உருளைக்கிழங்கு பயிரிட்டதற்காக 4 கோடி இழப்பீடு கேட்கும் பெப்சி | Video| விவசாயிகள் vs பெப்சிகோ பிரச்சனை

விவசாயிகள் vs பெப்சிகோ பிரச்சனை என்ன?

தாங்கள் காப்புரிமை பெற்று வைத்திருக்கின்ற உருளைக்கிழங்கு [FC 5] வகையினை குஜராத்தை சேர்ந்த 9 விவசாயிகள் தங்களது அனுமதியின்றி பயிரிட்டு விற்பனை செய்துவருகின்றனர். இதனால் அவர்கள் எங்களுக்கு 4.2 கோடி ரூபாயினை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என குஜராத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது பெப்சி நிறுவனம். இதனை  விசாரித்த நீதிமன்றம் இந்தவகை உருளைக்கிழங்கினை செய்யவும் விற்பனை செய்யவும் இடைக்கால தடை விதித்துள்ளது.


காப்புரிமை சட்டம் சொல்வதென்ன?

Protection of Plant Variety and Farmers Right Act, 2001 இந்த காப்புரிமை சட்டத்தின்படி விதைகளுக்கான காப்புரிமையை ஒருவர் பெற்றுவிட்டால் அந்த விதையினை அவரது அனுமதி இன்றி வேறு எவரும் பயிர் செய்யக்கூடாது. இது இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம்.

 

லேஸ் (lays) செய்ய பயன்படுத்தப்படும் உருளைக்கிழங்கு வகையான [FC5] ஐ இந்த சட்டத்தின் கீழ் தான் பெப்சி நிறுவனம் பதிவு செய்திருக்கிறது. இதனை விவசாயிகள் மீறிவிட்டதாககூறிதான் வழக்கு தொடர்ந்து இருக்கிறது பெப்சி நிறுவனம்.


நீதிமன்றம் என்ன செய்யும்?

நீதிமன்றம் நிச்சயமாக அரசியல் சட்டவிதிகளின்படியே செயல்படும். பதிவு செய்யப்பட்டதில் வேறு தவறுகள் இல்லாதபட்சத்தில் நிச்சயமாக விவசாயிகளுக்கு எதிராகவே நீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்க வாய்ப்பு இருக்கிறது.


பெப்சி நிறுவனத்தின் சமாதான பேச்சு 

 

நிலத்தை உழுதிடும் விவசாயி
நிலத்தை உழுதிடும் விவசாயி

 

விவசாயிகளின் மீது வழக்கு தொடர்ந்த பெப்சி நிறுவனத்தின் மீது பொதுமக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இதனை சமூக வலைத்தளங்களில் காண முடிகிறது. பெப்சி நிறுவனத்தின் பொருள்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்பது போன்ற வேண்டுகோள்களும் விடுக்கப்படுகின்றன. இதனை கருத்தில் கொண்ட பெப்சி நிறுவனம் சமாதான பேச்சிற்கு அழைத்துள்ளது. அதன்படி விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த மற்றும் வைத்திருக்கக்கூடிய விதைகளை எங்களிடம் ஒப்படைத்து விட வேண்டும் அல்லது எங்களது கட்டுப்பாட்டில் இணைந்து கொண்டு இந்தவகை உருளைக்கிழங்கினை உற்பத்தி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.


மக்களுக்கான அரசாக செயலாற்றிட வேண்டும்

 

Potato Pepsi vs Farmers issue
Potato Pepsi vs Farmers issue

விவசாயிகளுக்கு விவசாயம் செய்யத்தான் தெரியும். உலகமயமாக்கல் குறித்தோ அல்லது காப்புரிமைகளின் ஆபத்து குறித்தோ விவசாயிகளுக்கு விழிப்புணர்வு இருக்கும் என சொல்லிவிட முடியாது. விவசாயத்தை அடிப்படையாக கொண்ட தேசத்தில் சட்டமியற்றுவதற்கு முன்பாக எதிர்காலத்தில் தன் நாட்டு மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்துமா என்பதனை சிந்தித்து சட்டமியற்றிட வேண்டும்.

Protection of Plant Variety and Farmers Right Act கம்பெனிகளுக்கு ஆதாயம் தரும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. மரபணு மாற்றப்பட்ட விதைகளை விவசாயத்திற்கு அனுமதித்து விட்டு பாரம்பரிய விதைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்ட பிறகு விவசாயிகள் முற்றிலும் கம்பெனிகளின் மரபணு மாற்றப்பட்ட விதைகளையே சார்ந்திருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது.

தற்போதுதான் இந்தியாவில் காப்புரிமை தொடர்பான பிரச்சனை எழுகிறது. இப்போதாவது அரசு விழித்துக்கொண்டு இந்தியாவில் விவசாயிகள் எந்த விதையினை கொண்டும் பயிர் செய்யலாம் அதற்க்கு எவரிடமும் அனுமதி வாங்க தேவை இல்லை என்பது போன்ற மாறுதல்களை செய்திட வேண்டும்.

 

எதிர்பார்ப்போம்!

 

தொடர்ந்து இதுபோன்ற செய்திகளை படிக்க Subscribe பண்ணுங்க, ஏற்கனவே செய்திருந்தால் ignore பண்ணுங்க


 

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *