார் . 2015 ஆம் ஆண்டில் 25 புத்தகங்களை படித்தார் . 2016 இல் தன் வீட்டிற்கு சுயமாக AI அசிஸ்டன்ட் ஒன்றினை வடிவமைத்தார் . 2017 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் வசிக்கும் மக்களுடன் பேசவும் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் விரும்பினார் .

2018 இன் உறுதிமொழி என்ன தெரியுமா ?

இந்த ஆண்டு அவருடைய சொந்த நலனுக்காக எந்த உறுதிமொழியையும் எடுத்துக்கொள்ளவில்லை . மாறாக இந்தமுறை அவரின் உறுதிமொழி facebook பற்றியது .

சமூக வலைத்தளங்கள் பல முன்னேற்றங்களை அடைந்திருந்தாலும் இன்னமும் போலியான செய்திகளை பரப்புவதை தடுப்பதிலும், வன்முறைகளை தூண்டும் செய்திகளை பரப்புவதையும் பாலியல் செய்திகளை பரப்புவதை தடுப்பதையும் முழுமையாக தடுக்க முடியவில்லை .

உதாரணமாக அமெரிக்கா அதிபர் தேர்தலில் ரஸ்யாவின் ஆதிக்கத்தால் அதிகளவு பரப்புரைகள் செய்யப்பட்டது , தீவிரவாத குழுக்களுக்கு ஆட்களை சேகரிப்பது என பல குற்றங்களை தடுக்க தவறிவிட்டன சமூக வலைதளங்கள் .

எங்கோ இருக்கும் நண்பர்களை கண்டுபிடிக்க உதவிய முகப்புத்தகத்தின் வழியாகவே பல வன்முறை கருத்துக்கள் பகிரப்பட்டு அதனால் சமூகத்தில் வெறுப்புணர்வு பரப்பப்படுவதையும் அதனால் பிரிவுகள் ஏற்படுவதையும் மார்க் விரும்பவில்லை .

ஆகையால் தான் இந்த ஆண்டு 2018 இல் தவறான கருத்துக்கள் முகபுத்தகத்தின் வழியாக பரப்பப்படுவதை தடுப்பதற்காக உழைப்பதே என் லட்சியம் என உறுதிமொழி ஏற்றுள்ளார் மார்க் .

இதற்காக பல படிப்பினைகளை facebook நிறுவனம் தொடங்கிவிட்டது . அதனை பயன்படுத்தும் நம்மை கொண்டும் செய்ய நினைக்கிறது facebook .

facebook நம்பகத்தனமான செய்திகளை பரப்பிடவே விரும்புகிறது என்பது அதன் நோக்கமாக இருந்தாலும் செய்திகளை பதிவேற்றும் நம் கைகளில் தான் அது இருக்கின்றது .

நாமும் மார்க் க்கு உதவலாம் ?

நீங்கள் அன்றாடம் பார்க்கும் facebook பதிவுகளில் வன்முறையை தூண்டக்கூடியதோ அல்லது பிரிவினையை ஊக்குவிப்பதோ பெண்களுக்கு எதிரானதோ எதுவாக இருந்தாலும் அது போன்ற போஸ்ட் களை facebook க்கிற்கு தெரிய படுத்துங்கள் .

அவர்கள் அதனை சரிபார்த்து தவறானது என தெரிந்தால் அதனை நீக்கிவிடுவார்கள் . அந்த நபரையும் பிளாக் செய்துகொள்ளலாம் .

நீங்களும் ஏதாவது ஒரு உறுதிமொழியை எடுத்துக்கொள்ளுங்கள் .

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *