உங்களுக்கான இணையதளத்தை பதிவு செய்வது எப்படி ?

உங்களுக்கான இணையதளத்தை பதிவு செய்வது எப்படி என்பதனை காண்போம்

இணையதளம் என்றால் என்ன ?

இணையதளம் என்பது உங்களுக்கான தனிப்பட்ட இணைய முகவரி .
நீங்கள் உங்களது தகவல்களை சேகரித்து வைக்க வேண்டுமெனில் அதற்க்கு இடம் வேண்டுமல்லவா அதுதான் ஹோஸ்டிங் . உங்களுடைய சொந்த கம்ப்யூட்டரையோ அல்லது பிறர் வழங்கும் இடத்தையோ உங்களது தகவல்களை சேகரித்து வைக்க முடியும் .
அதனை இன்டர்நெட் வசதி கொண்ட எவரும் திறந்து பார்க்க முடியும் .

மேலும் இணையதளம் குறித்து படிக்க

இணையதள முகவரியை பதிவு செய்வது எப்படி ?

இண்டெர்நெட் தான் இன்றைய உலகினை ஆள்கின்றன . ஆகையால் இன்று பல நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு வாய்ப்புகளை வழங்குகின்றன .

கீழே கொடுக்கப்பட்டுள்ள சில இணையத்தளங்களுக்குள் சென்று உங்களுக்கான டொமைனை பதிவு செய்யலாம் .

https://in.godaddy.com/

https://www.bigrock.in

https://www.mydomain.com/

Godaddy யில் பதிவு செய்வது எப்படி ?

அனைத்திலும் ஒரே முறைதான் என்பதால் Godaddy இல் எவ்வாறு பதிவு செய்வது என்பதனை விளக்குகிறேன் .

https://in.godaddy.com

இந்த முகவரிக்கு செல்லுங்கள்

search இல் நீங்கள் விரும்பும் டொமைனை பதிவிட்டு தேடுங்கள் .

நீங்கள் விரும்பிய டொமைன் வேறு எவராவது ஏற்கனவே பதிவு செய்திருந்தால் உங்களால் தேர்ந்தேடுக்க முடியாது (site taken ) என வரும் .

நீங்கள் வேறு ஒன்றினை தேர்ந்தெடுக்க வேண்டும் .

பிறகு ஹோஸ்டிங் சேவை , ஈமெயில் முகவரிக்கான சேவை என பல சேவைகள் உங்களுக்கு காட்டப்படும் . நீங்கள் விரும்பினால் அதனை தேர்ந்தெடுக்கலாம் .

இல்லையேல் “No Thanks ” என்பதை கிளிக் செய்து உங்கள் டொமைனை ரெஜிஸ்டர் செய்யுங்கள் .

எத்தனை ஆண்டுகள் வேண்டுமோ அதனை பதிவு செய்து எவ்வளவு தொகை வருகிறதென்பதை தெரிந்து கொள்ளலாம் .

உங்களது டொமைன் ரெஜிஸ்டர் செய்து முடிக்க நீங்கள் கண்டிப்பாக உங்களது கணக்கினை தொடங்கியாக வேண்டும் .

ஏற்கனவே கணக்கு இருப்பின் ” Sign in ” செய்யுங்கள் ..இல்லையேல் ” Register ” செலக்ட் செய்து உங்களது தகவல்களை பதிவு செய்து கணக்கினை தொடங்குங்கள் .

இந்த தகவல்களை கொடுத்தவுடன் “Create Account ” ஐ கிளிக் செய்யவும் .

பிறகு உள்நுழைந்து உங்களது பணத்தினை செலுத்தி டொமைனை ரெஜிஸ்டர் செய்து முடியுங்கள் .

குறிப்புகள் : நீங்கள் தற்போது இணைய முகவரியை மட்டுமே வாங்கியுள்ளீர்கள் . இதன்பிறகு ஹோஸ்டிங் இடத்தினை வாங்கினால் மட்டுமே உங்களது இணையதளத்தை செயல்பட பதிவுகளை சேகரித்து வைக்க முடியும் .

ஹோஸ்டிங் இடத்தினை வாங்குவது எப்படியென்பதை அடுத்த பதிவில் பார்ப்போமே .

உங்களால் இலவசமாக இணையத்தளத்தினை திறந்து அதனை பயன்படுத்தவும் முடியும் . அது எப்படி என தெரிந்துகொள்ள வேண்டுமா ? கமெண்ட் செய்யுங்கள் .

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *