கொரோனவை விடவும் ஆபத்தானது இதுதான், அறிஞர்கள் எச்சரிக்கை

கொரோனா கடந்த 7 மாதங்களில் ஒட்டுமொத்தமாகவே சில மில்லியன் மக்களைத்தான் அழித்தது. ஆனால் சில நிமிடங்களில் பல பில்லியன் கணக்கான மக்களைக் கொல்லும் பேராயுதங்கள் பூமியில் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
ஹிரோஷிமா தினம்

 

இப்போது வாழும் தலைமுறையிடம் நீங்கள் சந்தித்ததிலேயே ஆபத்தான விசயம் எதுவென்று கேட்டால் ‘கொரோனா’ என்று சொல்லுவார்கள். மில்லியன் கணக்கில் மக்கள் இறந்திருக்கிறார்கள், உலகம் அனைத்துமே சில மாதங்களுக்கு முடங்கிப்போய் இருந்தது, கணக்கற்றோர் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் இதனைவிடவெல்லாம் ஆபத்தான விசயமொன்று இருக்கிறது என எச்சரிக்கிறார்கள் அறிஞர்கள், அறிவியலாளர்கள். அது வேறொன்றும் இல்லை ‘நியூக்கிளியர் ஆயுதங்கள்’ தான். ஒரு குண்டை வீசி சில நொடிகளில் மில்லியன் கணக்கான மக்களை கொன்றழித்துவிட முடியும், குண்டு விழுந்த இடமும் பல தலைமுறைகளுக்கு பயனற்ற இடமாக மாறிப்போகும் அபாயமும் உண்டு.

இப்போது சொல்லுங்கள், உலகம் முழுமைக்கும் மில்லியன் மக்களை கொன்றழித்த கொரோனா ஆபத்தானதா அல்லது சில நொடிகளில் பல மில்லியன் மக்களை அழிக்கவல்ல நியூக்கிளியர் ஆயுதங்கள் ஆபத்தானதா?

 

15000 நியூக்ளியர் அணுகுண்டுகள் தயாராக இருக்கின்றன

 

தற்போது அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, இஸ்ரேல், பாகிஸ்தான், இந்தியா, வடகொரியா ஆகிய நாடுகளிடம் நியூக்கிளியர் அணு ஆயுதங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. தோராயமாக, இப்போதைக்கு பூமியில் 15000 நியூக்கிளியர் அணு ஆயுதங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் இந்த எண்ணிக்கை கூடலாம். இதில் அதிகபட்சமாக அணு ஆயுதங்களை கொண்ட நாடாக அமெரிக்கா மற்றும் ரஷ்யா இருக்கிறது. இரண்டு நாடுகளும் தலா 7000 அணு ஆயுதங்களை கொண்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 14,000 அணு ஆயுதங்கள் இந்த இரண்டு நாடுகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இவை இந்த பூமியை அழித்து ஒழித்துவிட போதுமானவை.

ஆயுத தயாரிப்பில் ஈடுபடும் ஒவ்வொரு நாடும் சொல்லிக்கொள்வது என்னவென்றால் ‘எங்கள் மக்களை பாதுகாக்கவே நாங்கள் ஆயுதங்களை வைத்திருக்கிறோம்’ என்பதுதான். ஆனால் எதார்த்தம் என்னவெனில் இந்த ஆயுதங்களால் உலக மக்கள் அனைவருக்குமே ஆபத்து என்பதுதான். அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், அமெரிக்க அதிபரால் யாருடைய ஒப்புதலை பெறாமலும் நியூக்கிளியர் அணு ஆயுத தாக்குதலை துவங்க முடியும். அமெரிக்க அதிபர் பதவிக்கு அவ்வளவு பெரிய சக்தி இருக்கிறது. ஆனால் இதுவும் ஆபத்தானது தானே.

அணு ஆயுதங்களை ஒழிக்கும் முயற்சியாக ஒரு ஒப்பந்தம் [Treaty on the Prohibition of Nuclear Weapons (TPNW)] உலக நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டி.பி.என்.டபிள்யூ என்பது அணு ஆயுதங்களை விரிவாக தடைசெய்யும் முதல் சட்டபூர்வமான சர்வதேச ஒப்பந்தமாகும். ஆனால் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த இதற்கு அதிக நாடுகளின் ஒப்புதல்கள் தேவை. தற்போது தான் ஹோண்டுராஸ் எனும் நாடு 50 வது நாடாக இணைந்திருக்கிறது. அணு ஆயுதம் இல்லாத நாடுகள் தற்போது இந்த ஒப்பந்தத்தில் இணைந்து வருகின்றன.

 
நியூக்ளியர் புட்பால்

 

ஆனால் அமெரிக்காவானது இந்த ஒப்பந்தத்தில் நாடுகள் இணைவதை மறைமுகமாக தடுத்து வருவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது. தங்களது மக்களை காப்பாற்றிடவே நாங்கள் இத்தகைய ஆயுதங்களை வைத்திருக்கிறோம் என்று சொல்லும் நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆயுதங்களை பராமரிக்கவே பல பில்லியன் கணக்கான மக்களின் பணத்தை செலவழிப்பதாக சொல்லப்படுகிறது.

நியூக்கிளியர் ஆயுதங்களுக்கு முன்னாள் கொரோனாவெல்லாம் ஒரு பொருட்டே இல்லை என்பது தான் சூழலியலார்களின் எச்சரிக்கையாக இருக்கிறது. மூன்றாவது உலகப்போர் என்ற ஒன்று ஆரம்பித்தால் அது வெகு நாட்களுக்கெல்லாம் நீடிக்காது. நாங்கள் முதலில் நியூக்கிளியர் ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம் என்று சொல்லுகிற ஒவ்வொரு நாடும் அப்போது அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டார்கள். சில நாட்களிலேயே பூமி அனைத்தும் சர்வநாசமாக மாறிப்போகும் அபாயம் நியூக்கிளியர் ஆயுதங்களால் இருக்கிறது என்ற எச்சரிக்கையை நம்மால் எளிதில் கடந்துவிட்டு போக முடியாது.

 

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp

ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதல்கள் நடந்தது எப்படி?
ஏன் நீங்கள் எப்போதும் பெரிதாக சிந்திக்க வேண்டும்?






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *