ஒலிம்பிக்கில் பதக்கம் பெற இந்தியா தத்தளிப்பது ஏன்? உள்ளார்ந்த அலசல்

இந்தியா 1900 இல் இருந்து இதுவரைக்கும் இந்தியா 9 தங்கப்பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது. இறுதியாக, 1964 இல் ஒன்று, 1980 இல் ஒன்று, 2008 இல் ஒன்று  இவை தான் அண்மையில் நாம்  தங்கப்பதக்கங்கள். பொருளாதாரத்தில் பின்தங்கிய, போர் பதற்றத்திலேயே இருக்கும் நாடுகள் கூட சில தங்கப்பதக்கங்களை பெற்று நமக்கு முன்னே இருக்கும் போது இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் பெற தத்தளிப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதற்கான பதிலை நாம் விரிவாக பார்க்கலாம். 

 

Games Sports Men Women Total Change Gold Gold Silver Silver Bronze Bronze Total Change
1900 1 1 0 1 N/A 0 2 0 2 N/A
1920 2 6 0 6 +5 0 0 0 0 −2
1924 2 12 2 14 +8 0 0 0 0 0
1928 2 21 0 21 +7 1 0 0 1 +1
1932 3 20 0 20 −1 1 0 0 1 0
1936 4 27 0 27 +7 1 0 0 1 0
1948 10 79 0 79 +52 1 0 0 1 0
1952 11 60 4 64 −15 1 0 1 2 +1
1956 8 58 1 59 −5 1 0 0 1 −1
1960 6 45 0 45 −14 0 1 0 1 0
1964 8 52 1 53 +8 1 0 0 1 0
1968 5 25 0 25 −28 0 0 1 1 0
1972 7 40 1 41 +16 0 0 1 1 0
1976 2 20 0 20 −21 0 0 0 0 −1
1980 4 58 18 76 +56 1 0 0 1 +1
1984 5 38 10 48 −28 0 0 0 0 −1
1988 10 39 7 46 −2 0 0 0 0 0
1992 12 44 9 53 +7 0 0 0 0 0
1996 13 45 4 49 −4 0 0 1 1 +1
2000 13 46 19 65 +16 0 0 1 1 0
2004 14 48 25 73 +8 0 1 0 1 0
2008 12 31 25 56 −17 1 0 2 3 +2
2012 13 60 23 83 +27 0 2 4 6 +3
2016 15 63 54 117 +34 0 1 1 2 −4
2020 18 68 52 120 +3 0 1 0 1 TBA

 

120 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்ட நாட்டில் இருந்து ஒலிம்பிக்கில் ஒரு தங்க பதக்கம் பெற ஒரு வீரரைக்கூட அனுப்ப முடியாத சூழல் தான் தற்போது நிலவுகிறது. டோக்கியோவில் நடைபெற்றுவரும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட பேட்மிட்டன் வீராங்கனை சிந்துவின் அரையிறுதி தோல்விக்கு பின்னர் தங்கம் இம்முறை கிடைப்பதும் அரிதான விசயமாக மாறிப்போய் விட்டது. ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெற்று முன்னிலை வகிக்கும் நாடுகளை ஆராய்ந்து சில முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 https://youtu.be/DhrVFDgmGCg

1. பொருளாதார தொடர்பு

 

ஒலிம்பிக் போட்டியில் பதக்க பட்டியலில் முன்னிலை வகிக்கும் நாடுகளுக்கும் அவற்றின் பொருளாதார சக்திக்கும் இடையே தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் வெல்ல வேண்டுமானால் அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை அந்த நாடுகள் கொண்டிருக்க வேண்டும். அதற்கென செலவுகளை செய்திட வேண்டும். இந்த அடிப்படையில் தான் பொருளாதாரத்திற்கும் பதக்க எண்ணிக்கைக்கும் இடையே தொடர்பு இருக்கிறது என சொல்லப்படுகிறது.

பதக்க பட்டியலில் முதன்மையான இடங்களை எப்போதும் பிடிக்கும் சீனா, அமெரிக்கா , ஜப்பான் ஆகியவையே இதற்கு சான்று. 

2. எவ்வளவு செலவு செய்கிறோம்

 

பொருளாதாரத் தொடர்பை படித்துவிட்டு அப்படியானால் இந்தியாவும் நல்ல பொருளாதார நிலையில் தானே இருக்கிறது ஏன் பதக்கபட்டியலில் 50 ஆம் இடத்திற்கும் கீழே இருக்கிறது என நீங்கள் கேட்கலாம். நம்மிடம் எவ்வளவு பொருளாதார வசதி இருக்கிறது என்பது முக்கியம் அல்ல. நாம் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வீரர்களை தயார்படுத்த, ஆடுகளங்களை அமைக்க எவ்வளவு செலவு செய்கிறோம் என்பது தான் முக்கியம். இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதற்காக செய்கின்ற செலவு என்பது குறைவு.

 

3. குறிப்பிட்ட போட்டியில் அக்கறை இல்லாமை

 

ஹங்கேரி, ஸ்லோவேனியா, செர்பியா என்பன போன்ற சிறிய நாடுகள் கூட பதக்க பட்டியலில் நமக்கு முன்னே இருக்கின்றன. இதற்கு முக்கியக்காரணம், இந்தியாவில் இருந்து பெரும்பான்மையான ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள வீரர் வீராங்கனைகள் ஒவ்வொரு முறையும் அனுப்பப்படுகிறார்கள். ஆனால், ஒருவரைக்கூட இந்தப்போட்டியில் இவர் தங்கம் வெல்வார் என அனுப்புவது இல்லை. ஆனால் சிறிய நாடுகளோ குறிப்பிட்ட சில போட்டிகளில் மட்டும் அதீத அக்கறை செலுத்தி அதிலே தங்கப்பதக்கம் வெல்வதற்காக தங்களது வீரர்களை தயார்படுத்துகிறது. அந்நாடுகளின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு அவை குறிப்பிட்ட சில போட்டிகளில் மட்டும் அக்கறை செலுத்துகின்றன . 

4. ஊட்டச்சத்து குறைபாடு

 

இந்தியாவில் இன்னமும் பசியோடு தூங்கப்போகும் குடும்பங்கள் உண்டு. அதேபோல குறிப்பிட்ட சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டோடு வளர்கின்றன. ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் பங்கேற்று வெல்ல வேண்டுமானால் உடல் தகுதி என்பது மிகவும் அவசியம். இந்தியா இந்த விசயத்தில் அக்கறை செலுத்திட வேண்டும்.

5. போதிய ஆர்வமின்மை

மேலே சொன்ன அனைத்தையும் விட போதிய ஆர்வம் இன்மை தான் நாம் பதக்கம் வெல்ல தடையாக இருக்கிறது. இந்தியர்களுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றாலும் வெல்லாவிட்டாலும் பெரிய விசயமாக இல்லை.. பிவி சிந்து அரை இறுதியில் தோற்றபிறகு அதற்காக வருந்தியவர்களைவிடவும் வெண்கலம் வெல்ல வாழ்த்தியவர்கள் தான் அதிகம். வென்றால் ஒரு போஸ்ட், தோற்றால்ஒரு போஸ்ட் அவ்வளவு தான். கிரிக்கெட்டில் இந்தியா தோற்கும் போது தேசத்தின் தோல்வியாக கருதப்படுகிறது ஆனால் ஒலிம்பிக்கில் இந்தியா 50 ஆம் இடத்திற்கும் கீழே இருக்கும் போது அந்த எண்ணம் இல்லை.

பொருளாதார வளர்ச்சி மட்டுமே வளர்ச்சி அல்ல, ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் முதலிடம் பிடிப்பதும் வளர்ச்சியில் ஓர் அங்கம் தான் என்பதை இந்தியா உணர்ந்து அடுத்த ஒலிம்பிக்கில் இந்தப்பிரிவில் இத்தனை தங்கம் வாங்கிட வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்டால் நாமும் பதக்கபட்டியலில் முன்னேறுவோம். 

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp



எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *